காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Friday, October 3, 2008

ஆடுகள் நனைகிறதே என்று அழும் ஓநாய்கள்

”அப்பாவி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. தமிழகம் சார்பில் மத்திய அரசில் அங்கம்வகிக்கும் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் என்ன செய்கின்றனர். எது எதற்காகவோ அமைச்சரவையில் இருந்து விலகி விடுவோம் என எச்சரிக்கை விடுத்த முதல்வர், "இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் விலக நேரிடும்' என நீட்டி முழக்கிக் கூட ஏன் சொல்லவில்லை என்று தா.பாண்டியன் கேட்டுள்ளார்..

நல்லாத் தான் இருக்கு. 4 ஆண்டுகளாக மத்திய அரசில் கூட்டணி பலன்களை அனுபவிச்சிட்டு இருந்திங்களே.. அப்போ "இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் விலக நேரிடும்' என நீட்டி முழக்கியாவது எத்தனை முறை மிரட்டி இருக்கிறீர்கள். உப்புச் சப்பில்லாத எவ்வளவோ விஷயங்களுக்கு விலகிவிடுவோம்..விலகிவிடுவோம் என்று மிரட்டினீர்களே.. அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப் படுவதை கண்டித்தோ அல்லது அப்பாவி இலங்கத் தமிழர்கள் கொல்லப் படுவதை கண்டித்தோ எத்தனை முறை உண்ணாவிரதம் இருந்தீர்கள்? இப்போ மட்டும் என்ன திடீர் பாசம்? .. தேர்தல் நெருங்குவதால் தானே.. மக்களின் உணர்ச்சியைத் தூண்டி வோட்டு வாங்கினால் ஒழிய சாதனை அல்லது கொள்கை என்று சொல்லி ஓட்டு கேட்க உங்களிடம் என்ன எழவு இருக்கு?. அதற்காக ஏன் உங்களை மட்டும் உத்தமர்களாக காட்டிக் கொள்ள முயல்கிறீர்கள்?.

என்னவோ தமிழர்களுக்காத் தான் இவர்கள் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கின மாதிரி கூத்தடிக்கிறாங்க. தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப் படும் ஒரு நல்ல திட்டம் செயல் படக் கூடாது.. இந்தியாவும் சீனாவுக்கு இணையான அணுசக்தி அந்தஸ்தை அடைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தானே ஆதரவை விலக்கிக் கொண்டார்கள். அது கூட சீனாவுடனோ ரஷ்யாவுடனோ ஒப்பந்தம் போட்டிருந்தால் கவலை பட்டிருக்க மாட்டார்கள். அமெரிக்காவுடன் என்பது தான் இவர்கள் பிரச்சனை.

இவர்களுக்கு சுய நலனும் ஈகோவும் தான் முக்கியம். மக்கள் நலன் இல்லை. இவர்கள் எல்லாம் ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் கண்ணீர் வடிக்க முயற்சிக்கிறார்கள். கொடுமை.. :(

இதில் பெரிய கூத்து என்னன்னா.. வைக்கோவை அருகில் வைத்துக் கொண்டே தா. பாண்டியன் இவ்வாறு பேசி இருக்கிறார். வைகோ, மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து கழுத்தை பிடித்து தள்ளும் வரை நங்கூரம் பாய்ச்சி தங்கி இருந்தவர் தான். கருணாநிதிக்கும் இவர்களுக்கும் வந்த பிணக்கால் தான் அதிமுக கூட்டணிக்கு சென்றார். அதன் மூலம் மத்திய காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக்கப் பட்டார். இந்த உத்தமர் தமிழக மீனவர்களுக்காகவும் அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்காகவும் கூட்டணியை விட்டு விலகுவதாக நீட்டி முழக்கியாவது சொல்லி இருக்கிறார். சும்மா பாவ்லா கடிதங்கள் எழுதுவதோடு சரி.. இதை கருணாநிதியும் தான் செய்கிறார்.

இன்னுமாய்யா உங்கள எல்லாம் இந்த அபபாவி ஜங்கள் நம்புறாங்கன்னு நினைக்கிறிங்க.. அப்படி நம்பினா ஏன் இன்னும் கேரளாவையும் மேற்கு வங்கத்தையும் தாண்டி வளராம இருக்கிங்க? அங்க கூட மார்க்சிஸ்ட்டுகள் தானே வளர்ந்து நிக்கிறாங்க.. அவங்க புண்ணியத்துல தான உங்க ஜீவனமே நடக்குது.. எதுக்குய்யா இந்த விளம்பரம்..? :))

1 comments:

said...

//எதுக்குய்யா இந்த விளம்பரம்//
எல்லாம் ஓட்டுக்குதான்