காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Tuesday, January 20, 2009

நான்கு நாளில் முடிந்த நாடகம் - பாவம் திருமாவளவன்

திருமாவளவன் உண்ணாவிரதம் ஆரம்பித்த போதே ஒரு நாடகம் அறங்கேறுவது நன்றாக தெரிந்தது. கருணாநிதியின் சொல் தட்டாத( இப்போதைக்கு) பிள்ளை , அவர் அரசாங்கம் அனுமதி மறுத்தும் உண்ணாவிரதம் இருந்தார். இதில் வேடிக்கை என்ன்னா.. இந்த இணைய எழுத்தாளர்களின் அழிச்சாட்டியம் தான் தாங்கலை. சாகும்வரை இவர் உண்ணாவிரதம் அறிவித்திருக்கிறாராம். திலிபன் போல் இவரும் உயிரை விட்டுவிட்டால் ஈழத் தமிழருக்கு வேறு நாதியே கிடையாதாம். திருமாவின் ’சாகும்வரை’ உண்ணாவிரதத்துக்கு பாராட்டு என்ன.. கவிதை என்ன.. ஒரே அமர்க்களம்..அட அட.. இணையம் முழுதும் தோரணம் கட்டி தொங்க விட்டுவிட்டார்கள்.

அவர் என்னவோ தெளிவாகத் தான் இருந்தார். “ காலவரையற்ற உண்ணாவிரதம்” என்று தான் புத்திசாலித் தனமாக அறிவித்தாரே ஒழிய சாகும் வரை அல்ல. அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று எனக்கு ஆசையும் இல்லை. ஒடுக்கப் பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க துணிச்சலாக வந்தவர் என்ற முறையில் அவர் மீது மரியாதை இருந்தது. ஆனால் எப்போ அரசியவாதி ஆனாரோ, அன்றே அவருக்கும் பிறருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போயிற்று.

இந்தியத் தமிழர்களாவது பரவா இல்லை.. வெறும் வாயை மென்றுக் கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி. ஆகவே ஓவர் ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. ஈழத் தமிழர்களுக்கு என்ன ஆயிற்று?.. இவரை முதலில் திலிபனுடன் ஒப்பிட்டவர்களே ஈழத் தமிழர்கள் தான். எனக்குத் தெரிந்து சிங்களன் கூட திலிபனை இவ்ளோ கேவலப் படுத்தி இருக்க மாட்டான்.

கருணாநிதியிடம் ஆலோசிக்காமல் முடிவெடுத்தது மட்டுமின்றி அவர் அரசாங்கம் அனுமதி மறுத்தும் அதை மீறி உண்ணாவிரதம் இருந்த போதே அவர் எதோ நெருக்கடியில் இருக்கிறார் என்பது புரிந்தது. வேறு என்ன.. எல்லாருக்கும் தெரிந்தது தான். ஏற்கனவே ஒரு சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஏராளமனவர்கள் மாயாவதி கட்சிக்கு தாவி விட்டார்கள். அவர்களால் விசி தொண்டர்கள் தாக்கப் படும் சம்பவங்கள் கூட நடந்தது. விசி உறுப்பினர்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துவிட்ட நிலையில் , இன்றைய சூழலில் தமிழர்களின் உணர்வுப் பூர்வமான விவகாரமான ஈழத்தமிழர் பிரச்சனையை கையில் எடுத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. ஈழத் தமிழர்களின் துயரங்களை பயன்படுத்தி தனக்கு அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டார்.

இதை புரிந்தும் புரியாமலும் ஆளாளுக்கு திருமாவளவன் தான் ஈழத் தமிழரை காக்க பிறந்திட்ட ஒரே தலைவர் என்பது போல் ரொம்பவே படம் காட்டிவிட்டார்கள். அவர் காலவரையற்ற உண்ணாவிரதம் என்று புத்திசாலித் தனமாக அறிவித்ததைக் கூட சாகும்வரை உண்ணாவிரதம் என்று திருமாவளவனுக்கே தெரியாமல் மாற்றினார்கள். ஆனால் அவர் என்னவோ 4 நாள் முடிவில் கட்சி நிர்வாகிகளை ”அழைத்து” அவர்களுக்காக உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அவர் கடைசியாக சொன்னது “ எங்கள் கட்சி உறுப்பினர்களின் நலன் கருதி இந்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன்” என சொன்னார். கவனிக்க : கட்சியினர் நலனுக்காக.

ஆனால் அதற்குள் அவர் சீடர்கள் பேருந்துகளை கொளுத்தி சேதப் படுத்தி, இரவில் போக்குவரத்துகளை நிறுத்தி அபபாவி மக்களை சித்ரவதை செய்துக் கொண்டிருந்தார்கள். குண்டர் சட்டம் பாயும், கண்டதும் சுடுவோம் என்றேல்லாம் மிரட்டிய பின்னரே அடங்கினார்கள். கருணாநிதி சொல்லி இருப்பது போல் சட்டம் ஒழுங்கை சீர்குழைத்து இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசைக்கு துணை போகிறார்களோ என்று கூட எண்ணத் தோன்றியது.

இவர் உண்ணாவிரதம் அறிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை. அறிவித்த நோக்கத்தில் எதுவுமே நிறைவேறவில்லை. பின் ஏன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்றே புரியவில்லை. இது தான் இவர் நோக்கத்தை சந்தேகத்திற்குட்படுத்துகிறது. எது எப்படியோ.. ஆளாளுக்கு ஈழத் தமிழர்களை வைத்து அரசியல் லாபம் தேடுகிறார்கள் என்பது மட்டும் வேதனையான உண்மை.

இவர் குட்டு வெளிப்பட்ட கடுப்பில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறிக்கொண்டிருந்தார். காங்கிரசை புல் பூண்டு கூட இல்லாமல் அழிப்பதே இனி இவரின் லட்சியமாம். :))... இவருக்கு அரசியல் வாழ்க்கை குடுத்ததே காங்கிரஸ் இயக்கம் தான். மூப்பனார் தான் இவரை அரசியலுக்குக் கொண்டு வந்தார். இவர் காங்கிரஸ் கட்சியை அழிக்கப் போறாராம். என்ன காமெடி சார் இது? :))

இவரும் இவர் அமைப்பும் அரசியலில் தவழக் கூட முடியாத குழந்தைகள். இவர்களை அரவணைத்து அரசியல் வாழ்க்கை கொடுத்தது காங்கிரஸ். இந்த நன்றி உணர்ச்சி இல்லாமல் ஆளில்லாத சமயத்தில் சத்திய மூர்த்திபவன் வந்து படம் காட்டறது எல்லோரும் தூங்கிவிட்ட பின் அர்த்த சாமத்தில் வந்து ராஜிவ்காந்தி சிலைய அவமதிக்கிறது என்று பயங்கரமான் வீரர்களை வைத்துக் கொண்டு வாய்சவடால் விடுகிறார். சிலை அவமதிப்பு தொழிலை எப்போ தான் இவர் ஆளுங்க விடுவாங்களோ? ..யாரும் சீண்டாத போது இந்த படம் காட்டுகிறாரே இன்னும் இவருகெல்லாம் அரசியல் செல்வாக்கு இருந்தால் அவ்வளவு தான். தமிழகத்தை ரஜினியின் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

ஜெயலிதாவும் இவரை மதிக்கவில்லை.. இப்போது உண்ணாவிரத நாடகத்தால் கருணாநிதியும் கடுப்பாகி விட்டார். கங்கிரசுடனும் ஒட்டோ உறவோ இல்லையாம்( இவரிடம் காங்கிரஸ் எப்போ ஒட்டுக்கும் உறவுக்கும் கெஞ்சியது? :( ). கம்யூனினிஸ்டுகளும் தனியாக இல்லை. ராமதாஸ் இன்று கலைஞருக்கு நோகாமல் ஒரு அறிக்கை விட்டிருக்கும் போதே தெரிகிறது. அவரும் ஒரு முடிவோட தான் இருக்கிறார். ஹ்ம்ம்ம்.. பாவம் திருமாவளவன். இவ்வளவு சீக்கிறம் அரசியல் அனாதை ஆகிவிட்டாரே.

மிஸ்டர் திருமாவளவனாரே.. காங்கிரசை எல்லாம் பொறுமையாக அழிக்கலாம். எங்கும் ஓடிவிட மாட்டோம். மாயாவதி என்னும் முதலையின் வாயில் முழுவதுமாக சென்று விடாமல் இருக்கும் சில நூறு தொண்டர்களையாவது காப்பாற்ற முயற்சி பண்ணுங்க. அப்புறம் இது மாதிரி நாடகங்களுக்கு கயிறு கட்டக் கூட ஆளில்லாமல் அவஸ்தை பட வேண்டி இருக்கும்.

அதெப்படிங்ணா.. அம்பேத்கரின் 3 கொள்கைகளை வைத்து காங்கிரசை அழிப்பிங்களா?. இந்தியாவுக்கே சட்டங்கள் எழுதிக் கொடுத்து இன்றும் எல்லா மக்களாலும் பின் பற்றக் கூடியதாக இருக்கும் சட்ட மேதையை ஒரு சாதிக்கு உரியவராக்கி அவரையும் சாதி வட்டத்துக்குள் இழுத்துவிட்ட கேவலமான செயலை செய்யும் உங்களுக்கு அவர் பெயரை பயன்படுத்த என்ன யோக்கியதை இருக்கு?

ஒரு அமைப்பினர் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அதற்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையை அந்த அமைப்பு தான் தரனுமாம். தொண்டரடிபொடிகளை கொஞ்சம் அடக்க ஒடுக்கமா இருக்க சொல்லுங்க. ஆரம்பத்துல எப்டி இருந்த திருமாவளவன் இப்போ இப்டி ஆய்ட்டிங்களே.. :))