காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Thursday, April 30, 2009

மணிசங்கர் அய்யர் இணையதளம் - தலைப்பே கலக்குது போங்க.. :)

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான திரு,மனிஷங்கர் அய்யர் அவர்கள் தனக்கான அதிகாரப் பூர்வ இணையதளத்தை துவக்கி இருக்கிறார். அதில் அவர் வாழ்க்கை வரலாறு, பங்கேற்ற நிகழ்ச்சிகளின் விடியோ தொகுப்புகள், மயிலை தொகுதியில் நிறைவேற்றப் பட்ட நலத் திட்டங்கள், சாதனைகள் ஆகியவை மயிலாடுதுறை பாராளுமன்றத்துக்குட்பட்ட சட்ட மன்றத் தொகுதிகள் வாரியாகவும் பட்டியலிட்டிருக்கிறார். தொகுதியில் இருக்கும் அவர் அலுவலகங்களின் முகவரிகள், நிர்வாகிகள் முகவரிகள் , தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளையும் கொடுத்திருக்கிறார்.

தலைப்புக்கு ஐடியா குடுத்தது யாருங்க? :)). சும்மா கும்முன்னு இருக்குல்ல. மணி என்பது காங்கிரஸ் கொடி வண்ணத்திலும் சங்கர் என்பது திமுக கொடி வண்ணத்திலும் அய்யர் என்பது விசி கொடி வண்ணத்திலும் உறுவாக்கி இருக்கிறார்கள். மேலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் படமும் முகப்பில் போட்டிருக்கிறார்.

தமிழ் ஆங்கிலம் 2 மொழிகளிலும் தகவல்கள் இருக்கின்றன.

இணையதள முகவரி : http://www.manishankaraiyar.com/

ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்கய்யா...



In an exclusively interview with TIMES NOW, BJP president Rajnath Singh ducked the question of Narendra Modi being as the future Prime Minister। BJP leaders Arun Jaitley, Arun Shourie as well as former party president Venkaiya Naidu has vouched for Modi for the PM's post. However, when questioned by TIMES NOW correspondent in Lucknow, Rajnath Singh avoided the questioned and walked off.

--http://www.timesnow.tv/videoshow/4315016.cms

Monday, April 27, 2009

இலங்கையில் போர் நிறுத்தம்

தமிழக முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரத்தத்தால், இந்திய அரசின் அழுத்தத்தால் இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்திறுக்கிறது. கலைஞரின் உண்ணாவிரதம் வெற்றி. வாழ்த்துகள்.


இப்பகூட போர் நிறுத்தப் போறாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு கலைஞ்ர் உண்ணாவிரம் இருந்தாருன்னு சொன்னாலும் சொல்வீங்க.
நன்றி : புதுகை அப்துல்லா.

Saturday, April 25, 2009

My Life.. My Politics - பிரியங்கா காந்தி



பிரியங்கா காந்தி NDTVக்கு அளித்த பேட்டி.

Monday, April 13, 2009

நான் எப்போதும் காங்கிரஸ் விசுவாசி தான் - திருமா

சிதம்பரம்: நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியின் சிதம்பரம் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து வேட்பாளர் திருமாவளவனை அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,

காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனார் தான் என்னை 1999ல் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் கிடையாது.

இடையில் காங்கிரசுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் அரசியல் களத்தை தொடங்கிய நான் அந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யவில்லை. நான் நன்றி மறந்தவன் இல்லை.

அங்கு வழியில் சென்ற போராட்டக்காரர்களுக்கும், தோழர்களுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டு கைகலப்பில் முடிவுற்றது. அது திட்டமிட்ட செயல் அல்ல. சில தீய நிகழ்வுகள் தூக்கிப் பிடிக்கப்பட்டன. ஊடகங்கள் அதை பெரிதாக்கிவிட்டன.

நான் பழிவாங்கும் நோக்கம் உடையவன் அல்ல. இதுகுறித்து நாங்கள் தவறு செய்யவில்லை என சம்பவம் நடந்த அடுத்த அரை மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சுதர்சனம், தங்கபாலு, வாசன், சிதம்பரம் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.

சொன்ன சொல்லை காப்பாற்றுவேன்...

தற்போது இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கட்சியான திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறேன். மிகப்பெரிய கூட்டணியில் போட்டியிடுவது இதுதான் முதன்முறை.

அதிமுக அணியில் நான் வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் நான். உங்களுடன் தான் இருப்பேன் என கருணாநிதியிடம் கூறினேன். ஈழத்தமிழர் பிரச்னைக்காக யார் போராடினாலும் அவர்களுடன் நிற்பேன். அது வேறு. அரசியல் வேறு.

திருமாவளவன் திசை மாறிப் போய்விடுவான் என எதிர்பார்த்தார்கள். திமுக அணி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் வேறு அணிக்கு ஓடமாட்டோம் என்றேன். ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும் நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

எங்களுக்கு தேர்தல் அனுபவம் கிடையாது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் களப்பணியாற்ற வேண்டும் என்றார் திருமாவளவன்.


நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

Sunday, April 12, 2009

கலகக்காரர்களை வெளியேற்றுங்கள்

தேர்தல் வந்துவிட்டாலே கட்சியில் கலகக்காரர்கள் முளைத்துவிடுகிறார்கள். உட்கட்சித் தேர்தலாகட்டும் உள்ளாட்சி, சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தேர்தலாகட்டும். கட்சிக்காக சிறு துரும்பையும் கிள்ளிப் போடாதவர்களெல்லாம் டில்லிக்கு பைபாஸ் ரூட்டில் சென்றுவிடுகிறார்கள். பதவிக் கேட்கும் முன் கட்சிக்கும் கட்சியின் தொண்டர்களுக்கும் தாங்கள் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லை. பொதுக்கூட்டம், போராட்டம் என்று எதுவும் செய்து கட்சியை வளர்க்க முன்வருவதில்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட மட்டும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லை எனில் கலகம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இவர்களை எலலாம் கட்சியை விட்டே நீக்க வேண்டும்.

இந்தத் தேர்தலிலும் சிலர் அந்த வேலைகளை செய்வதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் எல்லாம் கட்சிக்காக இதுவரை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். கட்சியின் ”மேலிடத்தில் மட்டும்” தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு வார்டு மெம்பர் தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சீட் வாங்கிடுவாங்க. குறிப்பிட்ட சிலருக்கே எல்லா தேர்தல்களிலும் வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருந்தால் கட்சிக்காக பாடுபடும் மற்றவர்கள் எப்படி மேலும் கட்சி வளர்க்க பாடுபடுவார்கள்.

  • மாவட்டத் தலைவர் போன்ற பதவிகளில் உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது. அல்லது அவர்கள் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் வாய்ப்பு கேட்க வேண்டும். அப்போது தான் மக்கள் செல்வாக்கு பெற்ற மற்றொருவருக்கும் பொறுப்பு கிடைக்கும்.
  • ஏற்கனவே ஏதேனும் ஒரு தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் இருப்பவருக்கு அந்த பதவிக் காலம் முடியும் வரை வேறுத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.
  • உள்ளாட்சி அமைபுகளிலோ, சட்ட மன்றத்திலோ தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தற்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.
  • தற்போது உள்ளாட்சி அமைப்புகளிலோ சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ இருப்பவர்களின் தொகுதியில் அவர்களுக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு அடுத்த வாய்ப்பை வழங்க வேண்டும்.
  • அதில் தேறாதவர்களுக்கு அடுத்து வாய்ப்புகள் வழங்கக் கூடாது.
  • ஒரு முறை தோற்பவருக்கு குறைந்த பட்சம் அடுத்த ஒரு தேர்தலிலாவது போடியிட அனுமதிக்கக் கூடாது. வாக்கு வித்தியாசம் 25 சதவீதத்திற்குள் இருந்தால் மட்டும் அடுத்த தேர்தலில் வாய்ப்பளிக்கலாம்.
  • இப்போது தமிழகத்தில் இருக்கும் நம் கட்சியின் 10 எம்பிக்கள் 35 எம்எல்ஏக்கள் பெயர் எத்தனை கட்சித் தொண்டனுக்கு முழுதாகத் தெரியும்?. 10 சதவீதம் தொண்டனுக்குக் கூடத் தெரியாது. காரணம், கட்சியின் செயல்பாடு அந்த அளவுக்குத் தான் இருக்கிறது. நேற்று முளைத்த கட்சிகள் கூட பொதுக் கூட்டம், மாநாடு, பேரணிகள் என்று எப்போதும் தொண்டர்களை உற்சாமகாக வைத்திருக்கின்றன.
  • நூற்றாண்டு பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு, இருக்கும் தொண்டர்களை எல்லாம் திராவிடக் கட்சிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம்.
  • உடனடித் தேவை உட்கட்சித் தேர்தல். தொண்டர்களிடம் செல்வாக்கு இருப்பவர்களே கட்சிப் பதவிகளில் இருக்க வேண்டும்.
  • இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும். மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் பணி சிறப்பாகவே இருக்கின்றன. அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.
  • தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்போரிடம் அந்த தொகுதியில் கட்சியில் மாணவர், இளைஞர் அணி, சேவாதளம் நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார , மாவட்ட நிர்வாகிகளின் பெயர்களைக் கேட்க வேண்டும். அவர்களை எல்லாம் எப்போதாவது சந்தித்திருக்கிறார்களா என்பதை எல்லாம் ஆராய வேண்டும். அதன் பின்பே அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
இந்த பாராளுமன்றத் தேர்தலில், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கவே கூடாது. தற்போது எம்பியாக இருப்பவர்களிலும் தொகுதியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். இவைகள் எல்லாம் விரைவில் ராகுல்காந்திக்கு அனுப்பி வைக்கப் படும்.