காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Wednesday, November 19, 2008

அன்னை இந்திரா பிறந்ததினம்

இந்தியாவின் முதலும் கடைசியுமான ஒரே இரும்புப் பெண் அன்னை இந்திராகாந்தி அவர்களின் பிறந்தநாள் இன்று ( நவம்பர் 19 ) நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. அன்னை இந்திராவின் தலைமையை பெற்றதற்கு இந்தியா பெருமை கொள்கிறது. அன்னை இந்திராவின் பிறந்ததினம் தேசிய ஒருமைபாட்டு தினமாகவும் அனுசரிக்கப் படுகிறது.

Sunday, November 16, 2008

சகோதரர் கார்த்தி சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! - அவரது புதிய இணையதளம்

இன்று (16.11.2008 ) பிறந்தநாள் காணும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினரும் பல சமூக மற்றும் விளையாட்டு அமைப்புகளின் உறுப்பினருமான சகோதரர் கார்த்தி சிதம்பரத்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தன் பிறந்தநாளை முன்னிட்டு தன் பெயரில் ( karti.in ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புதிய இணையதளத்தையும் துவக்கி இருக்கிறார்.
இளைய சமுதாயமே ..
வா, மாறுதல் படைக்கலாம்
இன்றே..

என்ற முழக்கத்துடன் இனி அந்த இணைய தளம் செயல்படும். இதில் சகோதரர் கார்த்தி சிதம்பரத்தின் செயல்பாடுகள், ஊடகப் பேட்டிகள், அணு ஆயுத ஒப்பந்தம் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. வரும் காலத்தில் நேரடி அரட்டை வசதியின் மூலம் மற்றவர்களுடன் கலந்துரையாடும் வசதியும் அறிமுகப் படுத்தப்படும் என ( எனக்கு வந்த தனி மடலில் ) தெரிவிக்கப் பட்டுள்ளது. அவரது முயற்சிகளும் நோக்கங்களும் நல்ல முறையில் செயல்வடிவம் பெற வாழ்த்துவோம்.

Sunday, November 9, 2008

சிங்கத்தின் கேள்விக்கு பெரியார் “பக்தர்”களின் பதில் என்ன?

”திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் புலித்தலைவர் பிரபாகரன் படத்தை வைத்து பேட்டி கொடுக்கின்றனர். பெரியாரை நேசிப்பதாக கூறும் அவர்கள் பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்த இசையமைப்பாளர் படத்தில் இனி பணி செய்யாமல் இருப்பார்களா?” என மத்திய அமைச்சர் இளங்கோவன் அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
10.03.2007
'மாயக்கண்ணாடி' விழாவில் சீமான் பேசியபோது," வீட்டில் ஒரு சந்தன கட்டை துண்டு இருந்தால் தேவையானபோது எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். 50 வருஷம் ஆனாலும் சந்தனம் தன் குணத்தை மாற்றாமல் மணம் வீசும். இதுமாதிரிதான் இளையராஜாவின் இசையும்" என்று தமிழ் மணக்க பேசினார்.

இந்த அற்புத அடிவருடல் அல்லது ஜால்றா வாசித்தது, பெரியார் படம் வெளியிடத் தயாராய் இருந்த நேரம். இவரெல்லாம் பெரியார் பெயரை சொல்லி பிழைப்பு நடத்ததார்.. அடக் கொடுமையே..!