காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Tuesday, June 17, 2008

ஜுலையில் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

கோவையில் அடுத்த மாதம் 15-ந் தேதி காமராஜர் பிறந்தநாளை யொட்டி நடைபெறும் சைக்கிள் பேரணியை அகில இந் திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல் துவக்கி வைக்கிறார்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தின விழா வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி நாடெங்கும் கொண்டாடப் படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சேவா தளம் சார்பில், அதன் மாநில தலைவர் கோவை கே.செல்வராஜ் தலைமையில் சுமார் 150 தொண்டர்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி புறப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் சேவா தள மாநில தலைவர் செல்வராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த பேரணியில் மாவட்டந்தோறும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம், பொதுக்கூட்டம், சாதனை விளக்க புத்தகங்கள் வழங்கல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.

இந்த சைக்கிள் பேரணி பிரச்சார பயணம் ஜூலை 15 ல் விருதுநகரில் தொடங்குகிறது. இந்தப் பேரணியை காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ராகுல் காந்தி துவக்கி வைக்கிறார். விருதுநகரில் தொடங்கும் பேரணி மதுரை, கேதவை, திருச்சி, மற்றும் பல மாவட்டங்கள் வழியாக ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது.

இந்த விழாவில் மத்திய , மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி பொது செயலாளர்கள் ஜனார்தன் திவேதி, அசோக் கேலட், மகேந்திர ஜோஷி, மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

அதே போல் வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி சென்னை காமராஜர் கலை அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் சேவா தளத்தின் முதலாவது அரசியல் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட தமிழ்நாட்டில் இருந்து சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். அன்று மாலை சேவா தள தொண்டர்களின் பிரம்மாண்ட அணி வகுப்பு நடைபெறும். இந்த தகவலை காங்கிரஸ் சேவா தளம் மாநில தலைவர் கே.செல்வராஜ் தெரிவித்தார்.(டிஎன்எஸ்)

நன்றி : சென்னை ஆன்லைன்.

0 comments: