காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Saturday, March 13, 2010

உலகின் சிறந்த அரசியல் தலைவராக இந்தியப் பிரதமர் தேர்வு

இந்தாண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவர் விருதுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள "அப்பீல் ஆப் கன்சைன்ஸ்' என்ற அறக்கட்டளை அமைப்பு, ஆண்டுதோறும், உலகின் சிறந்த அரசியல் தலைவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இதற்கு முன், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், பிரான்சு அதிபர் சர்கோசி போன்றோர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தாண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவராக, பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டம்பரில், இந்த விருது பிரதமருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.