காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Tuesday, August 12, 2008

அத்வானி ஐயா இது தேவையா உங்களுக்கு?

பாசமிகு அத்வானி ஐயா அவர்களுக்கு,

ரொம்ப நாளா எழுதனும்னு நினைத்தது. இபோது தான் நேரம் வந்திருக்கு. வேற என்ன ஆறிபோன அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சமாச்சாரம் தான். அணு ஒப்பந்தம் போட்டே ஆகனும்னு கங்கிரஸ் கட்சி அடம் புடிச்சது. அதுக்கு நாங்க ஒத்துக்க மாட்டோம் என்று காம்ரேடுகள் கழண்டுட்டு வந்து ஆதரவை வாபஸ் வாங்கினாங்க. அவங்க பிரச்சனை அணு ஒப்பந்தம் இல்லை. அந்த ஒப்பந்தம் அமெரிக்காவுடன் என்பது தான். ஆனா நீங்க அணு ஒப்பந்தத்துக்கும் எதிரி இல்ல. அமெரிக்காவுக்கும் எதிரி இல்ல. நீங்க எதுக்கு சாமி இந்த ஆட்டத்துல சேர்ந்திங்க. எதிர்க் கட்சி என்றால் ஆளுங்கட்சியை எல்லா நேரத்துலையும் எதிர்த்துகிட்டே இருக்கனும்னு தானே.

அட அரசியல்ல இதெல்லம் சகஜம் தானுங்கோ. ஆனா ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போதுமான ஆதரவை பெறுவதற்கு ஆளுங்கட்சி( அது உங்க கட்சியாவே இருந்தாலும்) என்ன வேளை எல்லாம் செய்யும்னு உங்களுக்கு தெரியாதா?. அது தெரிஞ்சும் நீங்க இந்த விளயாட்டுல கலந்துக்கலாமா?. தாரளமா கலந்துக்கலாம். ஒருவேளை உங்க கட்சி கட்டுகோப்பகவும் பேராசை குறிப்பாக பணத்தாசையும் இல்லாதவர்களின் கட்சியாக இருந்தால்.

உங்க ஆளுங்க தான் பொட்டிய பாத்தாலே போதுமே பொட்டி பாம்பா அடங்கிடுவாங்களே. WestEnd என்ற பெயரில் ஒரு கம்பனி இருக்கா? அபப்டியே இருந்தாலும் தன்னை சந்திப்பவர்கள் உண்மையில் அதன் பிரதிநிதிகளா என்பது பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைபடாமல் இளித்துக் கொண்டே கையை நீட்டி காசு வாங்கிய ஒருவரை தலைவராக கொண்டிருந்த கட்சியல்லவா உங்க கட்சி. இதை எல்லாம் எப்படி மறந்து போனிங்க? எங்க புரட்சி தலைவி அம்மா செலக்டிவ் அம்னீஷியா அப்டினு ஒரு மேட்டர் கண்டுபிடிச்சி சொன்னது நெசம் தான் போல.

நம்பிக்கை வாக்கெடுப்புல கலந்துகிட்டு அரசுக்கு எதிரா வாக்களிக்க நீங்க முடிவு பண்ணது எவ்ளோ பெரிய தப்புனு உங்களுக்கு புரிய வைக்க தான் சாமி இந்த மெயில்தாசியே.

உங்க கட்சிகாரர்களின் பணத்தாசை பட்டியல்
1.தெகல்காவின் ஆபரேஷன் வெஸ்ட் எண்ட்.
2001ல் உங்க கட்சி தலைவரா இருந்த திரு. பங்காரு லட்சுமணன் இல்லாத ஒரு ஆயுத நிறுவனத்தின் போலி பிரதிநிதிகளிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். ( அவ்ளோ பெரிய கட்சியின் தலைவர் வெரும் 1 லட்சம். கொஞ்சம் பெரிசா வாங்கி இருக்கலாம். :))

2.ஆபரேஷன் துரியோதன்:
2005ல் பாராளுமன்றத்தில் கேள்வி கேக்க பணம் வாங்கிய 11 எம்பிக்களில் 7 பேர் பிஜேபியினர்.

3. ஆபரேஷன் சக்கரவியூக் :
2005ல் எம்.பி.எல்.ஏ.டி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப் பட்ட 6 எம்பிக்களில் 3 பேர் பாஜகவினர் தான்.

இந்த வீர வரலாறுகளை எல்லம் நினைத்து நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?. கவுரவமாக வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். இப்போ பாருங்க.. வழக்கம் போல உங்க ஆளுங்க வேலையை காட்டிட்டாங்க.

4 பேர் காசு வாங்கிகிட்டு ஓட்டு மாத்தி குட்டிட்டாங்க. 5 பேர் நாடாளுமன்றம் பக்கமே தலை வச்சி படுக்காம போய்ட்டாங்க. இதுல 3 பேர் காமெடி தான் பெரும் காமெடி. கேண்டின்ல டீ குடிச்சிட்டு இருந்தாங்களாம். வாக்கெடுப்பு நடந்தது அவங்களுக்கு தெரியாதாம். ஹாஹாஹா..

இவங்கள வச்சிகிட்டு வாக்கெடுப்புல கலந்துகிட்டிங்களே .. இந்த அவமானம் உங்களுக்கு தேவையா? இனியாவது கொஞ்சம் சூதானமா இருந்துக்கோங்க. முரளிமனோகர் ஜோஷி, ஜெஸ்வந்த் சிங், சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் என்று உங்க இடத்தை பிடிக்க ஒரு பட்டாளமே இருக்கு. தூக்கி சாப்ட்ருவாய்ங்க. ஏன் .. உங்க சிஷ்ய புள்ளை மோடி கூட எப்போ குஜராத் விட்டு வெளிய வருவார்னு சொல்ல முடியாது. அவருக்கும் டில்லியில குடி இருக்க ஆசை இருக்கும்ல. என்ன சொல்றிங்க?..

அன்புடனும் அக்கறையுடன்
ஒரு காங்கிரஸ்காரனுங்க.

...Its Too Late தலைவரே.. :))