காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Sunday, November 9, 2008

சிங்கத்தின் கேள்விக்கு பெரியார் “பக்தர்”களின் பதில் என்ன?

”திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் புலித்தலைவர் பிரபாகரன் படத்தை வைத்து பேட்டி கொடுக்கின்றனர். பெரியாரை நேசிப்பதாக கூறும் அவர்கள் பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்த இசையமைப்பாளர் படத்தில் இனி பணி செய்யாமல் இருப்பார்களா?” என மத்திய அமைச்சர் இளங்கோவன் அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்.




10.03.2007
'மாயக்கண்ணாடி' விழாவில் சீமான் பேசியபோது," வீட்டில் ஒரு சந்தன கட்டை துண்டு இருந்தால் தேவையானபோது எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். 50 வருஷம் ஆனாலும் சந்தனம் தன் குணத்தை மாற்றாமல் மணம் வீசும். இதுமாதிரிதான் இளையராஜாவின் இசையும்" என்று தமிழ் மணக்க பேசினார்.

இந்த அற்புத அடிவருடல் அல்லது ஜால்றா வாசித்தது, பெரியார் படம் வெளியிடத் தயாராய் இருந்த நேரம். இவரெல்லாம் பெரியார் பெயரை சொல்லி பிழைப்பு நடத்ததார்.. அடக் கொடுமையே..!

27 comments:

said...

அரசியல் செய்வதற்கு ஒரு சிறு விடயம் கிடைத்துவிடக் கூடாதே, உடனே ஊதிப் பெரிதாக்கி விடுவீர்களே.. என்னையா மானங் கெட்டப் பொழப்பு இது! சே!

said...

ஐயா மதி, காசுக்கு மாறடிக்கும் போது ஒரு வாயும் மற்ற சமயங்களில் ஒரு வாயும் வைத்திருக்கும் இது போன்ற போலிகளை எல்லாம் அப்படியே விட்டு வைக்க முடியாது. இவரை போன்ற ஆட்களை ரசிக்கும் அல்லது நம்பும் உங்கள் பொழப்பு தான் மிகவும் மானங்கெட்டது. அடங்கும்!

said...

நச், ஆனாலும் ஒரு சிறு நெருடல்!(என்ன வென்று புரியவில்லை).

said...

காங்கிரசை எதிர்ப்பதை தன் லட்சியமாக கொண்டு வாழ்ந்த பெரியாரின் பேரன் என்று சொல்லிக்கொள்ள காங்கிரசில் குப்பை கொட்டும் இளங்கோவனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

-- இது ஜோ என்பவரின் பின்னூட்டம்.
( இதில் அவருக்கு இணையாக பயன்படுத்தி இருந்த ஒரு வார்த்தை நீக்கப் பட்டிருக்கிறது )

said...

திரு.ஜோ, தன் தாத்தா அபபா ஒரு அமைப்பை எதிர்த்தார்கள்/ஆதரித்தார்கள் என்பதற்காக அடுத்த தலைமுறையும் அதை எதிர்க்க/ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொருவருக்கும் தனக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை இருக்கு. ஆனால் ஒரே சமயத்தில் கலப்பு ரட்டைக் குதிரையுல் பயணிக்கும் சமுதாயப் போலிகளைப் பற்றிதான் இந்த பதிவு. உங்களுக்கு மட்டும் தான் வார்த்தைகள் வரும் என்று எதுவும் பேச வேண்டாம்.

said...

இளையராஜா ஒரு படத்திற்கு இசை அமைப்பதும் மறுப்பதும் அவர் விருப்பம். பெரியார் படத்துக்கு இசை அமைக்க மறுத்ததற்கு அவர் கொடுத்த விளக்கம், "நான் பெரியார் கொள்கைக்கு மாற்றாக பக்தியில் பெரிய ஈடுபாடு கொண்டுள்ளேன் எனவே முழுமனதாக பெரியார் படத்துகான இசையை என்னால் கொடுக்க முடியாது" என்று சொன்னதில் அவர் பெரியாரைத் தூற்றினார் என்று வருகிறதா ? இதை பெரியார் கொள்கைப் பற்றுள்ளவர்கள் புரிந்துள்ளார்கள். இளங்கோவன் போன்ற அப்பழுக்கற்ற அரசியல் வாதிகளுக்கு பேச ஒன்றும் இல்லாமல் இதுகுறித்துக் கேட்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

சஞ்செய் - எதிர்பதிவு எழுதுவதில் உங்களுக்கு இருக்கும் திறமை அரசியலில் இல்லை. :)

இளையராஜாவின் பேச்சுக்கு டிக்ஸ்னரி எழுதவா ?

பக்திப்பாடல்கள் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அதற்கு மட்டும் தான் இசை அமைப்பேன் என்று இருப்பவரிடம் காதலுக்கு மரியாதைக்கு இசை அமைத்துக் கொடுங்கள் என்றால் அவர் அதைக் கேட்பாரா ? அவர் மறுத்துவிட்டால் அவர் காதல் புனிதமில்லை என்று பழிக்கிறார் என்று பொருளா ?

said...

- இது ஜோ என்பவரின் பின்னூட்டம்.
( இதில் அவருக்கு இணையாக பயன்படுத்தி இருந்த ஒரு வார்த்தை நீக்கப் பட்டிருக்கிறது )

ஜோ பிறரை புண்படுத்தும்படி எதும் பின்னூட்டமாட்டார், நீங்கள் வெளி இடவில்லை என்றால் பிறர் தவறாக நினைக்கக் கூடும் தயவு செய்து வெளி இடவும். இளங்கோவன் குறித்து ஜோ குறிப்பிட்டு இருந்தாலும் இளங்கோவன் இதைப் படிப்பார் என்று சொல்ல முடியாது.

:)

said...

//சஞ்செய் - எதிர்பதிவு எழுதுவதில் உங்களுக்கு இருக்கும் திறமை அரசியலில் இல்லை. :)//

இதில் இரண்டாவது பாதியை ஒத்துக் கொள்வதில் எனக்கு சிரமம் எதுவும் இல்லை கோவியாரே. :)

//இளையராஜாவின் பேச்சுக்கு டிக்ஸ்னரி எழுதவா ?//

நேரமிருந்தால் தயை கூர்ந்து எழுதவும். அதை எத்தனை பெரியாரிஸ்டுகள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையாவது அறிந்துக் கொள்ள முடியும். எனக்கும் புதியதாக தெரிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு.

//பக்திப்பாடல்கள் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அதற்கு மட்டும் தான் இசை அமைப்பேன் என்று இருப்பவரிடம் காதலுக்கு மரியாதைக்கு இசை அமைத்துக் கொடுங்கள் என்றால் அவர் அதைக் கேட்பாரா ? அவர் மறுத்துவிட்டால் அவர் காதல் புனிதமில்லை என்று பழிக்கிறார் என்று பொருளா ?//

ஹாஹா.. சொல்வது சரியாக இருக்காது என்றாலும் கூட நீங்க எனக்கு சொன்னதை கொஞ்சம் மாற்றிப் போட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

”கோவி.கண்ணன் - நீலிக்கண்ணீர் போன்ற கற்பனைக் கதைகள் பற்றி எழுதுவதில் உங்களுக்கு இருக்கும் திறமை பெரியார் குறித்து பேசுவதில் இல்லை.”

பெரியார் என்பவர் பெரும்பான்மையானவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட இப்போதும் பின்பற்றப் படும் ஒரு தலைவர்/மனிதர். அவரைக் காதலுடன் ஒப்பிடுவதிலேயே உங்கள் பெரியார் பற்று புரிகிறது.

மேலும், ஆன்மிகவாதி அல்லது அர்ச்சகர் இளையராஜாவை யாரும் இசை அமைக்க அழைக்கவில்லை. இசையை தொழிலாக செய்யும் ஒரு இசை “அமைப்பாளரையே” அழைத்தார்கள். இவர் ஒன்னும் ஆன்மிக சேவைக்கு இசையை பயன்படுத்தவில்லை. காசு பார்க்கும் தொழிலாகத் தான் செய்கிறார்.

இவர் எவ்வளவோ குப்பை படங்களுகெல்லாம் இசை அமைத்திருக்கிறார். அதைவிட பெரியார் பற்றிய படம் என்ன கேவலமாகவா போய்விட்டது. பெரியார் படத்தை நானும் பார்த்தேன். அதில் யாரையும் புண்படுத்தும் கேவலமான காட்சிகள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.. குறிப்பாக காதலை எற்றுக்கொளும் காதலனின் காலில் காதலி விழும் “புரட்சிகர” காட்சிகள் எதுவும் இல்லை. :)

said...

இளங்கோவனும், மணிசங்கர் அய்யரும், காவிரிப் பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுப்பப் பட்டபோது ஓடி ஒழிந்தது எங்களுக்குத் தெரியும். நீங்கள் ஜோ பின்னூட்டியதை வெளியிட வேண்டும். இல்லை என்றால் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடியதாகக் கூறப்படும் காங்கிரஸ் கட்சியில் நீங்கள் இருப்பதாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

said...

//இவர் எவ்வளவோ குப்பை படங்களுகெல்லாம் இசை அமைத்திருக்கிறார். அதைவிட பெரியார் பற்றிய படம் என்ன கேவலமாகவா போய்விட்டது//

இதில் ஆதங்கம் இருப்பது என்பதைவிட இருபக்கமும் அதாவது இளையராஜா VS பெரியார் பற்றாளர்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா ? என்ற ஏக்கம் இருப்பதே தெரிகிறது.

இசையை தெய்வமாக மதிப்பவர் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய நினைப்பது அவரின் ஈடுபாட்டைத்தான் வெளிச்சமிடுகிறது. தனது கொள்கைக்கு விரோதமான ஒன்று அவர் நினைப்பதைக் காட்டிலும் ஒரு பக்தியாளன் பெரியார் படத்துக்கு இசை அமைப்பது பெரியாரை கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடும் என்று அவர் நினைப்பதில் தவறு இல்லை.

புரிந்து கொண்டவர் அமைதியாகிவிட்டார்கள் இளங்கோவன்களுக்கு அரசியல் செய்ய இவைதானா என்று நினைக்கும் போது பரிதாபமே மிஞ்சுகிறது.

”ஹாஹா.. சொல்வது சரியாக இருக்காது என்றாலும் கூட நீங்க எனக்கு சொன்னதை கொஞ்சம் மாற்றிப் போட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் - நீலிக்கண்ணீர் போன்ற கற்பனைக் கதைகள் பற்றி எழுதுவதில் உங்களுக்கு இருக்கும் திறமை பெரியார் குறித்து பேசுவதில் இல்லை.” - தாராளமாகச் சொல்லுங்கள் ஒருவர் ஒன்று சொல்லிவிட்டாரே என்பதற்காக உணர்ச்சி வசப்படுபவன் நானெல்ல. அடுத்தவர்களின் சீண்டல்கள் என்னை பாதிக்கும் அளவுக்கு எனது எழுத்துக்களும் எண்ணங்களும் வலிமையற்றதாக நான் நினைப்பது இல்லை. நான் உங்களைக் குறித்துச் சொன்னதும் கூட உங்களை குறைத்து மதிப்பிட்டதான பொருளில் இல்லை என்பதை எழுதியவன் என்ற முறையில் என்னால் உறுதிபடுத்த முடியும்.

said...

//கோவி.கண்ணன் said...
ஜோ பிறரை புண்படுத்தும்படி எதும் பின்னூட்டமாட்டார், நீங்கள் வெளி இடவில்லை என்றால் பிறர் தவறாக நினைக்கக் கூடும் தயவு செய்து வெளி இடவும். இளங்கோவன் குறித்து ஜோ குறிப்பிட்டு இருந்தாலும் இளங்கோவன் இதைப் படிப்பார் என்று சொல்ல முடியாது.

:)//

குறைந்த பட்சம் நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்காகவேணும் அதை வெளியிடாமல் இருக்க விரும்புகிறேன். இவ்வளவு நாளா நாம் எல்லோரும் யாரை பற்றியாவது எழுதிக் கொண்டிருக்கும் போதெல்லாம் சம்பந்தப் பட்டவர்கள் வந்து படிப்பார்கள் என்று தான் எழுதினோமா? :)

said...

//நீங்கள் ஜோ பின்னூட்டியதை வெளியிட வேண்டும். இல்லை என்றால் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடியதாகக் கூறப்படும் காங்கிரஸ் கட்சியில் நீங்கள் இருப்பதாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.//

ஜோதி சார், யாரும் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஜோ அவர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் எல்லோரும் அவரை பற்றி இவ்வளவு மேன்மையாய் பேசுவதால் அந்த வார்த்தை அவருக்கு இழுக்காகவே அமையும் என நினைக்கிறேன். வேண்டுமென்றால் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

said...

பெரியாரின் மீதான தங்களின் கரிசனம் மகிழ்வளிக்கிறது. இளையராஜா பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்தது கூட பெரியாரின் ஒரு வகை வெற்றிதான். ஒருவனை சுயமாக சிந்திக்க வைக்க வேண்டுமென்பதற்காகத்தான் காலம் காலமாக பெரியார் உழைத்தார்.

சீமான் பேசியது இளையராஜாவின் திறமையைப் பற்றி! அவரின் இசையைப் பற்றி. அதை ஜால்ராவாகவும், அடிவருடித்தனமாகவும் பார்க்கும் அளவுக்குத்தான் உங்கள் வீச்சு இருக்கிறது. எனக்கு பிடிக்காததை செய்பவன் என்று என் எதிரி என்று பார்ப்பவனுக்கே பகுத்தறிவு இல்லை என்று பொருள்.

சீமான் செஞ்சால் அடிவருடித்தனம், இளங்கோவன் செஞ்சால் சுய சிந்தனை. உங்கள் அளவீடு அசத்தல்தான்.

said...

//முத்துகுமரன் said...

பெரியாரின் மீதான தங்களின் கரிசனம் மகிழ்வளிக்கிறது.//

நான் கடவுள் மறுப்பை ஆதரிப்பவன் என்ற முறையில் மிகக் குறைந்த அளவு கரிசனமாவது நீண்ட காலமாகவே எனக்கு உண்டு நண்பரே. இதை உங்களை மகிழ்விக்கவெல்லாம் எழுதவில்லை.

// சீமான் பேசியது இளையராஜாவின் திறமையைப் பற்றி! அவரின் இசையைப் பற்றி. அதை ஜால்ராவாகவும், அடிவருடித்தனமாகவும் பார்க்கும் அளவுக்குத்தான் உங்கள் வீச்சு இருக்கிறது. எனக்கு பிடிக்காததை செய்பவன் என்று என் எதிரி என்று பார்ப்பவனுக்கே பகுத்தறிவு இல்லை என்று பொருள்.//

இது எல்லோருக்கும் பொருந்தும்னா நானும் ஒத்துக்கிறென்.

காங்கிரஸ் அடிவருடி, டெல்லியின் எடுபிடிகளான தமிழக கங்கிரஸ்காரர்கள் என்று எழுதுவதெல்லாம் பகுத்தறிவா இருக்கும் போது இது மட்டும் பகுத்தறிவு இல்லையா? நல்லா இருக்கே. திரு.முத்துக்குமரன் அதிகமாக பதிவுகள் படிப்பதில்லை போல..

// சீமான் செஞ்சால் அடிவருடித்தனம், இளங்கோவன் செஞ்சால் சுய சிந்தனை. உங்கள் அளவீடு அசத்தல்தான்.//

இதில் பெயர்களை மாற்றினால் ஏராளமானவர்களுக்கு பொருந்தும். :)

நன்றி முத்துக்குமரன்.

said...

என்ன மாப்ள,
சிங்கம் கேள்வி கேட்டுச்சு தலைப்புல சொல்லியிருக்க, ஆனா மாண்புமிகு மத்திய இணையமைச்சர் இளங்கோவன் படம் மட்டும் தான் இருக்கு, சிங்கம் எங்க?

said...

ஐயா sanjai,

//பெரியாரை நேசிப்பதாக கூறும் அவர்கள் பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்த இசையமைப்பாளர் படத்தில் இனி பணி செய்யாமல் இருப்பார்களா?//

பெரியாரை நேசிப்பதால் பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜாவை ( இளையராஜா ஏற்கனவே இதற்கு விளக்கம் சொல்லிவிட்டார் என்பது வேறு விஷயம்) நீங்கள் கேள்வி எழுப்பலாம் ..

ஆனால் பெரியாரின் பேரன் என்று சொல்லும் ஒருவர் எப்படி காங்கிரசில் குப்பை கொட்டலாம் என்று கேட்டால் ஏன் உங்களுக்கு வேர்க்கிறது?

said...

ஒரு படத்துக்கு இசை அமைக்காவிட்டால் அவரின் திறமையை குறைத்து கூற வேண்டுமா என்ன ? புரியவில்லை.

said...

ஒரு காங்கிரஸ் அன்பரின் வலைப்பூவை தான் தேடிக்கொண்டு இருந்தேன் நன்றி.

said...

பெரியார் படத்துக்கு இசையமைக்காதது குறித்து இளையராஜா ஜூ.வி யில் சொன்னது.....


....."ஒரு திருமணம் நடக்கிறது. அதற்கு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்து விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்யாண வீட்டுக் காரர் திடீரென்று பந்தியின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களிடம் 'இங்கே ஒரு பிரபலமான சமையற்காரரை அழைத்திருந்தேன். அவர் வருவதற்கு மறுத்து விட்டார்.' என்று சொன்னால் அங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அந்த சமையல்காரரும் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருப்பார். காரணம், அவரைத்தான் அந்த சமையல் வேலைக்கு அழைக்கவே இல்லையே! அது போலவே பெரியார் படத்துக்கு இசையமைக்க என்னை யாரும் முறையாக அழைக்கவும் இல்லை.எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை!...


...பாரதி படத்துக்குப் பிறகு ஞானராஜசேகரன் என்னைச் சந்தித்து சுபாஷ் சந்திர போஸ் பற்றி ஒரு படம் எடுக்கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி வருகிறது. அதற்கு நீங்கள் ஒரு பாடல் இசையமைத்து ரெக்கார்ட் செய்து தர வேண்டும் என்று கேட்டார். 'இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் சுபாஷ் சந்திர போஸை எந்தக் கோணத்தில் படம் எடுக்கிறீர்கள்? அரசியல் சாயம் உண்டா? சுதந்திர உணர்வு போராட்டப் படமா? இப்படி படத்தின் நிறம் என்ன என்பதைத் தெரிந்து கொண்ட பிறகுதான் இசை அமைக்க முடியும். எனவே படத்தை எடுத்துக் காட்டுங்கள். பிறகு பார்க்கலாம்' என்றேன்

அவ்வளவுதான்! அதன்பிறகு சில வருடங்கள் கழித்து, அவர் பெரியார் படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப்பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இப்போதோ பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்....

....நான் காங்கிரஸ்காரனாக இல்லாவிட்டாலும் காமராஜ் படத்துக்கு இசைத்தொண்டு செய்தேன். நான் ஒரு திராவிடக் கழகத்தவன் இல்லையென்றாலும் சுயமரியாதையோடு உள்ளத் தூய்மையோடு பெரியாருக்கு சேவை செய்யத் தயங்கி இருக்க மாட்டேன்.

ஆனால் இந்தப் பெரியார் படத்தை எதற்காக எடுக்கிறார்கள்? அந்தப்படம் குறித்து என்னுடைய மூன்று கேள்விகள் இவைதான்.
1. இது பெரியாரின் கொள்கை விளக்கப் படமா?
2. பெரியாரின் வரலாறா?
3. தந்தை பெரியார் கேரக்டரில் நடிக்கும் சத்யராஜின் படமா?
இந்த மூன்று கேள்விகளுக்கும் நியாயமான விடைகள் இந்தத் திரைப்படத்தில் அமைந்தால், இளையராஜா மட்டுமல்ல....வேறு எந்தக் கொம்பனின் இசையும் பெரியார் படத்துக்குத் தேவையே இல்லை...

....நான் ஆன்மீகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுய மரியாதையையும், தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதில் ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காக தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால் நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம் இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்..."

said...

//ஆனால் பெரியாரின் பேரன் என்று சொல்லும் ஒருவர் எப்படி காங்கிரசில் குப்பை கொட்டலாம் என்று கேட்டால் ஏன் உங்களுக்கு வேர்க்கிறது?//

பேரன் என்று சொல்லும் “ஒருவர்” என்று தான் நீங்கள் சொன்னீர்களா ஜோ? அந்த ஒருவருக்கு பதில் என்ன வார்த்தை உபயோகித்தீர்கள் என்று நினைவு படுத்திப் பாருங்கள். அந்த வார்த்தை தவறானது இல்லை என்றால் சொல்லுங்கள். இனி உங்களையும் அதே வார்த்தையில் அழைக்கிறேன். உங்களுக்கு வேர்க்கிறதா இல்லை குளுகுளுவென்று இருக்கிறதா பார்க்கலாம்.

said...

ஜோசப் மச்சி.. சிரிச்சிட்டேன்... போதுமா? :)

said...

//அந்த வார்த்தை தவறானது இல்லை என்றால் சொல்லுங்கள். இனி உங்களையும் அதே வார்த்தையில் அழைக்கிறேன்.//

அழைத்துக்கொள் நீ 'அடிவருடி' என ஒத்துக்கொண்டால்.

said...

சோசப்பு பால்ராசு எதுக்காக 'நம்ம' 'சிங்கம்' படத்தை இங்கே கேட்கிறாரு?!

said...

//இதில் பெயர்களை மாற்றினால் ஏராளமானவர்களுக்கு பொருந்தும். :)//

ஒரே வரியிலே அத்தனை பேரையும் சாச்சுப்புட்டீங்களே. சூப்பருப்பு!

Anonymous said...

இளையராஜா ஒரு படத்திற்கு இசை அமைப்பதும் மறுப்பதும் அவர் விருப்பம். பெரியார் படத்துக்கு இசை அமைக்க மறுத்ததற்கு அவர் கொடுத்த விளக்கம், "நான் பெரியார் கொள்கைக்கு மாற்றாக பக்தியில் பெரிய ஈடுபாடு கொண்டுள்ளேன் எனவே முழுமனதாக பெரியார் படத்துகான இசையை என்னால் கொடுக்க முடியாது" என்று சொன்னதில் அவர் பெரியாரைத் தூற்றினார் என்று வருகிறதா ?//

yes....

said...

//பேரன் என்று சொல்லும் “ஒருவர்” என்று தான் நீங்கள் சொன்னீர்களா ஜோ? அ//

//அழைத்துக்கொள் நீ 'அடிவருடி' என ஒத்துக்கொண்டால்.//


இப்படித்தான் பதிவுலகத்துல வெட்டுக் குத்து ஆரம்பிக்குதா?
வெட்டிச் சண்ட!
வேற என்னத்தச் சொல்ல?

said...

கேவலம் அரசியல் பிழைப்பு நடத்துபவர்களின் பேச்சுக்களையெல்லாம் பெரிசா எடுத்துக்கலாமா?????