காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Wednesday, May 20, 2009

தமிழக டகால்ட்டி கட்சிகள் - 1

இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. அதில் முக்கிய்மானது தமிழகத்தில் பிலிம் காட்டிக் கொண்டிருந்தவர்களின் வண்டவாளம் தெரிய வந்ததே. காங்+திமுக கூட்டணி 12 இடங்களில் தோற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசங்கள் மிகவும் குறைவாகவே பெற்று தோற்றிருக்கிறார்கள். 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் இருந்து 6 சதம் வரை குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். திருப்பூர் மட்டும் அதிக பட்சமாக 9 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம். ஈரோடு , திருப்பூர், கோவை மற்றும் பொள்ளாச்சியில் கொங்கு முன்னேற்றப் பேரவையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டும் குறைவான வித்தியாசத்திலேயே காங்கிரஸ் கூட்டணி தோல்வி. இத்தனைக்கும் இந்த பகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் மட்டுமே கூட்டணி. விடுதல சிறுத்தைகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்ற 12 இடங்களில் 2, 3 தொகுதிகள் தவிர மற்ற அனைத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் வாக்குகள் தான். விசியால் எந்த ஆதாயமும் இல்லை. எனவே இந்த குறைந்த வாக்கு வித்தியாச தோல்விகளை சரி செய்து விட முடியும்.

ஆனால் அதிமுக கூட்டணி தோற்றிருக்கும் இடங்களைப் பாருங்கள். முதலில் பாமக. தமிழகத்தின் வட மாவட்டங்களில் தங்களுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாக ஊரை ஏமாற்றுபவர்கள்.

தருமபுரி,
பாமக வாங்கிய வாக்குகள் - 29.54 % (அதிமுக+2 கம்யூனிஸ்டுகள்+மதிமுக)
திமுக வாங்கிய ஓட்டுகள் - 47 %. ( திமுக+காங்கிரஸ்+விசி)
பாமக தோல்வி வித்தியாசம் - 17% க்கு மேல்.

தருமபுரியின் அரூர் தொகுதியில் கணிசமான கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். தற்போதயை சட்ட மன்ற உறுப்பினர் கூட கம்யூனிஸ்ட் தான். இந்த 29 சதவீதத்தில் அதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் போக பாமகவின் வாக்குகள் எவ்வளவு இருக்க முடியும்?. மிக சொற்பமாகத் தானே. இன்னும் தருமபுரியை பாமக கோட்டை என ஏமாற்ற முடியாதே. :)

அரக்கோணம்
பாமக - 26.32% - இதிலும் 4 கூட்டணி கட்சிகள் வாக்குகள் போக பாமகவின் வாக்குகள் சொற்பமாகவே இருக்கு.
திமுக - 36%
பாமக தோல்வி வித்தியாசம் - 9%க்கு மேல்.

ஸ்ரீபெரும்புதூரில் மட்டுமே குறைவான வாக்குகள் வித்தியாசம் : 3.16%

திருவண்ணாமலை
பாமக - 34%
திமுக - 52%
தோல்வி வித்தியாசம் - 18%

கள்ளக்குறிச்சி
பாமக - 34%
திமுக - 48 %
தோல்வி வித்தியாசம் - 14%

சிதம்பரம்
பாமக - 29%
விசி - 38%
தோல்வி வித்தியாசம் - 9%

புதுச்சேரி
பாமக - 36%
காங்கிரஸ் -52%
தோல்வி - 16%

பாமக வாங்கிய வாக்குகளில் , 4 கூட்டணிக் கட்சிகள் வாக்குகள் போக பாமக எவ்வளவு?. இவ்வளவு நாளா எப்படி எல்லாம் மருத்துவர் ஏமாத்தி இருக்கிறார் பாருங்க. அவர் பலம் என்னன்னே தெரியாம ஒவ்வொரு முறை அவர் தாவும் போதும் இஷ்டத்துக்கு எண்ணிக்கையை சேர்த்துக் கொடுத்திருக்காங்க. பாமகவிற்கென்று தனி வாக்கு வங்கி கிடையாது. ( யார்னா ஒரு வங்கி ஆரம்பிச்சிக் குடுங்கய்யா) . இவர்கள் வாங்கியதும் பெருமளவில் அதிமுகவின் வாக்குகள் மட்டுமே. இனியாவது மருத்துவர் தன் பலம் அறிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.

12 comments:

said...

//பாமக வாங்கிய வாக்குகளில் , 4 கூட்டணிக் கட்சிகள் வாக்குகள் போக பாமக எவ்வளவு?. இவ்வளவு நாளா எப்படி எல்லாம் மருத்துவர் ஏமாத்தி இருக்கிறார் பாருங்க. அவர் பலம் என்னன்னே தெரியாம ஒவ்வொரு முறை அவர் தாவும் போதும் இஷ்டத்துக்கு எண்ணிக்கையை சேர்த்துக் கொடுத்திருக்காங்க.//

பாமக பற்றிய கணிப்பு சரிதான்.

அது போல் காங்கிரசு தமிழகத்தில் தனித்து நின்றால் எத்தனை இடம் கொழிக்கும்னு தெரிவித்தால் நல்லா இருக்கும். காங்கிரஸ் பலம் வாய்ந்த தொகுதி என்று எத்தனை இருக்கிறது என்பதை தெரிவிக்கவும்.

மூப்பனார் காலத்தில் ஜா, ஜே வாக அதிமுக இருந்த போது 25 சட்டமன்ற இடங்களை காங்கிரசு பெற்றது. (அதுகூட அப்போதைய அதிமுக கட்சி உடைந்ததால் பிரிந்த வாக்குகளின் ஏற்பட்ட இடைச் சந்து வெற்றி)

காங்கிரசின் தமிழக வாக்கு வங்கி( அப்படி எதும் இருக்கிறதா ?) எத்தனை விழுக்காடு ?

said...

எடுத்ததுமோ அய்யாவின் டவுசரைக் கிழிக்கும் உங்க நுண்ணரசியலை கண்ணடிக்கிறேன்.

said...

Hey nan dan first..
sari idula irundu enna theriya pogudhu?
adutha therdal ku innum 5 varusham iruku...
adukula neega romba easya sollitinga.. SARI PANNIDALAM nu..
5 varusham enna nadakudhu parkalam na..

said...

வ.மு வில் ஒரு பதிவு போட்டிருக்கேன் பாருங்க.

said...

பாமகவிற்கு நிச்சயம் வாக்கு வங்கி உண்டு. அதை அடுத்த சட்டமன்ற தேர்தலில் 25 எம்.எல்.ஏ சீட்டு கொடுத்து கலைஞர் நிரூப்பிப்பார்.

இந்திய அளவில் செல்வாக்கான கட்சியான காங்கிரசிற்கு தமிழகத்தில் தேமுதிகவை விட குறைவான வாக்கு வங்கி என்பதை நீங்க ஒத்த்ப்பிங்களா? அதுதான் நிஜம்.. :)))

said...

அரக்கோணத்தில் பாமக 29%, திமுக 36%, அப்ப வித்தியாசம் எப்படிங்க 9% வரும்? என்னமோ போங்க...

மருத்துவர் ஐயா வாழ்க!

:)

said...

மன்னிக்கனும் சுந்தர் சார். அரக்கோணத்தில் பாமகவின் வாக்கு 29% அல்ல. 26% மட்டுமே. டைப பண்ணும் போது தவறு நடந்துவிட்டது.

said...

கார்க்கி மற்றும் கோவியாருக்கு தனிப் பதிவாகவே பதில் சொல்றேன். வெய்ட்டீஸ் ப்ளீஸ்.

said...

பாமக எல்லாம் சரி.

கள்ள வோட்டு... காசு வோட்டு எல்லாம் நீங்க கணக்கு பன்னலயே. அது எத்தன பெர்சென்ட்? விஜயகாந்த் பத்தியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்.

அடுத்த தேர்தல் 2011. பாக்கலாம் காங்கிரஸ் பலத்த?

said...

இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள்? யார் தோற்றார்கள்? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில்தான் முதன்முறையாக காசுகொடுத்து வாக்கு வாங்கும்முறை வந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?

அரசு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு நவீன் சாவ்லா புண்ணியத்தில் காங்கிரசு கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?

சிவகங்கை, விருதுநகர் தேர்தல் முடிவுகள் யாரால் தீர்மானிக்கப்பட்டது?

வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகத்தன்மை இழந்துவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா?

தமிழ்நாட்டில் தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் தி.மு.க.-விற்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

said...

இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிப்பது மக்கள் அல்ல...

பணம்... பணம்... பணம்...

அரசு இயந்திரம்

said...

திரு, சீப்பிரபாகரன்,

//இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள்? யார் தோற்றார்கள்? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில்தான் முதன்முறையாக காசுகொடுத்து வாக்கு வாங்கும்முறை வந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?//

உங்கள் அறியாமையை அறிந்துக் கொண்டேன். இந்தத் தேர்தலில் தான் பணம் கொடுக்க ஆரம்பித்தார்களா? அதெல்லாம் ஆரம்பித்து பல மாமாங்கம் ஆகிவிட்டது. கடந்த காலங்களை விட இப்போது அதிகம். அடுத்தத் தேர்தலில் இதைவிட அதிகமாக இருக்கும். அப்போது அந்தத் தேர்தலில் தான் பணம் கொடுக்க ஆரம்பித்தார்கள் என சொல்வீர்கள். அரசியல்வாதிகளின் வெற்றியே உங்களை மாதிரி செலக்டிவ் அம்னீஷியா ஆட்களால் தான் என்பதை நீங்கள் அறிவீர்களா?.


//அரசு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு நவீன் சாவ்லா புண்ணியத்தில் காங்கிரசு கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?//

காங்கிரஸ் வெற்றிப் பெற்ற தொகுதிகளுக்கு மட்டுமே நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் அதிகாரியா? தோல்வி அடைந்த இடங்களுக்கு யார் பொறுப்பு? அது எதனால்?

//சிவகங்கை, விருதுநகர் தேர்தல் முடிவுகள் யாரால் தீர்மானிக்கப்பட்டது?//

மக்களால் தான். ஆட்சியாளர்களால் தீர்மானிக்கப்பட்டிருந்தால் வாக்கு வித்தியாசம் லட்சங்களில் இருந்திருக்கும்.

//வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகத்தன்மை இழந்துவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா?//

எதை வைத்து சொல்கிறீர்கள்? நீங்க என்ன ஜெயலலிதாவின் க்ளோனிங்கா? தோல்வி அடைந்த இடத்தில் எந்திர தில்லுமுல்லு. வெற்றி பெற்ற இடத்தில் என்ன மாயாஜாலம்?. அங்கெல்லாம் எந்திரத்துக்கு பதில் வாக்குச் சீட்டு பயன்படுத்தினார்களா?

//தமிழ்நாட்டில் தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் தி.மு.க.-விற்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா?//

நான் மறுக்கிறேன். தேர்தல் ஆரம்பித்த நொடியிலிருந்து பெட்டிக்கு சீல் வைக்கும் வரை பல கட்சிகளின் ஏஜெண்டுகள் பூத்தில் இருப்பார்கள். அவர்களுக்குத் தெரியாமல் ஒரு வாக்குக் கூட பதிவாகாது. பல சமயங்களில் ( இந்த தேர்தல் உட்பட) பூத் ஏஜண்டாக இருந்திருக்கிறேன்.