காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Sunday, May 17, 2009

காங்கிரஸ் தலைவர்கள் தோல்வி - ஈழப் பிரச்சனைக் காரணமில்லை

தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலர் இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டார்கள். அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தோல்விக்கும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இணையத்தில் எழுதும் சில டைம்பாஸ் அரசியல் நிபுணர்கள் , காங்கிரஸ் தலைவர்கள் தோல்விக்குக் காரணம் ஈழத் தமிழர் அனுபவிக்கும் கொடுமைகளுக்குக் காரணம் காங்கிரஸ் என்ற பித்தலாட்ட பிரச்சாரமும் அதனை செய்த பாரதிராஜா, சீமான் போன்ற வேஷதாரிகளும் தான் என அளந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அரசியல் அறிவைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் தான் இந்த பதிவைப் போட வேண்டியதாகிவிட்டது.

தங்கபாலு 50,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வி.
சேலம் மாநகரம் திமுகவின் கோட்டை. ஆனால் மொத்த மாவட்டமும் பார்த்தால் அதிமுக செல்வாக்கு அதிகம். சென்ற முறை வெற்றிக்குக் காரணம் பாமக, மதிமுக, 2 கம்யூனிஸ்டுகள் ஆகியோரின் வாக்குகளும் கிடைத்ததால் தங்கபாலு வெற்றி பெற்றார். இப்போது இவர்கள் அனைவரும் அதிமுக கூட்டணி. நிச்சயம் இவர்கள் அனைவருக்கும் சேர்த்து 50000 வாக்குகளுக்கு மேல் வாக்கு வங்கி இருக்கு. எனவே ஈழப் பிரச்சனைக்கும் தங்கபாலு தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஈரோட்டில் இளங்கோவன் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
இதற்கு முதல் காரணம் இவர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை என்பது தான். திமுக மற்றும் காங்கிரசில் இருக்கும் ஒரு பகுதி கவுண்டர்கள் கூட மதிமுகவின் கணேச மூர்த்திக்கு வாக்களித்தார்கள். எல்லாம் சாதிப் பாசம். கூடவே கொமுபே வேட்பாளர் வாங்கிய 1 லட்சம் ஓட்டுகள். இந்த ஓட்டுகளில் பெரும்பாலானவை காங்கிரஸ்+திமுக கூட்டணிக்கு வர வேண்டியவை. காரணம் கடைசியில். மிக முக்கியமாக மின் தடை. ஈரோடு மாவட்டம் முழுதும் விசைத்தறிகள் தான் மிகப் பெரிய தொழில். மின் தடையால் வேலை இழந்தவர்கள் மிக மிக அதிகம். அவர்களின் கோபம் திமுக கூட்டணிக்கு எதிராக திரும்பியது. எனவே ஈழப் பிரச்சனைக்கும் இளங்கோவன் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

திருப்பூரில் கார்வேந்தன் 90000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
இங்கும் இளங்கோவனுக்கு பாதகமாக அமைந்த அதே விஷயங்கள் தான். மின் தடை மற்றும் கொமுபே வாங்கிய 95000 வாக்குகள். பெரிய வாக்கு வித்தியாசம் எற்படக் காரணம், கம்யூனிஸ்டுகள் ஓரளவு செல்வாக்குள்ள தொகுதி தான் திருப்பூர். எனவே அதிமுகவிற்கு அது பெரிய பலம். எனவே ஈழப் பிரச்சனைக்கும் கார்வேந்தன் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கோவை பிரபு 40,000 வித்தியாசத்தில் தோல்வி
இங்கும் மின் தடை மற்றும் கொமுபே வாங்கிய 1,28,000 வாக்குகள் தான் தோல்விக்க்குக் காரணம். மின்தடையால் தொழிற்சாலைகளில் 3 ஷிப்டுகள் 2 ஷிப்டுகளாக குறைக்கப் பட்டது. இதனால் வேலை இழப்பும் வருமான இழப்பும் மிகப் பெரிய அளவில் இருக்கு. லக்ஷ்மி மில்ஸ் மாதிரி மிகப் பெரிய குழுமத்தில் சில யூனிட்கள் கூட மூடப் பட்டு ஆயிரக் கணக்கானவர்கள் வேலை இழந்தார்கள். இதனால் திமுகவினரே ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலையில் தான் இருந்தார்கள். அவர்களின் வாக்குகள் கொமுபேக்கு போனது. இது என் நேரடியாக பார்த்த அனுபவம். மேலும் கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணிக்கு பலம். வெற்றி பெற்றவரும் கம்யூனிஸ்டு தான். அதோடு சேர்த்து கோவையில் பலமான சக்திகளாக இருக்கும் காங்கிரசின் ஒரு பிரிவினைரை பிரபு கண்டுகொள்ளவே இல்லை. அவர் இஷ்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்தல் சமயத்தில் மாற்றி அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார். இதை செய்யாமல் இருந்தாலே வென்றிருப்பார். எனவே ஈழப் பிரச்சனைக்கும் பிரபு தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மணிஷங்கர் ஐயர் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
மணிசங்கர் ஐயர் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மெற்கொண்டிருப்பதாக சொன்னாலும் கூட பெரும்பாலும் தொகுதியில் இல்லாமல் டில்லியிலேயே இருந்திருக்கிறார். அந்த அதிருப்தி மற்றும் ஜவஹிருல்லா பிரித்த முஸ்லிம் ஓட்டுகள் மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் 4 கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து 30000 வாக்குகளாவது இருக்கும். ஜவாஹிருல்லா 20000+ அதிமுக கூட்டணியின் 30000 வாக்குகள் சேர்ந்தாலே 50000 வாக்குகளுக்கு மேல் அதிமுகவிற்கு கிடைக்கிறது. எனவே ஈழப் பிரச்சனைக்கும் மணிசங்கரின் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.


கொங்கு மண்டலத்தில் கொமுபே வாங்கிய ஓட்டுகள் ஏன் காங்+திமுக கூட்டணியை பாதித்திருக்கிறது என்று சொல்கிறேன் என்றால், அவர்கள் பலமில்லாத மற்ற தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. தேமுதிக பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை. ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, கரூர் ஆகியத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி தான் வென்றிருக்கிறது. எனவே கொமுபே ஓட்டுகளுக்கும் அதிமுக கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. ஆகவே கொமுபே பிரித்த ஓட்டுகள் திமுக கூட்டணிக்கு வர வேண்டியது தான். பொதுவாக கவுண்டர்கள் ஓட்டுகள் அதிமுகவிற்கு தான் என்ற கருத்து உண்டு. ஆனால் அது பொய் என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கூட்டணிகளின் தயவால் தான் இந்தப் பகுதிகளின் அதிமுக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இந்த பகுதிகளுக்காக அடுத்து வரும் தேர்தல்களில் கொமுபே க்கு டிமாண்ட் அதிகரிக்கலாம். ஹ்ம்ம்.. அடுத்த பாமக ரெடி . :(

சிலர் புலம்புவது, காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு. இதைக் கேட்டால் சிரிப்பு தன் வருகிறது. அதிமுகவிடம் காசு இல்லையா? பாமகவிடம் காசு இல்லையா? அவர்கள் எல்லாம் காசே கொடுக்கவில்லையா? காசு தான் ஓட்டு வாங்கும் என்றால் கரூரில் கேசி.பழனிச்சாமி தான் வென்றிருப்பார். அவர் செய்யாத செலவா?.ஆனால் தம்பிதுரை தான் ஜெயிச்சார். காரணம், அங்கும் மின் தடை மிகப் பெரிய பிரச்சனை. கரூரும் தொழில்வளம் மிக்க மாவட்டம். மின் தடையால் வேலை இழந்தவர்கள் அங்கும் அதிகம். எனவே காங்கிரஸ் மற்றும் திமுகவில் சில வேட்பாளர்களின் தோல்விக்கும் ஈழப் பிரச்சனைக்கும் பாரதிராஜா, சீமான் போன்ற நச்சுப் பாம்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த சினிமாக் காரர்களின் முகத்தில் மக்கள் மலத்தைப் பூசி இருக்கிறார்கள் என்பதே நிஜம். இவர்கள் பரப்பிய பொய்யை மக்கள் நம்பி இருந்தால் அதிமுக போட்டியிட்ட 23 தொகுதிகளின் வெறும் 9 தொகுதிகள் தான் ஜெயித்திருக்குமா? காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் 16 . வென்றவை 9 தொகுதிகள். அதிமுக போட்டியிட்டது 23 இடங்கள். வென்றவை 9 மட்டுமே. மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். ஆகவே இணையத்து டைம்பாஸ் அரசியல் நிபுணர்களே , குய்யோ முறையோன்னு கத்தாம எதார்த்தத்தை கொஞ்சம் யோசிங்க. சினிமாக் காரனுங்க பின்னாடி சுத்தாதிங்க. அவனுங்க கோடி கோடியா சம்பாதிக்கிறானுங்க. கொஞ்ச நாள் சீன் போட்டு சுத்தறதால அவனுங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்கு அப்படியா? சொல்லுங்க.

ஈழப் பிரச்சனை தான் முக்கியம்னு மக்கள் நினைச்சிருந்தா, அதை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்த கம்யூனிஸ்டுகள் ஏன் தோற்றார்கள்? ஈழத்து நாயகனாக நினைத்து உதார் விட்டு திரிஞ்ச வைகோ ஏன் தோற்றார்? ஈழம் தான் உயிர் மூச்சென்று நாடகம் போட்ட பச்சோந்தி ராமதாஸ் கட்சி ஏன் தோற்றது? ஈழம் வாங்கித் தருவேன் என்று தேர்தலுக்காக நாக்கைத் திருப்பிய “ ராஜபக்‌ஷேவின் பெண் குரல்” ஜெயலலிதா கட்சிக்கு ஏன் இவ்வளவுப் பெரிய தோல்வி?.

தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகள்...!

பாமகவின் ராஜதந்திரம் அடுத்த பதிவு...

8 comments:

said...

வெற்றி! வெற்றி! வெற்றி! என்று முழங்காமல் ஏன் சிறு தோல்விகளை பெரிதுபடுதுகிரீர். 16 க்கு 9 வெற்றி தானே. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் பிரச்சனைதான் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் . வைகோ வின் தோல்வியே உதாரணம் . காங்கிரசில் இருந்துகொண்டு சாதியை முன்னிருத்துவது வேதனையை தருகிறது . என் அன்பு வேண்டுகோள் அந்த சிறு பகுதிகளை நீக்கிவிட வேண்டுகிறேன். மற்ற மின்தடை , சினிமாக் காரர்களால் ஏற்பட்ட தன்னம்பிக்கை இழப்பு ,புதிய தொகுதிகள் ( கோவை- பிரபு,திருப்பூரில் கார்வேந்தன்,ஈரோட்டில் இளங்கோவன் அனைவருக்கும் ,புதிய தொகுதிகள் ) இவையே காரணம் .ராகுல் காந்தி, சேலம் - கோவை நெடுஞ்சாலையில் நான்கு மணிநேரம் செலவு செய்திருந்தால்
போதும் . நிலைமை தலைகீழ் ஆயிருக்கும் . வாழ்த்துக்கள் .

said...

அடுத்த பா ம க ரெடியாம நீங்க என்னத்தை செஞ்சீங்க .......... இத பத்தி சொல்ல உங்க கடமைய ஒழுங்கா செஞ்சு இருந்தா யாருமே சாதி கட்சி ஆரம்பிச்சு இருக்க மாட்டான்.

உங்க தோல்விக்கு தி மு க காரணம் அதிமுக கோடை என சப்பை கட்டு கட்டாமல் தோல்வியை ஊத்துக்கொண்டு போ வேலையை பாருங்கள்அடுத்த பா ம க வை நாங்கள் பத்துகொள்கிறோம்.என்னிக்குமே சாதியை பத்தி நினைக்காத என்னைப்போன்ற பலரை சாதிக்கட்சி பற்றி நினைக்க தூண்டிய உணளுக்கு வாழ்த்துக்கள்

said...

//காங்கிரசில் இருந்துகொண்டு சாதியை முன்னிருத்துவது வேதனையை தருகிறது //

நான் எப்போதுமே சாதியை முன்னிறுத்த மாட்டேன் நண்பரே. தோல்விக்கான காரணம் அவர்கள் தான் என்று சொன்னேன். தோல்விக்கான காரணம் கண்டுபிடிக்கப் பட்டால் தான் அதை சரி செய்ய முடியும்.

said...

தன்ஸ், என்ன உங்க பிரச்சனை? நானும் கச்சேரிக்குப் போறேன்னு ஏன் கருத்து சொல்றிங்க. மொதல்ல தலைப்பையாவது ஒழுங்கா படிங்க. யாரும் தோல்வியை ஏத்துக்காம இல்லை. ஆனால் அந்த தோல்விக்கு காரணம் சீமான், பாரதிராஜா போன்ற ஜந்துக்கள் தான் என்று சொல்வதை தான் தவறு என்று சொல்லி அதற்கான காரணத்தை சொல்லி இருக்கிறேன். முடியல. :(

said...

seemen periyar enaku thatha nu sonnaduku EVKS enga thatha anda kaalathula konjam apadi ipadi iruparu.. apadi yedum ivaruku thatha aagi irupaarunu solli periyaraye asiga paduthunadu thapa theriyala ungaluku...
sari PC result pathi onnum kaanom.. appa avar unmayalume win pannara?? anda side gounder vote iruka madiri theriyala enaku..

//அடுத்த பா ம க வை நாங்கள் பத்துகொள்கிறோம்.என்னிக்குமே சாதியை பத்தி நினைக்காத என்னைப்போன்ற பலரை சாதிக்கட்சி பற்றி நினைக்க தூண்டிய உணளுக்கு வாழ்த்துக்கள் //

KANDIPAA...

said...

சரவணன், இளங்கோவன் அப்படி பேசியது சரி என்று எங்காவது நியாயப் படுத்தினேனா? ஒட்டு மொத்த மக்களையும் வேசி மகன்கள் என்று சொன்ன சீமானை எப்ப்டி திட்டி இருந்தாலும் ஆதரித்திருப்பேன். ஆனால் பெரியாரை அதற்கு அவமதிக்க வேண்டியதில்லை. ஆனால் அதுக்காகத் தான் தோத்தார்னு சொல்லாதிங்க. என்னால சிரிப்பை அடக்க முடியாது. :)

சீமான் உங்களையும் சேர்த்து வேசி மகன் என்று சொன்னானே அப்போ எங்க போனிங்க?

said...

//மணிஷங்கர் ஐயர் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
மணிசங்கர் ஐயர் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மெற்கொண்டிருப்பதாக சொன்னாலும் கூட பெரும்பாலும் தொகுதியில் இல்லாமல் டில்லியிலேயே இருந்திருக்கிறார்.//

நம்ம இஸ்லாமிய பதிவர் சுவனபிரியன் கூட ஐயருக்குத்தான் ஓட்டுப் போட்டதாகச் சொல்றார்.
:)

மேற்கண்ட நபர்கள்,
ஈழத்தமிழர் நலன் காத்ததால் தன தேர்தலில் கவனமின்றி தோற்றார்கள் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

said...

கோவியாரே, நீங்க ஏன் இவ்ளோ அப்பாவியா இருக்கிங்க? திருமாவளவன் பேட்டிக் குடுத்தாலும் நம்பரிங்க. ஜெயலலிதா தனி ஈழம் வாங்கித் தருவேன்னு சொன்னாலும் நம்பறிங்க. யாராவது யாருக்கு ஓட்ட் போட்டேன்னு சொன்னாலும் நம்பறிங்க. கொமுபே நண்பர்கள் சிலர் என் கிட்ட கேட்டாங்க. நான் அவங்க கிட்ட ஆங்க கட்சிகுத் தான் ஓட்டுப் போட்டேன்னு சொன்னேன். அது நிஜம்னு அர்த்தம் இல்லை.. :)

அதும் இல்லாம ஜவாஹிருக்கா வாங்கி இருக்கும் ஓட்டுகள் மணிஷங்கருக்கு வர வேண்டியது என்ற ரீதியில் தான் சொல்லி இருக்கிறேன். எந்த முஸ்லிமும் அவருக்கு ஓட்டுப் போடலைனு சொல்லவே இல்லையே. ;))