காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Monday, May 18, 2009

காங்கிரஸ் + திமுக கூட்டணி தோல்வி - ஒரு படப் பார்வை

மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தான் தோல்வி. விரைவில் சரி செய்தால் நல்லது. மின் தடை இல்லாமல் இருந்தாலே போதும். இனி எல்லாம் சுபமே. ;)

3 comments:

said...

காங்கிரஸ் + திமுக கூட்டணி யை தலையில் வைத்து கொண்டாடுகிறீர்களே இலங்கை தமிழர்களுக்காக உங்கள் அரசு என்ன செய்தது? பட்டியலிடுங்கள்... போர் நிறுத்தத்திற்கு என்ன செய்தது? சப்பை கட்டு கட்டாமல் Valid Reason சொல்லுங்கள்...

said...

இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் பங்கு என்ன? நடு நிலையாக நடந்து கொள்கிறார்களா? தமிழர்களுக்கு துரோகம் செய்வது போல் தோன்றவில்லையா?

said...

பாலாஜி , எனக்கு சப்பைக் கட்டு கட்ட வேண்டிய அவசியமும் இல்லை. தகுந்த காரணம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. நான் இந்தியன். தேர்தல் நடைபெற்றது இலங்கைக்கு இல்லை. இந்தியாவிற்கு தான். இந்தியாவிற்கு நடைபெறும் தேர்தலில், இந்திய நலனை முன்னிறுத்தி தான் வாக்களிக்க முடியும். அதைத் தான் ஒட்டு மொத்த இந்திய மக்களும் செய்திருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் மருத்துவ உதவிகள் எல்லாம் இந்தியா செய்துக் கொண்டு தான் இருக்கு. சமீபத்தில் கூட இதற்காக 100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. தமிழர்கள் பட்டினியால் தவித்த போது இலங்கை அனுமதி இல்லாம்லே இந்திய விமாங்கள் உணவுப் பொருட்களை வழங்கியது. ராஜிவ்காந்தி தான் அதை செய்ய சொன்னார்.

இப்போது மக்கள் கொத்துகொத்தாக் சாவதற்கு முதல் காரணம் பிரபாகரன் தான். அடுத்து தான் ராஜபக்‌ஷே. புலிகள் மீது சிங்கள ராணுவம் போர் தொடுத்த போது புலிகள் மட்டும் பின் வாங்கி இருக்கலாம். ஊரிலிருந்த மக்களை எல்லாம் எதர்கு காட்டிற்கு அழைத்து சென்றார்கள். அவர்களை மனித கேடயமாக பயன்படுத்தத் தானே. இது தானே ராஜபக்‌ஷேவிற்கு சாதகமாகிவிட்டது. புலிகள் மேல் குண்டு போடுவதாக சொல்லி அப்பாவிகளை அழித்துக் கொண்டிருக்கிறான். 68 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிச்சது இந்தியா முயற்சியால தான். அப்போ ஏன் மக்களை பாதுகாப்புப் பகுதிக்கு செல்ல பிரபாகரன் அனுமதிக்கலை? தப்பிவந்த சிலருடன் ஒரு தற்கொலைப்படை பெண்ணையும் அனுப்பி சோதனை நடந்த இடத்தில் வெடிக்கசெய்து தமிழர்களையும் சேர்த்துக் கொன்றது எதனால்? தப்பி செல்ல முயற்சிக்கும் தமிழர்களை பயமுறுத்தத் தானே.

தமிழர்கள் படும் துன்பங்களுக்கு பிரபாகரன் தான் முதல் காரணம். இந்தியாவை குறை சொல்ல யாருக்கும் தகுதி இல்லை.

உங்களை மாதிரி இணையத்தில் தகவல் அறியும் மேதாவிகள் கொஞ்சம் உண்மையும் அறிந்துக் கொண்டு கேள்வி கேட்டால் நல்லது.