காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Monday, December 29, 2008

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் - தங்கபாலு

சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பல விஷயங்களை பற்றி பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திரு கேவி. தங்கபாலு, இலங்கை விவகாரம் பற்றி பேசிய போது,

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். வடக்கு, கிழக்கு மாநிலங்கள் உருவாகி, அங்கு தமிழன் முதல்வராக வேண்டும். எல்லா எதிர்ப்புகளையும் மீறி இலங்கைக்கு பிரணாப் முகர்ஜி செல்வார். அங்குள்ள பிரச்னையை தீர்த்து வைத்து, வெற்றியோடு அவர் தாயகம் திரும்புவார்.” என் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி என்பதை சில விஷமிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர் ஆதரவு வேறு விடுதலைப் புலிகள் எதிர்ப்பு வேறு என்பதை மக்கள் புரிந்துக் கொண்டாலும் சில விஷமிகள் தான் திசை திருப்பும் விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

சுப வீரபாண்டியன் எப்போ அடியாள் ஆனார்?

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலைவர் திருமாவளவன் நடத்திய கருத்தரங்கில் பேசிய சுப வீரபாண்டியன் “ திருமாவளவன் உத்தரவிட்டிருந்தால், சத்தியமூர்த்தி பவன் இருக்கும் இடம் தெரியாமல் போய் இருக்கும்” என்று உளறி இருக்கிறார். காங்கிரஸ் என்ன இவரை போல சுண்டைகாயா? நினைத்தால் இடம் தெரியாமல் ஆக்க.. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க இயக்கம். இவரை போல ஒட்டுண்ணி இயக்கம் அல்ல.

சத்தியமூர்த்திபவன் மீது தாக்குதல் நடத்தியது விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் திருமாவளவன் அதை மருத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்த அடியாள் சுப.வீரபாண்டியன் இவ்வாறு கூவி இருக்கிறார். இந்த அடியாள் சுப வீரபாண்டியனின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக முதல்வரின் ஒரு சிறு அறிக்கைக்கு பயந்து அத்தனையைம் மூடிக் கொண்ட இந்த வீரத் தளபதி தன் பார்வையை , கையாலாகாத் தனத்தை காங்கிரஸ் பக்கம் திருப்பி இருக்கிறார். நல்லா தேடறாங்கய்யா விளம்பரத்தை. திருமாவளவன் உத்தரவு போடுவாராம். இவர் வந்து சத்தியமூர்த்திபவனை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவாராம்.. என்னங்கய்யா கலர் கலரா ரீல் விடறிங்க? :))))

Sunday, December 28, 2008

இந்திய தேசிய காங்கிரஸ் 124வது ஆண்டு விழா

இந்திய தேசிய காங்கிரசின் 124வது ஆண்டு விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது.