”திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் புலித்தலைவர் பிரபாகரன் படத்தை வைத்து பேட்டி கொடுக்கின்றனர். பெரியாரை நேசிப்பதாக கூறும் அவர்கள் பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்த இசையமைப்பாளர் படத்தில் இனி பணி செய்யாமல் இருப்பார்களா?” என மத்திய அமைச்சர் இளங்கோவன் அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்.10.03.2007
'மாயக்கண்ணாடி' விழாவில் சீமான் பேசியபோது," வீட்டில் ஒரு சந்தன கட்டை துண்டு இருந்தால் தேவையானபோது எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். 50 வருஷம் ஆனாலும் சந்தனம் தன் குணத்தை மாற்றாமல் மணம் வீசும். இதுமாதிரிதான் இளையராஜாவின் இசையும்" என்று தமிழ் மணக்க பேசினார்.
இந்த அற்புத அடிவருடல் அல்லது ஜால்றா வாசித்தது, பெரியார் படம் வெளியிடத் தயாராய் இருந்த நேரம். இவரெல்லாம் பெரியார் பெயரை சொல்லி பிழைப்பு நடத்ததார்.. அடக் கொடுமையே..!