இந்திய இளம் எம்பிக்களின், அமெரிக்கத் தூதருடனான நல்லெண்ண சந்திப்பில் விருதுநகர் எம்பி மாணிக்கத்தாகூரும் கலந்துக் கொண்டார். அப்போது அமெரிக்க தூதரிடம் பேசிய மாணிக்கத் தாகூர், இலங்கையில் போரால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களை மறு குடியேற்றம் செய்ய அமெரிக்காவும் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு “ இந்தியாவே சரியான நடவடிக்கை” எடுத்து வருவதாக அமெரிக்கத் தூதர் கூறினார்.
காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..
Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts
Saturday, December 12, 2009
இலங்கை பிரச்சனை - மாணிக்கத் தாகூர் வேண்டுகோள்
இந்திய இளம் எம்பிக்களின், அமெரிக்கத் தூதருடனான நல்லெண்ண சந்திப்பில் விருதுநகர் எம்பி மாணிக்கத்தாகூரும் கலந்துக் கொண்டார். அப்போது அமெரிக்க தூதரிடம் பேசிய மாணிக்கத் தாகூர், இலங்கையில் போரால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களை மறு குடியேற்றம் செய்ய அமெரிக்காவும் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு “ இந்தியாவே சரியான நடவடிக்கை” எடுத்து வருவதாக அமெரிக்கத் தூதர் கூறினார்.
Friday, June 26, 2009
பொறுமை 'ஓவர்'.. இலங்கைக்கு இந்தியா தந்த 'ஷாக்'
டெல்லி: தமிழர் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும், அப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை 10 நாள்களுக்குள் முடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்தப் பணியில் நீ்ங்கள் விரும்பாவிட்டாலும் நாங்கள் ஈடுபடுவோம் என்று இலங்கையிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.மேலும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி வந்த அதிபர் ராஜபக்சேவின் சகோதரர்களிடம் இந்தியா கூறியுள்ளது.புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை இலங்கை ராணுவம் முடிக்கும் வரை பொறுமை காத்த மத்திய அரசு இப்போது தமிழர்களின் உரிமைகளைக் காக்கும் நடவடிக்கைகளை மெல்ல தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரான பாதுகாப்பு ஆலோசகர் பாசில் ராஜபக்சே, இன்னொரு சகோதரரும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே ஆகியோர் அதிபரின் செயலாளர் லலித் வீரசிங்கவுடன் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது இந்த விஷயங்களை இந்தியத் தரப்பு எடுத்து வைத்தது.தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் ராணுவத்தினரின் அளவுக்கு அதிகமான நடமாட்டம்தான் என்று 'ரா' கொடுத்துள்ள தகவல்கதளை சுட்டிக் காட்டிய இந்தியத் தரப்பு உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெறும் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு வலியுறுத்தியது.அதே போல இந்தக் குழு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோது, முகாம்களில் தமிழர்கள் போதிய உணவு, சுகாதார வசதியின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளது கவலை தருவதாகக் கூறிய அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தமிழர்கள் பாதிப்பு அடைந்து வருவதால் அனைத்து முகாம்களையும் மூடிவிட்டு அவர்கள் உடனே வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இந்தக் குழு இந்திய பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சி்ங்கை சந்தித்தபோது, தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியை இலங்கை அரசு உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும் கண்ணி வெடிகள் அகற்றும் பணியை இலங்கை அரசு 10 நாட்களுக்குள் தொடங்காவிட்டால் அதன் பிறகு அந்தப் பணியில் இந்தியா ஈடுபடும் என்றும் திட்டவட்டமாக இலங்கை குழுவிடம் கூறப்பட்டுள்ளது.புலிகளின் பெயரால் சீனா, பாகிஸ்தானுடன் இலங்கை நெருக்கம் காட்டியதை இந்தியா எரிச்சலுடன் பார்த்து வந்தது. இந் நிலையில் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதால் இலங்கையை மீ்ண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர இந்தியா நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாகவே தமிழர் பிரச்சனையில் இனியும் மத்திய அரசு அமைதியாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் மறு சீரமைப்புக்கு வேண்டிய அளவு உதவுவதாகவும் அந்தக் குழுவிடம் மத்திய அரசு உறுதி தந்துள்ளதோடு, இனியும் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் எண்ண ஓட்டங்களை புறக்கணித்துவிட்டு செயல்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழர்களுக்கு உரிய மரியாதை, அரசியல் உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சிங்களர்களுக்கு இணையான சம வாய்ப்பும் தரப்பட வேண்டும் என்றும் இந்தியத் தரப்பு வலியுறுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்திலிருந்து கடும் அரசியல் நெருக்குதல் தரப்பட்ட நிலையிலும் புலிகள் விஷயத்தில் இலங்கையின் ராணுவரீதியான நடவடிக்கைகளில் தலையிடாமல் இருந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் கிருஷ்ணா, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பகை நாடுகளுடன் இலங்கை அளவுக்கு அதிகமாக நெருங்குவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரித்துவிட்டார்.மேலும் கச்சத் தீவை ராணுவ கேந்திரமாக்கவோ இலங்கையில் சீனா கடற்படைத் தளம் அமைக்கவோ இந்தியா அனுமதிக்காது என்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சிங் தெரிவித்தார்.தங்களுடன் கொஞ்சிக் குலாவிய இந்திய அதிகாரிகள் திடீரென இவ்வளவு கடுமையாகப் பேசியதை இலங்கை குழு எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மகிழ்ச்சியோடு டெல்லி வந்த குழு இறுக்கத்துடன் தான் கொழும்பு திரும்பியுள்ளது.
இதையடுத்தே நேற்று இலங்கை அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இடம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் 6 மாதத்துக்குள் அவரவர் இல்லங்களுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- Courtesy : thatstamil.com

Wednesday, May 27, 2009
புலிகளின் கடைசித் தொடர்பு - லண்டன் சண்டே டைம்ஸ்
| இறுதிக் கட்ட நேரத்தில் நடேசனுடன் ஒரு தொலைபேசித் தொடர்பு...: லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் விளக்கம் |
| வீரகேசரி இணையம் 5/26/2009 9:09:49 AM - தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளா நடேசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோருடன் இறுதிக்கட்ட நேரத்தில் தான் கொண்டிருருந்த தொடர்பை லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் நேற்று விபரமாக எடுத்துக் கூறியுள்ளார். "அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு... ஆனால் சில மணி நேரத்தில் இறக்கப் போகும் ஒருவரின் அழைப்பு போன்று அது இருக்கவில்லை. அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஓரிடமும் இருக்கவில்லை போலும்" என சன்டே டைம்ஸ் செய்தியில் மேரி கொல்வின் தெரிவித்துள்ளார். "நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்"- செய்மதித் தொலைபேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில், கடைசியாக நிலைகொண்டிருந்த மிகச்சிறிய காட்டுப் பகுதிக்குள் இருந்து, 17.05.2009 ஞாயிறு பின்னிரவு நடேசன் என்னிடம் கூறினார். பின்புறத்திலிருந்து இயந்திரத் துப்பாக்கிச் சத்தங்கள் தெளிவாக எனக்குக் கேட்டன. "ஒபாமா நிர்வாகம் மற்றும் பிரித்தானியா அரசிடம் இருந்து எங்களின் பாதுபாப்புக்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம். எங்கள் பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?" என்று அவர் கேட்டார். புலிகளுக்கும் சிறிலங்கா சிங்களவர்களுக்கும் இடையிலான 26 வருட போரில், வெற்றிகண்டுள்ள சிறிலங்கா இராணுவத்திடம், சரணடைவது மிக அபாயமானதென்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. 8 வருடங்களுக்கு முன்பிருந்தே நடேசன், புலித்தேவன் ஆகியோரை எனக்குத் தெரியும். அப்போது தீவின் 3 இல் 1 பங்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது, இவர்கள் இருவரும் தங்களோடு இருந்த ஏனைய 300 போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் (பலர் காயமடைந்திருந்தார்கள்) காப்பாற்றுவதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் கையால் தோண்டிய குழிகளுக்குள் அவர்களோடு பதுங்கியிருந்தனர். கடந்த பல நாட்களாகவே புலிகளின் தலைமைக்கும், மற்றும் ஐ.நாவுக்கும் இடைப்பட்ட மத்தியஸ்தராக நான் இருந்து வந்தேன். நடேசன் என்னிடம் 3 விடயங்களை ஐ.நாவுடன் பறிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்: ஆயுதங்களைக் கீழே போடுவதாக..... தாம் ஆயுதங்களைக் கீழே போடுவதாகவும், தமது பாதுகாப்புக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உத்தரவாதம் தர வேண்டுமென்றும், தமிழர்களுக்கு மற்றுமொரு அரசியல் தீர்வு எடுக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். பிரித்தானிய மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கூடாக நான் கொழும்பில் இருந்த ஐ.நா.விசேட தூதுவர், விஜய் நம்பியாரோடு தொடர்பு கொண்டேன். புலிகளின் சரணடைதலுக்கான கோரிக்கைகளை நான் அவருக்குத் தெரியப்படுத்தினேன். அவரும், தான் அதை சிறிலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார். இந்த நடவடிக்கை சமாதானம் வருவதற்கான ஓர் அறிகுறியாகவே எனக்குத் தோன்றியது. எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் பதுங்குக் குழிக்குள் இருந்தவாறு சிரித்த முகத்துடன் ஒரு படத்தை தொலைபேசியில் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார். கடைசி ஞாயிறு இரவில், சிறிலங்கா இராணுவம், மிக நெருங்கி வந்த போது, புலிகளிடன் இருந்து, எந்தவித அரசியல் கோரிக்கையும் புகைப்படங்களும் கிடைக்கவில்லை. முன்னர் சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க நடேசன் மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது, அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். புலிகளின் பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை அவசியம் தேவை என்றும் கூறினார். நியூயோர்க்கில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஒன்றினூடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன். அப்போது அங்கே நேரம் காலை 5:30 ஆக இருந்தது. புலிகள் ஆயதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன். வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரி... அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் சரணடைதலுக்கான பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகக் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார். சரணடைதலின் சாட்சிக்கு நம்பியாரும் வடக்குக்குப் போகத் தேவையில்லையா என்று நான் அவரிடன் கேட்டேன். அதற்கு அவசியமில்லையென்றும், வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்படியும் நம்பியார் கூறினார். லண்டனில் அப்போது நேரம் ஞாயிறு பின்னிரவு. நடேசனுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி எடுத்துத் தோல்வியடைந்தேன். தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொடர்புக்கு அழைத்து நம்பியாரின் செய்தியைத் தெரிவித்தேன். தென் ஆசியத் தொடர்பிலிருந்து திங்கள் காலை 5.00 மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவருக்கும் நடேசனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் நினைக்கிறேன் எல்லாமே முடிந்து விட்டது, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று. சரணடைதல் பிழையானது ஏன்? அன்று மாலை, சிறிலங்கா இராணுவம் அவர்களது உடல்களைக் காட்டியிருந்தார்கள். சரணடைதல் பிழையாகிப் போனது ஏன்? விரைவில் இதனை நான் கண்டுபிடிப்பேன். ஞாயிறு இரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவையும் நடேசன் தொடர்பு கொண்டுள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். சந்திரநேரு உடனடியாக ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டதாக அறிகிறேன். பிந்திய மணித்தியாலங்களில் நடந்தவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். "ஜனாதிபதி தான் நடேசனுக்கும் அவர் குடும்பத்துக்கும் முழுப் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்திருந்தாரே...? தன்னோடு 300 மக்கள் உள்ளார்கள் என நடேசன் கூறியிருந்தார், சிலர் காயப்பட்டும் இருந்தார்கள். நான் ஜனாதிபதியிடம், "நான் நேரில் போய் அவர்களது சரணடைதலை ஏற்கிறேன்" எனக் கூறினேன். அதற்கு ராஜபக்ஷ, "இல்லை, எங்கள் இராணுவம் மிகவும் பெருந்தன்மையும் கட்டுப்பாடுமுடையது. நீங்கள் போர் நடக்கும் இடத்துக்குச் சென்று உங்கள் வாழ்க்கையை இடருக்குள்ளாக்கத் தேவையில்லை" என்று கூறினார். பசில், ஜனாதிபதியின் சகோதரர், என்னை அழைத்து, "அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், அவர்கள் வெள்ளைக் கொடியை ஏந்த வேண்டும்" என்றவர், அவர்கள் தொடர வேண்டிய பாதையையும் கூறினார்." இப்படிச் சந்திரநேரு என்னிடம் கூறினார். சந்திரநேரு நடேசனை காலை 6:20 மணிக்குத் தொடர்பு கொண்டாராம். துப்பாக்கிச் சூட்டின் சத்தம் அப்போதும் கேட்டுக் கொண்டிருந்ததாம். "நாங்கள் தயார்." நடேசன் சந்திரநேருவிடம் கூறினார். "நான் வெளியே வந்து வெள்ளைக் கொடியை ஏற்றிப் பிடிக்கப்போகிறேன்" என்றார். சந்திரநேரு, "கொடியை உயர்த்திப்பிடி சகோதரனே-அவர்களுக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை மாலையில் சந்திக்கிறேன்" என்று கூறியிருந்ததாக அறிகின்றேன். தப்பி வந்தவர் தந்த விபரம் கொலையிடத்தில் இருந்து தப்பித்து கூட்டத்துடன் வந்திருந்த ஒரு தமிழர் அதன்பின் என்ன நடந்தது என்பதை விவரித்தார். இவர் பின்னர் உதவிப் பணியாளர் ஒருவரோடு கதைக்கும்போது, "நடேசனும் புலித்தேவனும், ஆண்களும் பெண்களுமுள்ள கூட்டத்தோடு, வெள்ளைக் கொடியோடு சிறிலங்கா இராணுவத்தை நோக்கி நடந்து வந்தார்கள். இராணுவம் அவர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தது. நடேசனின் மனைவி, ஒரு சிங்களப் பெண்மணி. அவர் சிங்களத்தில் கத்தினார். "அவர்கள் சரணடையத்தானே வந்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களைச் சுடுகிறீர்களே..." என்ற அவரது மனைவியும் சுடப்பட்டார். சரணடைய வந்த சகலருமே கொல்லப்பட்டார்கள்". விபரம் கூறிய அந்தத் தமிழ் நபர் இப்போது தனது உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கின்றார். ஜனாதிபதியாலும் அவர் சகோதரராலும் விரட்டப்பட்டதால், சந்திர நேரு இப்போது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். கடந்த சில நாட்களாக, ஐ.நாவின் தூதுவராக வந்த நம்பியாரின் பங்களிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அவரின் சகோதரர், சரிஷ், 2002 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக இருந்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் தலைமைக் கட்டளை அதிகாரி, சரத் பொன்சேகாவுக்கு ஒரு சிறந்த இராணுவத் தலைவனின் தன்மைகள் உள்ளன என்று சரிஷ் ஒரு தடவை பாராட்டியுமுள்ளார். சில பயங்கரவாத நடவடிக்கைகளால் புலிகள் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், நடேசனும் புலித்தேவனும், தமிழர் உரிமைப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வையே காண விரும்பியிருந்தார்கள். உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவர்களாகியிருப்பார்கள்." இவ்வாறு லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் தெரிவித்துள்ளார். நன்றி : Express News. |
Sunday, May 17, 2009
காங்கிரஸ் தலைவர்கள் தோல்வி - ஈழப் பிரச்சனைக் காரணமில்லை
தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலர் இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டார்கள். அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தோல்விக்கும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இணையத்தில் எழுதும் சில டைம்பாஸ் அரசியல் நிபுணர்கள் , காங்கிரஸ் தலைவர்கள் தோல்விக்குக் காரணம் ஈழத் தமிழர் அனுபவிக்கும் கொடுமைகளுக்குக் காரணம் காங்கிரஸ் என்ற பித்தலாட்ட பிரச்சாரமும் அதனை செய்த பாரதிராஜா, சீமான் போன்ற வேஷதாரிகளும் தான் என அளந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அரசியல் அறிவைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் தான் இந்த பதிவைப் போட வேண்டியதாகிவிட்டது.
தங்கபாலு 50,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வி.
சேலம் மாநகரம் திமுகவின் கோட்டை. ஆனால் மொத்த மாவட்டமும் பார்த்தால் அதிமுக செல்வாக்கு அதிகம். சென்ற முறை வெற்றிக்குக் காரணம் பாமக, மதிமுக, 2 கம்யூனிஸ்டுகள் ஆகியோரின் வாக்குகளும் கிடைத்ததால் தங்கபாலு வெற்றி பெற்றார். இப்போது இவர்கள் அனைவரும் அதிமுக கூட்டணி. நிச்சயம் இவர்கள் அனைவருக்கும் சேர்த்து 50000 வாக்குகளுக்கு மேல் வாக்கு வங்கி இருக்கு. எனவே ஈழப் பிரச்சனைக்கும் தங்கபாலு தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஈரோட்டில் இளங்கோவன் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
இதற்கு முதல் காரணம் இவர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை என்பது தான். திமுக மற்றும் காங்கிரசில் இருக்கும் ஒரு பகுதி கவுண்டர்கள் கூட மதிமுகவின் கணேச மூர்த்திக்கு வாக்களித்தார்கள். எல்லாம் சாதிப் பாசம். கூடவே கொமுபே வேட்பாளர் வாங்கிய 1 லட்சம் ஓட்டுகள். இந்த ஓட்டுகளில் பெரும்பாலானவை காங்கிரஸ்+திமுக கூட்டணிக்கு வர வேண்டியவை. காரணம் கடைசியில். மிக முக்கியமாக மின் தடை. ஈரோடு மாவட்டம் முழுதும் விசைத்தறிகள் தான் மிகப் பெரிய தொழில். மின் தடையால் வேலை இழந்தவர்கள் மிக மிக அதிகம். அவர்களின் கோபம் திமுக கூட்டணிக்கு எதிராக திரும்பியது. எனவே ஈழப் பிரச்சனைக்கும் இளங்கோவன் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.
திருப்பூரில் கார்வேந்தன் 90000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
இங்கும் இளங்கோவனுக்கு பாதகமாக அமைந்த அதே விஷயங்கள் தான். மின் தடை மற்றும் கொமுபே வாங்கிய 95000 வாக்குகள். பெரிய வாக்கு வித்தியாசம் எற்படக் காரணம், கம்யூனிஸ்டுகள் ஓரளவு செல்வாக்குள்ள தொகுதி தான் திருப்பூர். எனவே அதிமுகவிற்கு அது பெரிய பலம். எனவே ஈழப் பிரச்சனைக்கும் கார்வேந்தன் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கோவை பிரபு 40,000 வித்தியாசத்தில் தோல்வி
இங்கும் மின் தடை மற்றும் கொமுபே வாங்கிய 1,28,000 வாக்குகள் தான் தோல்விக்க்குக் காரணம். மின்தடையால் தொழிற்சாலைகளில் 3 ஷிப்டுகள் 2 ஷிப்டுகளாக குறைக்கப் பட்டது. இதனால் வேலை இழப்பும் வருமான இழப்பும் மிகப் பெரிய அளவில் இருக்கு. லக்ஷ்மி மில்ஸ் மாதிரி மிகப் பெரிய குழுமத்தில் சில யூனிட்கள் கூட மூடப் பட்டு ஆயிரக் கணக்கானவர்கள் வேலை இழந்தார்கள். இதனால் திமுகவினரே ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலையில் தான் இருந்தார்கள். அவர்களின் வாக்குகள் கொமுபேக்கு போனது. இது என் நேரடியாக பார்த்த அனுபவம். மேலும் கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணிக்கு பலம். வெற்றி பெற்றவரும் கம்யூனிஸ்டு தான். அதோடு சேர்த்து கோவையில் பலமான சக்திகளாக இருக்கும் காங்கிரசின் ஒரு பிரிவினைரை பிரபு கண்டுகொள்ளவே இல்லை. அவர் இஷ்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்தல் சமயத்தில் மாற்றி அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார். இதை செய்யாமல் இருந்தாலே வென்றிருப்பார். எனவே ஈழப் பிரச்சனைக்கும் பிரபு தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மணிஷங்கர் ஐயர் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
மணிசங்கர் ஐயர் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மெற்கொண்டிருப்பதாக சொன்னாலும் கூட பெரும்பாலும் தொகுதியில் இல்லாமல் டில்லியிலேயே இருந்திருக்கிறார். அந்த அதிருப்தி மற்றும் ஜவஹிருல்லா பிரித்த முஸ்லிம் ஓட்டுகள் மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் 4 கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து 30000 வாக்குகளாவது இருக்கும். ஜவாஹிருல்லா 20000+ அதிமுக கூட்டணியின் 30000 வாக்குகள் சேர்ந்தாலே 50000 வாக்குகளுக்கு மேல் அதிமுகவிற்கு கிடைக்கிறது. எனவே ஈழப் பிரச்சனைக்கும் மணிசங்கரின் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கொங்கு மண்டலத்தில் கொமுபே வாங்கிய ஓட்டுகள் ஏன் காங்+திமுக கூட்டணியை பாதித்திருக்கிறது என்று சொல்கிறேன் என்றால், அவர்கள் பலமில்லாத மற்ற தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. தேமுதிக பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை. ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, கரூர் ஆகியத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி தான் வென்றிருக்கிறது. எனவே கொமுபே ஓட்டுகளுக்கும் அதிமுக கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. ஆகவே கொமுபே பிரித்த ஓட்டுகள் திமுக கூட்டணிக்கு வர வேண்டியது தான். பொதுவாக கவுண்டர்கள் ஓட்டுகள் அதிமுகவிற்கு தான் என்ற கருத்து உண்டு. ஆனால் அது பொய் என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கூட்டணிகளின் தயவால் தான் இந்தப் பகுதிகளின் அதிமுக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இந்த பகுதிகளுக்காக அடுத்து வரும் தேர்தல்களில் கொமுபே க்கு டிமாண்ட் அதிகரிக்கலாம். ஹ்ம்ம்.. அடுத்த பாமக ரெடி . :(
சிலர் புலம்புவது, காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு. இதைக் கேட்டால் சிரிப்பு தன் வருகிறது. அதிமுகவிடம் காசு இல்லையா? பாமகவிடம் காசு இல்லையா? அவர்கள் எல்லாம் காசே கொடுக்கவில்லையா? காசு தான் ஓட்டு வாங்கும் என்றால் கரூரில் கேசி.பழனிச்சாமி தான் வென்றிருப்பார். அவர் செய்யாத செலவா?.ஆனால் தம்பிதுரை தான் ஜெயிச்சார். காரணம், அங்கும் மின் தடை மிகப் பெரிய பிரச்சனை. கரூரும் தொழில்வளம் மிக்க மாவட்டம். மின் தடையால் வேலை இழந்தவர்கள் அங்கும் அதிகம். எனவே காங்கிரஸ் மற்றும் திமுகவில் சில வேட்பாளர்களின் தோல்விக்கும் ஈழப் பிரச்சனைக்கும் பாரதிராஜா, சீமான் போன்ற நச்சுப் பாம்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த சினிமாக் காரர்களின் முகத்தில் மக்கள் மலத்தைப் பூசி இருக்கிறார்கள் என்பதே நிஜம். இவர்கள் பரப்பிய பொய்யை மக்கள் நம்பி இருந்தால் அதிமுக போட்டியிட்ட 23 தொகுதிகளின் வெறும் 9 தொகுதிகள் தான் ஜெயித்திருக்குமா? காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் 16 . வென்றவை 9 தொகுதிகள். அதிமுக போட்டியிட்டது 23 இடங்கள். வென்றவை 9 மட்டுமே. மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். ஆகவே இணையத்து டைம்பாஸ் அரசியல் நிபுணர்களே , குய்யோ முறையோன்னு கத்தாம எதார்த்தத்தை கொஞ்சம் யோசிங்க. சினிமாக் காரனுங்க பின்னாடி சுத்தாதிங்க. அவனுங்க கோடி கோடியா சம்பாதிக்கிறானுங்க. கொஞ்ச நாள் சீன் போட்டு சுத்தறதால அவனுங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்கு அப்படியா? சொல்லுங்க.
ஈழப் பிரச்சனை தான் முக்கியம்னு மக்கள் நினைச்சிருந்தா, அதை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்த கம்யூனிஸ்டுகள் ஏன் தோற்றார்கள்? ஈழத்து நாயகனாக நினைத்து உதார் விட்டு திரிஞ்ச வைகோ ஏன் தோற்றார்? ஈழம் தான் உயிர் மூச்சென்று நாடகம் போட்ட பச்சோந்தி ராமதாஸ் கட்சி ஏன் தோற்றது? ஈழம் வாங்கித் தருவேன் என்று தேர்தலுக்காக நாக்கைத் திருப்பிய “ ராஜபக்ஷேவின் பெண் குரல்” ஜெயலலிதா கட்சிக்கு ஏன் இவ்வளவுப் பெரிய தோல்வி?.
தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகள்...!
பாமகவின் ராஜதந்திரம் அடுத்த பதிவு...

Monday, May 4, 2009
உங்கள் ஓட்டு ”இலங்கைத் தமிழர்” நலன் காக்கும் புரட்சித் தலைவிக்கே.
தனி ஈழம் அமைய வேண்டுமானால் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கே ஓட்டுப் போடுங்கன்னு ”உணர்வாளர்கள்” எல்லாம் கூவிக் கூவி ஓட்டுக் கேக்கறாங்க. ஏனுங்கணா இப்டி கூவறிங்கன்னு கேட்டா, அவங்க தான் தனி ஈழம் பெற்றுத் தருவாங்களாம். பாவமா இருக்கு இவங்களைப் பார்த்தால்.
ஜெயலலிதாவோட குரலில் அலைபேசிகள் வழியாகவும் பண்பலை ரேடியோக்கள் வழியாகவும் நிமிடத்துக்கு ஒரு முறை ஓட்டுக் கேட்கும் விளம்பரம் வருகிறது. அதில் “இலங்கைத் தமிழர் நலன் காக்க” என்று தான் சொல்கிறார். ஈழத் தமிழர் நலன் என்று சொல்லவில்லை. பேச்சுக்குக் கூட ஈழம் என்ற வார்த்தையை உபயோகிக்க மறுப்பவர் ஈழம் பெற்றுத் தருவாராம். தேர்தல் முடியட்டும். அப்புறம் பாருங்க அம்மாவோட அருள் வாக்குகள் எப்டி இருக்குன்னு. போட்ட கையெழுத்தையே இல்லை என்று சொன்னவர் தன் பெயரில் வந்த காசோலையை பணமாக்கிவிட்டு அனுப்பியவர் யார் என்று தெரியாது என்று சொன்னவர் ஈழம் அமைந்தால் இலங்கையின் ஒருமைப் பாடு பாதிக்கும் என்று மீண்டும் சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?. என்னவோ போங்க.

Monday, April 27, 2009
இலங்கையில் போர் நிறுத்தம்
தமிழக முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரத்தத்தால், இந்திய அரசின் அழுத்தத்தால் இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்திறுக்கிறது. கலைஞரின் உண்ணாவிரதம் வெற்றி. வாழ்த்துகள்.
இப்பகூட போர் நிறுத்தப் போறாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு கலைஞ்ர் உண்ணாவிரம் இருந்தாருன்னு சொன்னாலும் சொல்வீங்க.
இப்பகூட போர் நிறுத்தப் போறாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு கலைஞ்ர் உண்ணாவிரம் இருந்தாருன்னு சொன்னாலும் சொல்வீங்க.
நன்றி : புதுகை அப்துல்லா.
Monday, February 23, 2009
இதைப் படிங்க மொதல்ல
Subscribe to:
Posts (Atom)