காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Showing posts with label PMK. Show all posts
Showing posts with label PMK. Show all posts

Wednesday, May 20, 2009

தமிழக டகால்ட்டி கட்சிகள் - 1

இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. அதில் முக்கிய்மானது தமிழகத்தில் பிலிம் காட்டிக் கொண்டிருந்தவர்களின் வண்டவாளம் தெரிய வந்ததே. காங்+திமுக கூட்டணி 12 இடங்களில் தோற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசங்கள் மிகவும் குறைவாகவே பெற்று தோற்றிருக்கிறார்கள். 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் இருந்து 6 சதம் வரை குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். திருப்பூர் மட்டும் அதிக பட்சமாக 9 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம். ஈரோடு , திருப்பூர், கோவை மற்றும் பொள்ளாச்சியில் கொங்கு முன்னேற்றப் பேரவையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டும் குறைவான வித்தியாசத்திலேயே காங்கிரஸ் கூட்டணி தோல்வி. இத்தனைக்கும் இந்த பகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் மட்டுமே கூட்டணி. விடுதல சிறுத்தைகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்ற 12 இடங்களில் 2, 3 தொகுதிகள் தவிர மற்ற அனைத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் வாக்குகள் தான். விசியால் எந்த ஆதாயமும் இல்லை. எனவே இந்த குறைந்த வாக்கு வித்தியாச தோல்விகளை சரி செய்து விட முடியும்.

ஆனால் அதிமுக கூட்டணி தோற்றிருக்கும் இடங்களைப் பாருங்கள். முதலில் பாமக. தமிழகத்தின் வட மாவட்டங்களில் தங்களுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாக ஊரை ஏமாற்றுபவர்கள்.

தருமபுரி,
பாமக வாங்கிய வாக்குகள் - 29.54 % (அதிமுக+2 கம்யூனிஸ்டுகள்+மதிமுக)
திமுக வாங்கிய ஓட்டுகள் - 47 %. ( திமுக+காங்கிரஸ்+விசி)
பாமக தோல்வி வித்தியாசம் - 17% க்கு மேல்.

தருமபுரியின் அரூர் தொகுதியில் கணிசமான கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். தற்போதயை சட்ட மன்ற உறுப்பினர் கூட கம்யூனிஸ்ட் தான். இந்த 29 சதவீதத்தில் அதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் போக பாமகவின் வாக்குகள் எவ்வளவு இருக்க முடியும்?. மிக சொற்பமாகத் தானே. இன்னும் தருமபுரியை பாமக கோட்டை என ஏமாற்ற முடியாதே. :)

அரக்கோணம்
பாமக - 26.32% - இதிலும் 4 கூட்டணி கட்சிகள் வாக்குகள் போக பாமகவின் வாக்குகள் சொற்பமாகவே இருக்கு.
திமுக - 36%
பாமக தோல்வி வித்தியாசம் - 9%க்கு மேல்.

ஸ்ரீபெரும்புதூரில் மட்டுமே குறைவான வாக்குகள் வித்தியாசம் : 3.16%

திருவண்ணாமலை
பாமக - 34%
திமுக - 52%
தோல்வி வித்தியாசம் - 18%

கள்ளக்குறிச்சி
பாமக - 34%
திமுக - 48 %
தோல்வி வித்தியாசம் - 14%

சிதம்பரம்
பாமக - 29%
விசி - 38%
தோல்வி வித்தியாசம் - 9%

புதுச்சேரி
பாமக - 36%
காங்கிரஸ் -52%
தோல்வி - 16%

பாமக வாங்கிய வாக்குகளில் , 4 கூட்டணிக் கட்சிகள் வாக்குகள் போக பாமக எவ்வளவு?. இவ்வளவு நாளா எப்படி எல்லாம் மருத்துவர் ஏமாத்தி இருக்கிறார் பாருங்க. அவர் பலம் என்னன்னே தெரியாம ஒவ்வொரு முறை அவர் தாவும் போதும் இஷ்டத்துக்கு எண்ணிக்கையை சேர்த்துக் கொடுத்திருக்காங்க. பாமகவிற்கென்று தனி வாக்கு வங்கி கிடையாது. ( யார்னா ஒரு வங்கி ஆரம்பிச்சிக் குடுங்கய்யா) . இவர்கள் வாங்கியதும் பெருமளவில் அதிமுகவின் வாக்குகள் மட்டுமே. இனியாவது மருத்துவர் தன் பலம் அறிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.