பிராணிகள் ஆர்வலர் என்ற வகையில் மேனகா காந்தி மீதும் எப்போதுமே பெரிய மரியாதை உண்டு. என் அசைவ உணவு பழக்கத்தை விட்டதற்கு அவரும் ஒரு காரணம். அவர் காங்கிரசை எதிர்த்தாலும் கூட குறை சொல்லும் அளவுக்கு எந்த முறைகேடுகளோ தரம் தாழ்ந்த அரசியலோ செய்ததில்லை என்றே நினைக்கிறேன். பிஜேபியில் இருக்கும் சில மரியாதைக்குரியவ்ர்களில் ஒருவர். ஆனால் அவர் மகன் வருண்காந்திக்கு திடீர் என்று இந்துத்துவ அரசியல்வாதி ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது போலும். மோடியைப் பார்த்து கெட்டுப் போய்விட்டார் போல.
சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
வருண் உதிர்த்த முத்துக்கள்.. “
அவர்கள் (முஸ்லிம்கள்) கரிமுல்லா, நசருல்லா என பயமுறுத்தும் பெயர்களை வைத்திருக்கிறார்கள். அவர்களை இரவில் பார்க்க பயமாக இருக்கிறது. எனக்கு ஒரு உறவுக்காரப் பெண் இருக்கிறார். அனைத்து வேட்பாளர்களும் இருந்த ஒரு ஆல்பத்தை பார்த்தாள். அவள் ஏழு வயதாக இருக்கும் போது சமாஜ்வாதி வேட்பாளர் படத்தைக் காட்டி “
அண்ணா , உங்கள் தொகுதியிலிருந்து பின்லேடன் போட்டியிட்டது எனக்கு தெரியாது”
என்றாள்....
முஸ்லிம் வேட்பாளார்கள் பின்லேடன் போல் இருக்கிரார்களாம். இப்படி அந்தப் பெண் சொன்னாரா அல்லது இவரே கதை அளக்கிறாரா தெரியவில்லை.
“
இது ”கை” இல்லை.. இது தாமரையின் சக்தி. இது முஸ்லிம்களின் தலையை வெட்டும். ஜெய் ஸ்ரீராம். யாராவது இந்துக்களை நோக்கி விரல்களை உயர்த்தினாலோ அல்லது இந்துக்கள் பலவீனமானவர்கள் அல்லது தலைவர்கள் இல்லாதவர்கள் என்று யாராவது நினைத்தாலோ, இந்தத் தலைவர்கள் வோட்டுக்காக அவர்களின் கால்களை நக்குவதாக நினைத்தாலோ நான் கீதை மீது ஆணையாக சொல்கிறேன். அவர்கள் கைகளை வெட்டிவிடுவேன்.”
என்ன ஒரு ஆதிக்க மனோபாவம்.. என்ன ஒரு திமிரான பேச்சு.. இது தான் பிரிவினையைத் தூண்டும் செயல். தேர்தல் வந்தாலே பிஜேபியினருக்கு சிறுபான்மை மக்களை மிரட்டுவதே தொழிலாகிவிட்டது. இவ்வளவு நாளாக பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். குஜராத்தில் நடபெற்ற மத அழிப்பு முயற்சிக்கு பிறகு வருண்காந்தி போன்றவர்கள் நேரடியாகவே மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.