காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Wednesday, May 27, 2009

புலிகளின் கடைசித் தொடர்பு - லண்டன் சண்டே டைம்ஸ்

இறுதிக் கட்ட நேரத்தில் நடேசனுடன் ஒரு தொலைபேசித் தொடர்பு...: லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் விளக்கம்
வீரகேசரி இணையம் 5/26/2009 9:09:49 AM -

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளா நடேசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோருடன் இறுதிக்கட்ட நேரத்தில் தான் கொண்டிருருந்த தொடர்பை லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் நேற்று விபரமாக எடுத்துக் கூறியுள்ளார்.

"அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு... ஆனால் சில மணி நேரத்தில் இறக்கப் போகும் ஒருவரின் அழைப்பு போன்று அது இருக்கவில்லை. அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஓரிடமும் இருக்கவில்லை போலும்" என சன்டே டைம்ஸ் செய்தியில் மேரி கொல்வின் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்"- செய்மதித் தொலைபேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில், கடைசியாக நிலைகொண்டிருந்த மிகச்சிறிய காட்டுப் பகுதிக்குள் இருந்து, 17.05.2009 ஞாயிறு பின்னிரவு நடேசன் என்னிடம் கூறினார். பின்புறத்திலிருந்து இயந்திரத் துப்பாக்கிச் சத்தங்கள் தெளிவாக எனக்குக் கேட்டன.

"ஒபாமா நிர்வாகம் மற்றும் பிரித்தானியா அரசிடம் இருந்து எங்களின் பாதுபாப்புக்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம். எங்கள் பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?" என்று அவர் கேட்டார்.

புலிகளுக்கும் சிறிலங்கா சிங்களவர்களுக்கும் இடையிலான 26 வருட போரில், வெற்றிகண்டுள்ள சிறிலங்கா இராணுவத்திடம், சரணடைவது மிக அபாயமானதென்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

8 வருடங்களுக்கு முன்பிருந்தே நடேசன், புலித்தேவன் ஆகியோரை எனக்குத் தெரியும். அப்போது தீவின் 3 இல் 1 பங்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இப்போது, இவர்கள் இருவரும் தங்களோடு இருந்த ஏனைய 300 போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் (பலர் காயமடைந்திருந்தார்கள்) காப்பாற்றுவதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் கையால் தோண்டிய குழிகளுக்குள் அவர்களோடு பதுங்கியிருந்தனர்.

கடந்த பல நாட்களாகவே புலிகளின் தலைமைக்கும், மற்றும் ஐ.நாவுக்கும் இடைப்பட்ட மத்தியஸ்தராக நான் இருந்து வந்தேன். நடேசன் என்னிடம் 3 விடயங்களை ஐ.நாவுடன் பறிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்:

ஆயுதங்களைக் கீழே போடுவதாக.....

தாம் ஆயுதங்களைக் கீழே போடுவதாகவும், தமது பாதுகாப்புக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உத்தரவாதம் தர வேண்டுமென்றும், தமிழர்களுக்கு மற்றுமொரு அரசியல் தீர்வு எடுக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கூடாக நான் கொழும்பில் இருந்த ஐ.நா.விசேட தூதுவர், விஜய் நம்பியாரோடு தொடர்பு கொண்டேன். புலிகளின் சரணடைதலுக்கான கோரிக்கைகளை நான் அவருக்குத் தெரியப்படுத்தினேன். அவரும், தான் அதை சிறிலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்த நடவடிக்கை சமாதானம் வருவதற்கான ஓர் அறிகுறியாகவே எனக்குத் தோன்றியது. எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் பதுங்குக் குழிக்குள் இருந்தவாறு சிரித்த முகத்துடன் ஒரு படத்தை தொலைபேசியில் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார்.

கடைசி ஞாயிறு இரவில், சிறிலங்கா இராணுவம், மிக நெருங்கி வந்த போது, புலிகளிடன் இருந்து, எந்தவித அரசியல் கோரிக்கையும் புகைப்படங்களும் கிடைக்கவில்லை. முன்னர் சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க நடேசன் மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது, அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். புலிகளின் பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை அவசியம் தேவை என்றும் கூறினார்.

நியூயோர்க்கில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஒன்றினூடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன். அப்போது அங்கே நேரம் காலை 5:30 ஆக இருந்தது. புலிகள் ஆயதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன்.

வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரி...

அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் சரணடைதலுக்கான பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகக் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார்.

சரணடைதலின் சாட்சிக்கு நம்பியாரும் வடக்குக்குப் போகத் தேவையில்லையா என்று நான் அவரிடன் கேட்டேன். அதற்கு அவசியமில்லையென்றும், வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்படியும் நம்பியார் கூறினார்.

லண்டனில் அப்போது நேரம் ஞாயிறு பின்னிரவு. நடேசனுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி எடுத்துத் தோல்வியடைந்தேன். தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொடர்புக்கு அழைத்து நம்பியாரின் செய்தியைத் தெரிவித்தேன்.

தென் ஆசியத் தொடர்பிலிருந்து திங்கள் காலை 5.00 மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவருக்கும் நடேசனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் நினைக்கிறேன் எல்லாமே முடிந்து விட்டது, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று.

சரணடைதல் பிழையானது ஏன்?

அன்று மாலை, சிறிலங்கா இராணுவம் அவர்களது உடல்களைக் காட்டியிருந்தார்கள். சரணடைதல் பிழையாகிப் போனது ஏன்? விரைவில் இதனை நான் கண்டுபிடிப்பேன்.

ஞாயிறு இரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவையும் நடேசன் தொடர்பு கொண்டுள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். சந்திரநேரு உடனடியாக ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டதாக அறிகிறேன்.

பிந்திய மணித்தியாலங்களில் நடந்தவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

"ஜனாதிபதி தான் நடேசனுக்கும் அவர் குடும்பத்துக்கும் முழுப் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்திருந்தாரே...? தன்னோடு 300 மக்கள் உள்ளார்கள் என நடேசன் கூறியிருந்தார், சிலர் காயப்பட்டும் இருந்தார்கள்.

நான் ஜனாதிபதியிடம், "நான் நேரில் போய் அவர்களது சரணடைதலை ஏற்கிறேன்" எனக் கூறினேன். அதற்கு ராஜபக்ஷ, "இல்லை, எங்கள் இராணுவம் மிகவும் பெருந்தன்மையும் கட்டுப்பாடுமுடையது. நீங்கள் போர் நடக்கும் இடத்துக்குச் சென்று உங்கள் வாழ்க்கையை இடருக்குள்ளாக்கத் தேவையில்லை" என்று கூறினார்.

பசில், ஜனாதிபதியின் சகோதரர், என்னை அழைத்து, "அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், அவர்கள் வெள்ளைக் கொடியை ஏந்த வேண்டும்" என்றவர், அவர்கள் தொடர வேண்டிய பாதையையும் கூறினார்." இப்படிச் சந்திரநேரு என்னிடம் கூறினார்.

சந்திரநேரு நடேசனை காலை 6:20 மணிக்குத் தொடர்பு கொண்டாராம். துப்பாக்கிச் சூட்டின் சத்தம் அப்போதும் கேட்டுக் கொண்டிருந்ததாம்.

"நாங்கள் தயார்." நடேசன் சந்திரநேருவிடம் கூறினார். "நான் வெளியே வந்து வெள்ளைக் கொடியை ஏற்றிப் பிடிக்கப்போகிறேன்" என்றார்.

சந்திரநேரு, "கொடியை உயர்த்திப்பிடி சகோதரனே-அவர்களுக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை மாலையில் சந்திக்கிறேன்" என்று கூறியிருந்ததாக அறிகின்றேன்.

தப்பி வந்தவர் தந்த விபரம்

கொலையிடத்தில் இருந்து தப்பித்து கூட்டத்துடன் வந்திருந்த ஒரு தமிழர் அதன்பின் என்ன நடந்தது என்பதை விவரித்தார். இவர் பின்னர் உதவிப் பணியாளர் ஒருவரோடு கதைக்கும்போது,

"நடேசனும் புலித்தேவனும், ஆண்களும் பெண்களுமுள்ள கூட்டத்தோடு, வெள்ளைக் கொடியோடு சிறிலங்கா இராணுவத்தை நோக்கி நடந்து வந்தார்கள். இராணுவம் அவர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தது.

நடேசனின் மனைவி, ஒரு சிங்களப் பெண்மணி. அவர் சிங்களத்தில் கத்தினார். "அவர்கள் சரணடையத்தானே வந்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களைச் சுடுகிறீர்களே..." என்ற அவரது மனைவியும் சுடப்பட்டார். சரணடைய வந்த சகலருமே கொல்லப்பட்டார்கள்". விபரம் கூறிய அந்தத் தமிழ் நபர் இப்போது தனது உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கின்றார்.

ஜனாதிபதியாலும் அவர் சகோதரராலும் விரட்டப்பட்டதால், சந்திர நேரு இப்போது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக, ஐ.நாவின் தூதுவராக வந்த நம்பியாரின் பங்களிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அவரின் சகோதரர், சரிஷ், 2002 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக இருந்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் தலைமைக் கட்டளை அதிகாரி, சரத் பொன்சேகாவுக்கு ஒரு சிறந்த இராணுவத் தலைவனின் தன்மைகள் உள்ளன என்று சரிஷ் ஒரு தடவை பாராட்டியுமுள்ளார்.

சில பயங்கரவாத நடவடிக்கைகளால் புலிகள் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், நடேசனும் புலித்தேவனும், தமிழர் உரிமைப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வையே காண விரும்பியிருந்தார்கள். உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவர்களாகியிருப்பார்கள்."

இவ்வாறு லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் தெரிவித்துள்ளார்.

நன்றி : Express News.

Saturday, May 23, 2009

நீங்கள் கேட்ட எம்பி : மாணிக் தாகூர்

விருதுநகரில் வைகோவைத் தோற்கடித்த மாணிக்தாகூர் இப்போது செயலில் இறங்கிவிட்டார். இவர் ராகுல்காந்தியின் நேரடித் தொடர்பில் இருப்பவர். ராகுலின் விருப்பத்தின் பேரிலேயே விருதுநகர் வேட்பாளராகி வென்றவர். ராகுல்காந்தி நடத்திக் கொண்டிருக்கும் இளைஞர் பாசறையில் தீவிரமாக பங்காற்றுபவர்.

திரு.மாணிக் தாகூருக்கு விருதுநகரில் ஏற்கனவே தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. மக்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள அது மட்டும் போதாது என்பதால் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்ககளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பதிவை எழுதும் நேரத்தில் கூட அதற்கான வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார். எல்லா அலுவலகங்களிலும் கட்சி சாராத பணியாளர்களை தான் நியமிக்க வேண்டும் என்பதில் மாணிக் தாகூர் உறுதியாக இருக்கிறார்.

அனைத்து அலுவலகங்களும் இணையம் மூலம் இணைக்கப் பட்டிருக்கும். தொகுதி மக்கள் எந்த நேரத்திலும் தங்கள் கோரிக்கைகளை அருகில் இருக்கும் அலுவலங்கங்களில் தெரிவிக்கலாம். அவைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப் படும். மாதம் ஒரு முறை அந்தந்த சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்து அவைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

இன்னும் சில நாட்களில் அலுவலக பணிகள் முடிந்து விடும். பிறகு அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் ஆகிய விவரங்கள் வெளியிடப் படும். விருதுநகர் தொகுதியை சேர்ந்த பதிவர்கள் அங்கு மேற்கொள்ளப் பட வேண்டிய வளர்ச்சிப் பணிகளைப் பற்றிய விவரங்களை சொன்னால் அவை அனைத்தும் மாணிக் தாகூர் அவர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்லப் படும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Thursday, May 21, 2009

திமுக வெளியிலிருந்து ஆதரவு

அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திமுக மத்திய அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளது. திமுக விரும்பிய எண்ணிக்கையிலும் விரும்பிய துறைகளான ரயில்வே மற்றும் சுகாதாரத்துறையை பெருவதிலும் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

திமுக 5 கேபினெட் அமைச்சர் பொறுப்பும் 4 இணை அமைச்சர் பதவியும் கேட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் 7 வரை கொடுக்க சம்மத்தித்ததாக அதன் செய்தித் தொடர்பாளார் அறிவித்துள்ளார்.

நினைவஞ்சலி : ராஜிவ்காந்தி


பாரத முன்னாள் பிரதமர் உயர் திரு. ராஜிவ்காந்தி அவர்களின் 18வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது.

Wednesday, May 20, 2009

தமிழக டகால்ட்டி கட்சிகள் - 1

இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. அதில் முக்கிய்மானது தமிழகத்தில் பிலிம் காட்டிக் கொண்டிருந்தவர்களின் வண்டவாளம் தெரிய வந்ததே. காங்+திமுக கூட்டணி 12 இடங்களில் தோற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசங்கள் மிகவும் குறைவாகவே பெற்று தோற்றிருக்கிறார்கள். 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் இருந்து 6 சதம் வரை குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். திருப்பூர் மட்டும் அதிக பட்சமாக 9 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம். ஈரோடு , திருப்பூர், கோவை மற்றும் பொள்ளாச்சியில் கொங்கு முன்னேற்றப் பேரவையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டும் குறைவான வித்தியாசத்திலேயே காங்கிரஸ் கூட்டணி தோல்வி. இத்தனைக்கும் இந்த பகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் மட்டுமே கூட்டணி. விடுதல சிறுத்தைகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்ற 12 இடங்களில் 2, 3 தொகுதிகள் தவிர மற்ற அனைத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் வாக்குகள் தான். விசியால் எந்த ஆதாயமும் இல்லை. எனவே இந்த குறைந்த வாக்கு வித்தியாச தோல்விகளை சரி செய்து விட முடியும்.

ஆனால் அதிமுக கூட்டணி தோற்றிருக்கும் இடங்களைப் பாருங்கள். முதலில் பாமக. தமிழகத்தின் வட மாவட்டங்களில் தங்களுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாக ஊரை ஏமாற்றுபவர்கள்.

தருமபுரி,
பாமக வாங்கிய வாக்குகள் - 29.54 % (அதிமுக+2 கம்யூனிஸ்டுகள்+மதிமுக)
திமுக வாங்கிய ஓட்டுகள் - 47 %. ( திமுக+காங்கிரஸ்+விசி)
பாமக தோல்வி வித்தியாசம் - 17% க்கு மேல்.

தருமபுரியின் அரூர் தொகுதியில் கணிசமான கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். தற்போதயை சட்ட மன்ற உறுப்பினர் கூட கம்யூனிஸ்ட் தான். இந்த 29 சதவீதத்தில் அதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் போக பாமகவின் வாக்குகள் எவ்வளவு இருக்க முடியும்?. மிக சொற்பமாகத் தானே. இன்னும் தருமபுரியை பாமக கோட்டை என ஏமாற்ற முடியாதே. :)

அரக்கோணம்
பாமக - 26.32% - இதிலும் 4 கூட்டணி கட்சிகள் வாக்குகள் போக பாமகவின் வாக்குகள் சொற்பமாகவே இருக்கு.
திமுக - 36%
பாமக தோல்வி வித்தியாசம் - 9%க்கு மேல்.

ஸ்ரீபெரும்புதூரில் மட்டுமே குறைவான வாக்குகள் வித்தியாசம் : 3.16%

திருவண்ணாமலை
பாமக - 34%
திமுக - 52%
தோல்வி வித்தியாசம் - 18%

கள்ளக்குறிச்சி
பாமக - 34%
திமுக - 48 %
தோல்வி வித்தியாசம் - 14%

சிதம்பரம்
பாமக - 29%
விசி - 38%
தோல்வி வித்தியாசம் - 9%

புதுச்சேரி
பாமக - 36%
காங்கிரஸ் -52%
தோல்வி - 16%

பாமக வாங்கிய வாக்குகளில் , 4 கூட்டணிக் கட்சிகள் வாக்குகள் போக பாமக எவ்வளவு?. இவ்வளவு நாளா எப்படி எல்லாம் மருத்துவர் ஏமாத்தி இருக்கிறார் பாருங்க. அவர் பலம் என்னன்னே தெரியாம ஒவ்வொரு முறை அவர் தாவும் போதும் இஷ்டத்துக்கு எண்ணிக்கையை சேர்த்துக் கொடுத்திருக்காங்க. பாமகவிற்கென்று தனி வாக்கு வங்கி கிடையாது. ( யார்னா ஒரு வங்கி ஆரம்பிச்சிக் குடுங்கய்யா) . இவர்கள் வாங்கியதும் பெருமளவில் அதிமுகவின் வாக்குகள் மட்டுமே. இனியாவது மருத்துவர் தன் பலம் அறிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.

Monday, May 18, 2009

காங்கிரஸ் + திமுக கூட்டணி தோல்வி - ஒரு படப் பார்வை

மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தான் தோல்வி. விரைவில் சரி செய்தால் நல்லது. மின் தடை இல்லாமல் இருந்தாலே போதும். இனி எல்லாம் சுபமே. ;)

Sunday, May 17, 2009

காங்கிரஸ் தலைவர்கள் தோல்வி - ஈழப் பிரச்சனைக் காரணமில்லை

தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலர் இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டார்கள். அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தோல்விக்கும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இணையத்தில் எழுதும் சில டைம்பாஸ் அரசியல் நிபுணர்கள் , காங்கிரஸ் தலைவர்கள் தோல்விக்குக் காரணம் ஈழத் தமிழர் அனுபவிக்கும் கொடுமைகளுக்குக் காரணம் காங்கிரஸ் என்ற பித்தலாட்ட பிரச்சாரமும் அதனை செய்த பாரதிராஜா, சீமான் போன்ற வேஷதாரிகளும் தான் என அளந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அரசியல் அறிவைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் தான் இந்த பதிவைப் போட வேண்டியதாகிவிட்டது.

தங்கபாலு 50,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வி.
சேலம் மாநகரம் திமுகவின் கோட்டை. ஆனால் மொத்த மாவட்டமும் பார்த்தால் அதிமுக செல்வாக்கு அதிகம். சென்ற முறை வெற்றிக்குக் காரணம் பாமக, மதிமுக, 2 கம்யூனிஸ்டுகள் ஆகியோரின் வாக்குகளும் கிடைத்ததால் தங்கபாலு வெற்றி பெற்றார். இப்போது இவர்கள் அனைவரும் அதிமுக கூட்டணி. நிச்சயம் இவர்கள் அனைவருக்கும் சேர்த்து 50000 வாக்குகளுக்கு மேல் வாக்கு வங்கி இருக்கு. எனவே ஈழப் பிரச்சனைக்கும் தங்கபாலு தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஈரோட்டில் இளங்கோவன் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
இதற்கு முதல் காரணம் இவர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை என்பது தான். திமுக மற்றும் காங்கிரசில் இருக்கும் ஒரு பகுதி கவுண்டர்கள் கூட மதிமுகவின் கணேச மூர்த்திக்கு வாக்களித்தார்கள். எல்லாம் சாதிப் பாசம். கூடவே கொமுபே வேட்பாளர் வாங்கிய 1 லட்சம் ஓட்டுகள். இந்த ஓட்டுகளில் பெரும்பாலானவை காங்கிரஸ்+திமுக கூட்டணிக்கு வர வேண்டியவை. காரணம் கடைசியில். மிக முக்கியமாக மின் தடை. ஈரோடு மாவட்டம் முழுதும் விசைத்தறிகள் தான் மிகப் பெரிய தொழில். மின் தடையால் வேலை இழந்தவர்கள் மிக மிக அதிகம். அவர்களின் கோபம் திமுக கூட்டணிக்கு எதிராக திரும்பியது. எனவே ஈழப் பிரச்சனைக்கும் இளங்கோவன் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

திருப்பூரில் கார்வேந்தன் 90000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
இங்கும் இளங்கோவனுக்கு பாதகமாக அமைந்த அதே விஷயங்கள் தான். மின் தடை மற்றும் கொமுபே வாங்கிய 95000 வாக்குகள். பெரிய வாக்கு வித்தியாசம் எற்படக் காரணம், கம்யூனிஸ்டுகள் ஓரளவு செல்வாக்குள்ள தொகுதி தான் திருப்பூர். எனவே அதிமுகவிற்கு அது பெரிய பலம். எனவே ஈழப் பிரச்சனைக்கும் கார்வேந்தன் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கோவை பிரபு 40,000 வித்தியாசத்தில் தோல்வி
இங்கும் மின் தடை மற்றும் கொமுபே வாங்கிய 1,28,000 வாக்குகள் தான் தோல்விக்க்குக் காரணம். மின்தடையால் தொழிற்சாலைகளில் 3 ஷிப்டுகள் 2 ஷிப்டுகளாக குறைக்கப் பட்டது. இதனால் வேலை இழப்பும் வருமான இழப்பும் மிகப் பெரிய அளவில் இருக்கு. லக்ஷ்மி மில்ஸ் மாதிரி மிகப் பெரிய குழுமத்தில் சில யூனிட்கள் கூட மூடப் பட்டு ஆயிரக் கணக்கானவர்கள் வேலை இழந்தார்கள். இதனால் திமுகவினரே ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலையில் தான் இருந்தார்கள். அவர்களின் வாக்குகள் கொமுபேக்கு போனது. இது என் நேரடியாக பார்த்த அனுபவம். மேலும் கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணிக்கு பலம். வெற்றி பெற்றவரும் கம்யூனிஸ்டு தான். அதோடு சேர்த்து கோவையில் பலமான சக்திகளாக இருக்கும் காங்கிரசின் ஒரு பிரிவினைரை பிரபு கண்டுகொள்ளவே இல்லை. அவர் இஷ்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்தல் சமயத்தில் மாற்றி அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார். இதை செய்யாமல் இருந்தாலே வென்றிருப்பார். எனவே ஈழப் பிரச்சனைக்கும் பிரபு தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மணிஷங்கர் ஐயர் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
மணிசங்கர் ஐயர் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மெற்கொண்டிருப்பதாக சொன்னாலும் கூட பெரும்பாலும் தொகுதியில் இல்லாமல் டில்லியிலேயே இருந்திருக்கிறார். அந்த அதிருப்தி மற்றும் ஜவஹிருல்லா பிரித்த முஸ்லிம் ஓட்டுகள் மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் 4 கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து 30000 வாக்குகளாவது இருக்கும். ஜவாஹிருல்லா 20000+ அதிமுக கூட்டணியின் 30000 வாக்குகள் சேர்ந்தாலே 50000 வாக்குகளுக்கு மேல் அதிமுகவிற்கு கிடைக்கிறது. எனவே ஈழப் பிரச்சனைக்கும் மணிசங்கரின் தோல்விக்கும் எந்த தொடர்பும் இல்லை.


கொங்கு மண்டலத்தில் கொமுபே வாங்கிய ஓட்டுகள் ஏன் காங்+திமுக கூட்டணியை பாதித்திருக்கிறது என்று சொல்கிறேன் என்றால், அவர்கள் பலமில்லாத மற்ற தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. தேமுதிக பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை. ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, கரூர் ஆகியத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி தான் வென்றிருக்கிறது. எனவே கொமுபே ஓட்டுகளுக்கும் அதிமுக கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. ஆகவே கொமுபே பிரித்த ஓட்டுகள் திமுக கூட்டணிக்கு வர வேண்டியது தான். பொதுவாக கவுண்டர்கள் ஓட்டுகள் அதிமுகவிற்கு தான் என்ற கருத்து உண்டு. ஆனால் அது பொய் என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கூட்டணிகளின் தயவால் தான் இந்தப் பகுதிகளின் அதிமுக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இந்த பகுதிகளுக்காக அடுத்து வரும் தேர்தல்களில் கொமுபே க்கு டிமாண்ட் அதிகரிக்கலாம். ஹ்ம்ம்.. அடுத்த பாமக ரெடி . :(

சிலர் புலம்புவது, காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு. இதைக் கேட்டால் சிரிப்பு தன் வருகிறது. அதிமுகவிடம் காசு இல்லையா? பாமகவிடம் காசு இல்லையா? அவர்கள் எல்லாம் காசே கொடுக்கவில்லையா? காசு தான் ஓட்டு வாங்கும் என்றால் கரூரில் கேசி.பழனிச்சாமி தான் வென்றிருப்பார். அவர் செய்யாத செலவா?.ஆனால் தம்பிதுரை தான் ஜெயிச்சார். காரணம், அங்கும் மின் தடை மிகப் பெரிய பிரச்சனை. கரூரும் தொழில்வளம் மிக்க மாவட்டம். மின் தடையால் வேலை இழந்தவர்கள் அங்கும் அதிகம். எனவே காங்கிரஸ் மற்றும் திமுகவில் சில வேட்பாளர்களின் தோல்விக்கும் ஈழப் பிரச்சனைக்கும் பாரதிராஜா, சீமான் போன்ற நச்சுப் பாம்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த சினிமாக் காரர்களின் முகத்தில் மக்கள் மலத்தைப் பூசி இருக்கிறார்கள் என்பதே நிஜம். இவர்கள் பரப்பிய பொய்யை மக்கள் நம்பி இருந்தால் அதிமுக போட்டியிட்ட 23 தொகுதிகளின் வெறும் 9 தொகுதிகள் தான் ஜெயித்திருக்குமா? காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் 16 . வென்றவை 9 தொகுதிகள். அதிமுக போட்டியிட்டது 23 இடங்கள். வென்றவை 9 மட்டுமே. மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். ஆகவே இணையத்து டைம்பாஸ் அரசியல் நிபுணர்களே , குய்யோ முறையோன்னு கத்தாம எதார்த்தத்தை கொஞ்சம் யோசிங்க. சினிமாக் காரனுங்க பின்னாடி சுத்தாதிங்க. அவனுங்க கோடி கோடியா சம்பாதிக்கிறானுங்க. கொஞ்ச நாள் சீன் போட்டு சுத்தறதால அவனுங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்கு அப்படியா? சொல்லுங்க.

ஈழப் பிரச்சனை தான் முக்கியம்னு மக்கள் நினைச்சிருந்தா, அதை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்த கம்யூனிஸ்டுகள் ஏன் தோற்றார்கள்? ஈழத்து நாயகனாக நினைத்து உதார் விட்டு திரிஞ்ச வைகோ ஏன் தோற்றார்? ஈழம் தான் உயிர் மூச்சென்று நாடகம் போட்ட பச்சோந்தி ராமதாஸ் கட்சி ஏன் தோற்றது? ஈழம் வாங்கித் தருவேன் என்று தேர்தலுக்காக நாக்கைத் திருப்பிய “ ராஜபக்‌ஷேவின் பெண் குரல்” ஜெயலலிதா கட்சிக்கு ஏன் இவ்வளவுப் பெரிய தோல்வி?.

தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகள்...!

பாமகவின் ராஜதந்திரம் அடுத்த பதிவு...

Monday, May 4, 2009

உங்கள் ஓட்டு ”இலங்கைத் தமிழர்” நலன் காக்கும் புரட்சித் தலைவிக்கே.

தனி ஈழம் அமைய வேண்டுமானால் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கே ஓட்டுப் போடுங்கன்னு ”உணர்வாளர்கள்” எல்லாம் கூவிக் கூவி ஓட்டுக் கேக்கறாங்க. ஏனுங்கணா இப்டி கூவறிங்கன்னு கேட்டா, அவங்க தான் தனி ஈழம் பெற்றுத் தருவாங்களாம். பாவமா இருக்கு இவங்களைப் பார்த்தால்.

ஜெயலலிதாவோட குரலில் அலைபேசிகள் வழியாகவும் பண்பலை ரேடியோக்கள் வழியாகவும் நிமிடத்துக்கு ஒரு முறை ஓட்டுக் கேட்கும் விளம்பரம் வருகிறது. அதில் “இலங்கைத் தமிழர் நலன் காக்க” என்று தான் சொல்கிறார். ஈழத் தமிழர் நலன் என்று சொல்லவில்லை. பேச்சுக்குக் கூட ஈழம் என்ற வார்த்தையை உபயோகிக்க மறுப்பவர் ஈழம் பெற்றுத் தருவாராம். தேர்தல் முடியட்டும். அப்புறம் பாருங்க அம்மாவோட அருள் வாக்குகள் எப்டி இருக்குன்னு. போட்ட கையெழுத்தையே இல்லை என்று சொன்னவர் தன் பெயரில் வந்த காசோலையை பணமாக்கிவிட்டு அனுப்பியவர் யார் என்று தெரியாது என்று சொன்னவர் ஈழம் அமைந்தால் இலங்கையின் ஒருமைப் பாடு பாதிக்கும் என்று மீண்டும் சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?. என்னவோ போங்க.