காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Sunday, September 6, 2009

தலைவர் ராகுல்காந்தி தமிழக சுற்றுப் பயண விவரம்

மிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பணிக்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி 3 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகிறார். செப்டம்பர் 8,9,10 ஆம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர்களை சந்திக்கிறார். சுற்றுப் பயண விவரம்.

செப்டம்பர் 8, 2009
  • காலை 10.30 நாகர்கோவிலில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • காலை 11.30க்கு திருநெல்வேலியில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பிற்பகல் 1 மணிக்கு விருதுநகரில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பிற்பகல் 3.30 மணிக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழக மாணவர்களுடன் சந்திப்பு.
  • மாலை 4 மணிக்கு இளைஞர் SC/ST மாநாட்டில் பங்கேற்கிறார்.

செப்டம்பர் 9, 2009
  • காலை 9.30 மணிக்கு தஞ்சாவூரில் இளம் விவசாயிகளுடன் சந்திப்பு
  • காலை 10.30 மணிக்கு விழுப்புரத்தில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • பகல் 12 மணிக்கு வேலூர் CMC கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் மருத்துவர்களுடன் சந்திப்பு
  • பிற்பகல் 3 மணிக்கு சென்னை அண்ணாப் பல்கலைக் கழக மாணவர்களுடன் சந்திப்பு.
  • மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு.
  • மாலை 6.30 மணிக்கு சென்னையில் பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் நிறுவனர்களுடன் சந்திப்பு.
செப்டம்பர் 10, 2009
  • காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு
  • காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரியில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • காலை 11 மணிக்கு கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பு.
  • பகல் 12.30க்கு சேலத்தில் தொழிலாளர்களுடன் சந்திப்பு.
  • பகல் 1.30 மணிக்கு சேலத்தில் இளைஞர்களுடன் சந்திப்பு.
  • மாலை 3 மணிக்கு கோவையில் இளைஞர்களுடன் சந்திப்பு
  • மாலை 4 மணிக்கு கோவை காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு.
  • மாலை 5 மணிக்கு கோவை இளம் தொழில் முனைவோர்களுடன் சந்திப்பு.


பத்திரிக்கை செய்தி:
"கிராமங்களில் இளைஞர்களை தேடி...'கட்சியை வளர்க்க ராகுல் வியூகம் : மதுரைக்கு ராகுல் வரும் நிகழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டுவிட் டது. ஆனால் இத்தகவல் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சில நாட்களுக்கு முன் வரை தெரியாது. ஒரு மாதத்திற்கு முன்பே, டில்லியில் இருந்து வந்து சில இளைஞர் காங்., நிர்வாகிகள் மதுரை லாட்ஜ்களில் தங்கி உள்ளனர்.உள்ளூர் காங்., தலைவர் களை இவர்கள் தொடர்பு கொள்ள வில்லை. அவர்களின் வாகனங் களை பயன்படுத் தவில்லை. ஒரு டீ கூட வாங்கிக் குடிக்கவில்லை. தனித்தனியே இரு சக்கர வாகனங்களில் பல்வேறு கிராமங்களுக்கு சென்ற இவர்கள், எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்களை சந்தித் தனர். காங்.,கில் இணைந்து பணியாற்ற விரும்புவோரை தேர்வு செய்து, அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் இ-மெயில் மூலம் தினமும் ராகுலுக்குஅனுப்பினர்.

அவற்றை அன்றன்றைக்கு பார்த்த ராகுல், டில்லியில் இருந்தபடியே சில யோசனைகளை தெரிவித்தார். இப்படியே இவர்கள் இரண்டாயிரத்து 500 இளைஞர்களை தேர்வு செய்தனர். மீதி இரண்டாயிரத்து 500 பேரை தேர்வு செய்யும் பொறுப்பு மட்டும் உள்ளூர் காங்., நிர்வாகிகளுக்கு தரப்பட்டது.இப்படி, ரொம்ப கவனமாக பல நாட்கள் திட்டமிட்டு ராகுல் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது. ஒத்த கருத்துள்ள இளைஞர்களை சேர்த்து, எதிர்காலத்தில் காங்கிரசை வலுவான கட்சியாக்கும் யோசனையில் இந்நிகழ்ச்சிக்கு ராகுல் ஏற்பாடு செய்துள்ளார். சொன்னதை செய்த ராகுல்: கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சிதம்பரத்தை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்தார். காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ""தமிழகம் எனக்கு பிடிக்கும். லோக்சபா தேர்த லுக்குப் பிறகு அடிக்கடி தமிழகம் வருவேன். நிறைய இளைஞர் களை சந்தித்து கட்சியை வலுப்படுத்துவேன்,'' என்றார். சொன்னது போலவே தற்போது தமிழகத்தில் தீவிர சுற்றுப் பயணத்தை துவக்கி இளைஞர் களை சந்திக்கிறார் ராகுல்.

நன்றி : தினமலர்

Thursday, September 3, 2009

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆந்திராவில் மிகத்திறமையாகவும் மக்களின் நன் மதிப்புடனும் ஆட்சி செய்து பலத்தப் போட்டிகளுக்கிடையே ஆந்திர மக்களால் தொடர்ந்து இரண்டாவது முறையாக மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்தவருமான முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கும் அவருடன் பயணித்து மரணம் அடைந்த விமான ஓட்டிகள், அரசு அலுவலர்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.

  • பிறந்தது : ஜூலை 8, 1949
  • மருத்துவர்
  • நான்கு முறை ஆந்திர சட்ட மன்றத்திற்கும் நான்கு முறை பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
  • போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வென்றவர்.
  • இரண்டு முறை ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர்.
  • ஒரு முறை ஆந்திர சட்டசபை எதிர்கட்சித் தலைவராக இருந்தவர்.(1999-2004)
  • 2004 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 185 தொகுதி வெற்றிகளுடன் முதல்வராக இருந்தார்.
  • 2009 தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றி பெற்று முதல்வராகத் தொடர்ந்தார்.
  • 2009 பாராளுமன்றத் தேர்தலில் 33 தொகுதிகளில் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்.
  • செப்டம்பர் 2, 2009ல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அகில இந்திய அளவிலும் மிகப் பெரும் இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.