”இந்தக் கட்சிக்கார்ர்கள் நம் கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை. அதனால் தான் பள்ளிக் கூடம் திறக்கப்படவில்லை” என்றார் முதலமைச்சரின் உதவியாளர்.
”இது ஜனநாயக நாடு . மக்கள் தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம்.
அது அவர்களின் ஜனநாயக உரிமை. அதனால் அரசாங்கம் எல்லோருக்கும் பொதுவானது. உடனே இந்தக் கிராமத்துக்கு பள்ளிக் கூடம் திறக்கச் செய்யுங்கள்” - என்றார் காமராஜர்.
--------------
தங்கமே! தண் பொதிகைச்
சாரலே! தண்ணிலவே!
சிங்கமே! என்றழைத்துச்
சீராட்டுந்தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை!
துணையிருக்க மங்கையில்லை!
தூய மணி மண்டபங்கள்
தோட்ட்கள் ஏதுமில்லை!
ஆண்டிகையல் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே!
- கவியரசர் கண்ணதாசன்
காமராசர் தாலாட்டு.
-------------------------
காமராஜர் வாழ்க்கைக் குறிப்புகள்
1903 ஜுலை 15
குமாரசாமி - சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
1907 தங்கை நாகம்மாள் பிறப்பு.
1908 திண்ணைப் பள்ளியிலும், ஏனாதி நாயனார் வித்தியாவிலும் கல்வி பயின்றார்.
1909 சத்திரிய வித்தியாசாலாவில் சேர்க்கப்பட்டார்.
1914 ஆறாம் வகுப்பு படித்துக் கொண்ருக்கும்போது பள்ளி செல்வத்தை நிறுத்திக்கொண்டார்.
1919 ஏப்ரல் மாதம் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரசின் முழுநேர ஊழியரானார். இதே ஆண்டில் சத்தியமூர்த்தியை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.
1920 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார்.
1923 மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்.
1927 சென்னையில் ‘கர்னல் நீல்’ சிலையை அகற்றும் போராட்டம் நடத்தஅண்ணல்காந்திஜிடம்அனுமதிபெற்றார். ஆனால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே நீல் சிலை அகற்றப்பட்டது.
1926 மதுரைக்கு வருகைபுரிந்த சைமன் குழுவை எதிர்த்தார். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார்.
1936 காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி தலைவரானார். யுத்த நிதிக்குப் பணம் தரவேண்டாம் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்த்தால் அந்நிய அரசால் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறைக்கு அனுப்பட்டார்.
1941 மே - 31
சிறையிலிரிந்த காமராஜர் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1942-45
ஆகஸ்டு புரட்சியின் காரணமாக சிறைவாசம் அனுபவித்தார்.
1946 மே 16
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்தலில் வெற்றிப்பெற்றார்.
1949-1953
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் சென்றார்.
1954 பிப்ரவரி
மலாய் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலமைச்சர் இராஜாஜி ராஜினாமா செய்தார். நிலைமையை சமாளிக்க சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குக் காமராஜர் போட்டியிட்டு வென்றார்.
1954 ஏப்ரல் - 13
தமிழக முதலமைச்சரானார். இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டிட்டு வென்றார். 1963 வரை முதலமைச்சராக இருந்தார்.
1961 சென்னையில் மாநகராட்சி உருவாக்கிய காமராஜர் சிலையை நேரு திறந்து வைத்தார்.
1963 அக்டோபர் - 2
காமராஜர் திட்டத்தின் படி (K Plan) பதவியை ராஜினாமா செய்தார்.
1964 - 67
அனைத்திந்திய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
1964 மே - 27
பிரதமர் நேரு மறைந்தார். சாஸ்திரியை பிரதமராக்கினார் காமராஜர்.
1966 பிரதமர் சாஸ்திரி மறைந்தபோது இந்திரா காந்தி பிரதமர் ஆவதற்குத் துணை செய்தார்.
1966 ஜுலை 22
சோவியத் நாட்டில் இருபது நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
1967 பொதுத் தேர்தலில் காமராஜர் தோல்வியுற்றார். சி.என். அண்ணாதுரை முதல்வரானார்.
1969 நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1975 அக்டோபர் - 2
காமராஜர் மறைந்தார்.
1976 மத்திய அரசு காமராஜர் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. ‘பாரத ரத்னா விருது வழங்கியது.
1977 தமிழ்நாடு சட்டப்பேரவையில் காமராஜர் படம் குடுயரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியால் திறந்துவைக்கப்பட்டது.
1978 சென்னை தியாகராய தகரில் காமராஜர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்கியது தமிழக அரசு. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.
1984 ஜீலை - 15
விருதுநகரைத் தலைமை இடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டம் உருவாகியது.
நன்றி : http://www.perunthalaivar.org - இந்த தளத்தில் பெருந்தலைவர் காமராஜர் பற்றிய ஏராளமான தகவல்கள் இருக்கு.படம் உதவி : http://kamarajar.blogspot.com/
1 comments:
பெருந்தலைவரை போற்றுவோம்.. அவர் வாழ்க்கைமுறையை கடைபிடிப்போம்..
Post a Comment