இந்தத் தேர்தலிலும் சிலர் அந்த வேலைகளை செய்வதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் எல்லாம் கட்சிக்காக இதுவரை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். கட்சியின் ”மேலிடத்தில் மட்டும்” தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு வார்டு மெம்பர் தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சீட் வாங்கிடுவாங்க. குறிப்பிட்ட சிலருக்கே எல்லா தேர்தல்களிலும் வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருந்தால் கட்சிக்காக பாடுபடும் மற்றவர்கள் எப்படி மேலும் கட்சி வளர்க்க பாடுபடுவார்கள்.
- மாவட்டத் தலைவர் போன்ற பதவிகளில் உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது. அல்லது அவர்கள் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் வாய்ப்பு கேட்க வேண்டும். அப்போது தான் மக்கள் செல்வாக்கு பெற்ற மற்றொருவருக்கும் பொறுப்பு கிடைக்கும்.
- ஏற்கனவே ஏதேனும் ஒரு தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் இருப்பவருக்கு அந்த பதவிக் காலம் முடியும் வரை வேறுத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.
- உள்ளாட்சி அமைபுகளிலோ, சட்ட மன்றத்திலோ தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தற்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது.
- தற்போது உள்ளாட்சி அமைப்புகளிலோ சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ இருப்பவர்களின் தொகுதியில் அவர்களுக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு அடுத்த வாய்ப்பை வழங்க வேண்டும்.
- அதில் தேறாதவர்களுக்கு அடுத்து வாய்ப்புகள் வழங்கக் கூடாது.
- ஒரு முறை தோற்பவருக்கு குறைந்த பட்சம் அடுத்த ஒரு தேர்தலிலாவது போடியிட அனுமதிக்கக் கூடாது. வாக்கு வித்தியாசம் 25 சதவீதத்திற்குள் இருந்தால் மட்டும் அடுத்த தேர்தலில் வாய்ப்பளிக்கலாம்.
- இப்போது தமிழகத்தில் இருக்கும் நம் கட்சியின் 10 எம்பிக்கள் 35 எம்எல்ஏக்கள் பெயர் எத்தனை கட்சித் தொண்டனுக்கு முழுதாகத் தெரியும்?. 10 சதவீதம் தொண்டனுக்குக் கூடத் தெரியாது. காரணம், கட்சியின் செயல்பாடு அந்த அளவுக்குத் தான் இருக்கிறது. நேற்று முளைத்த கட்சிகள் கூட பொதுக் கூட்டம், மாநாடு, பேரணிகள் என்று எப்போதும் தொண்டர்களை உற்சாமகாக வைத்திருக்கின்றன.
- நூற்றாண்டு பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு, இருக்கும் தொண்டர்களை எல்லாம் திராவிடக் கட்சிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம்.
- உடனடித் தேவை உட்கட்சித் தேர்தல். தொண்டர்களிடம் செல்வாக்கு இருப்பவர்களே கட்சிப் பதவிகளில் இருக்க வேண்டும்.
- இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும். மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் பணி சிறப்பாகவே இருக்கின்றன. அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.
- தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்போரிடம் அந்த தொகுதியில் கட்சியில் மாணவர், இளைஞர் அணி, சேவாதளம் நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார , மாவட்ட நிர்வாகிகளின் பெயர்களைக் கேட்க வேண்டும். அவர்களை எல்லாம் எப்போதாவது சந்தித்திருக்கிறார்களா என்பதை எல்லாம் ஆராய வேண்டும். அதன் பின்பே அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
5 comments:
தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
இந்திராவின் மருமகளே வா, மறுமலர்ச்சி தா ! என்று வரவேற்கிறார்கள் !
:)
கூட்டணியில் இருந்து கொண்டே இப்படி 'கழகக்காரர்களை வெளியேறுங்கள்' என்று சொல்வது சரியா ?
ஆஹா.. கோவியாரே.. மெய் சிலிர்க்க வச்சிட்டிங்களே.. :)
இது முழுக்க முழுக்க எங்கள் கட்சி விவகாரம். ஒரு எழுத்தை மாற்றி மொத்த சரக்கையும் வீணடிக்கிறீரே தலைவா.. :))
//தேர்தல் வந்துவிட்டாலே கட்சியில் கலகக்காரர்கள் முளைத்துவிடுகிறார்கள். //
காமெடியா இருக்கே? :-)
// லக்கிலுக் said...
//தேர்தல் வந்துவிட்டாலே கட்சியில் கலகக்காரர்கள் முளைத்துவிடுகிறார்கள். //
காமெடியா இருக்கே? :-)//
உங்க பதிவுகள் மாதிரியா?
Post a Comment