காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Monday, April 13, 2009

நான் எப்போதும் காங்கிரஸ் விசுவாசி தான் - திருமா

சிதம்பரம்: நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியின் சிதம்பரம் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து வேட்பாளர் திருமாவளவனை அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில்,

காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனார் தான் என்னை 1999ல் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் கிடையாது.

இடையில் காங்கிரசுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் அரசியல் களத்தை தொடங்கிய நான் அந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யவில்லை. நான் நன்றி மறந்தவன் இல்லை.

அங்கு வழியில் சென்ற போராட்டக்காரர்களுக்கும், தோழர்களுக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டு கைகலப்பில் முடிவுற்றது. அது திட்டமிட்ட செயல் அல்ல. சில தீய நிகழ்வுகள் தூக்கிப் பிடிக்கப்பட்டன. ஊடகங்கள் அதை பெரிதாக்கிவிட்டன.

நான் பழிவாங்கும் நோக்கம் உடையவன் அல்ல. இதுகுறித்து நாங்கள் தவறு செய்யவில்லை என சம்பவம் நடந்த அடுத்த அரை மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சுதர்சனம், தங்கபாலு, வாசன், சிதம்பரம் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.

சொன்ன சொல்லை காப்பாற்றுவேன்...

தற்போது இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கட்சியான திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறேன். மிகப்பெரிய கூட்டணியில் போட்டியிடுவது இதுதான் முதன்முறை.

அதிமுக அணியில் நான் வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன் நான். உங்களுடன் தான் இருப்பேன் என கருணாநிதியிடம் கூறினேன். ஈழத்தமிழர் பிரச்னைக்காக யார் போராடினாலும் அவர்களுடன் நிற்பேன். அது வேறு. அரசியல் வேறு.

திருமாவளவன் திசை மாறிப் போய்விடுவான் என எதிர்பார்த்தார்கள். திமுக அணி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் வேறு அணிக்கு ஓடமாட்டோம் என்றேன். ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும், உலகத் தமிழர்களுக்காகவும் நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

எங்களுக்கு தேர்தல் அனுபவம் கிடையாது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் களப்பணியாற்ற வேண்டும் என்றார் திருமாவளவன்.


நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

11 comments:

said...

நிதானம் ஊண்டா?
அடப்பாவி!

said...

திருமா சார்,
அப்ப
http://tholthiruma.blogspot.com/2009/01/blog-post_1427.html
இந்த லிங்க்-ல இருக்குறது நீங்க சொன்னது இல்லையா. . .?
கொஞ்சம் விளக்குங்க சார்.

said...

is he asking us to forget Muthukumarn's death and his speech in mutuhukumar's funeral

said...

நான்கு நாளில் முடிந்த நாடகம் - பாவம் திருமாவளவன்

- இப்படி ஒரு பதிவு கூட இங்கே இருக்கே !

காமடி பண்ணாதிங்க பாஸ் !

said...

//ttpian said...

நிதானம் ஊண்டா?
அடப்பாவி//

:)

said...

// செவ்வானம் said...

திருமா சார்,
அப்ப
http://tholthiruma.blogspot.com/2009/01/blog-post_1427.html
இந்த லிங்க்-ல இருக்குறது நீங்க சொன்னது இல்லையா. . .?
கொஞ்சம் விளக்குங்க சார்.//

தேர்தல் முடியட்டும்.. நல்லா விம் பார் போட்டு விளக்குவாரு பாருங்க.

said...

// குப்பன்_யாஹூ said...

is he asking us to forget Muthukumarn's death and his speech in mutuhukumar's funera//

அவர் எதையும் மறக்க சொல்லவில்லை. உங்களைப் போன்றவர்கள் அவரைப் புனிதமானவராக நினைக்காமல் ஒரு சராசரி அரசியல்வாதியாக மட்டுமே நினையுங்கள் என்று தான் சொல்ல வருகிறார்.

said...

// கோவி.கண்ணன் said...

நான்கு நாளில் முடிந்த நாடகம் - பாவம் திருமாவளவன்

- இப்படி ஒரு பதிவு கூட இங்கே இருக்கே !

காமடி பண்ணாதிங்க பாஸ் !//

அந்த பதிவில் இருக்கும் சமாச்சாரங்களால் தானே இதை போட வேண்டியாதாகிவிட்டது கோவியாரே. இரண்டையும் படியுங்கள். காமெடி பன்றது யார்ன்னு தெரியும்.. :))

எப்படி எல்லாம் பேசியவர் எபப்டி எல்லாம் வந்து விழுகிறார் பாருங்கள் என்பதற்கு தான் இதை இங்கு போட்டேன். இதில் என் கருத்து என்ற எதையும் “உதிர்க்க”வில்லை. அந்த பதிவில் திருமாவளவன் மற்ற அரசியல்வாதிகள் போலத் தான் என்று சொல்லி இருந்தேன். அன்றைக்கு அவரை எல்லோரும் புனிதராக எழுதினார்கள். அது தவறு என்று அவர் வாயாலேயே சொல்லி இருக்கிறார். ;)

எங்கே திருமாவின் தீவிர ரசிகர் மோகன் கந்தசாமி? :))

said...

இப்படியெல்லாம் பேசினால்தான் தன் கட்சி நிற்கும் தொகுதிகளில் காங்கிரஸ்காரர்கள்(இருந்தால்),தங்களுக்கு ஓட்டு போடுவாங்கன்னு சொல்லி இருப்பார்!. நாம எவ்வளோ உதைச்சாலும் இவங்க நமக்கு ஓட்டு போடுறாங்களே ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சுக்குவார்! :). புத்தாண்டு வாழ்த்துகள் தலை!

said...

// நல்லதந்தி said...

இப்படியெல்லாம் பேசினால்தான் தன் கட்சி நிற்கும் தொகுதிகளில் காங்கிரஸ்காரர்கள்(இருந்தால்),தங்களுக்கு ஓட்டு போடுவாங்கன்னு சொல்லி இருப்பார்!. நாம எவ்வளோ உதைச்சாலும் இவங்க நமக்கு ஓட்டு போடுறாங்களே ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சுக்குவார்! :). புத்தாண்டு வாழ்த்துகள் தலை!//

அம்மா எப்டி எல்லாமோ கூப்ட்டும் திருமாவளவன் வரலையேங்கற காண்டு நல்லாவே தெரியுது.. வாழ்த்துகள் தலைவா. :)

said...

அரசியல் பேசினா நட்பு பாதிக்குமோவென்ற பயத்தில் மீ த எஸ்கேப்.