காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Thursday, April 30, 2009

மணிசங்கர் அய்யர் இணையதளம் - தலைப்பே கலக்குது போங்க.. :)

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான திரு,மனிஷங்கர் அய்யர் அவர்கள் தனக்கான அதிகாரப் பூர்வ இணையதளத்தை துவக்கி இருக்கிறார். அதில் அவர் வாழ்க்கை வரலாறு, பங்கேற்ற நிகழ்ச்சிகளின் விடியோ தொகுப்புகள், மயிலை தொகுதியில் நிறைவேற்றப் பட்ட நலத் திட்டங்கள், சாதனைகள் ஆகியவை மயிலாடுதுறை பாராளுமன்றத்துக்குட்பட்ட சட்ட மன்றத் தொகுதிகள் வாரியாகவும் பட்டியலிட்டிருக்கிறார். தொகுதியில் இருக்கும் அவர் அலுவலகங்களின் முகவரிகள், நிர்வாகிகள் முகவரிகள் , தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளையும் கொடுத்திருக்கிறார்.

தலைப்புக்கு ஐடியா குடுத்தது யாருங்க? :)). சும்மா கும்முன்னு இருக்குல்ல. மணி என்பது காங்கிரஸ் கொடி வண்ணத்திலும் சங்கர் என்பது திமுக கொடி வண்ணத்திலும் அய்யர் என்பது விசி கொடி வண்ணத்திலும் உறுவாக்கி இருக்கிறார்கள். மேலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் படமும் முகப்பில் போட்டிருக்கிறார்.

தமிழ் ஆங்கிலம் 2 மொழிகளிலும் தகவல்கள் இருக்கின்றன.

இணையதள முகவரி : http://www.manishankaraiyar.com/

2 comments:

said...

:-)

தேர்தல் முடிஞ்ச பின் கலர் மாற வாய்ப்பு உள்ளதா...?

said...

// ’டொன்’ லீ said...

:-)

தேர்தல் முடிஞ்ச பின் கலர் மாற வாய்ப்பு உள்ளதா...?//

உடனே என்று சொல்ல முடியாது.. ஆனால்.......... :))