காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Monday, May 4, 2009

உங்கள் ஓட்டு ”இலங்கைத் தமிழர்” நலன் காக்கும் புரட்சித் தலைவிக்கே.

தனி ஈழம் அமைய வேண்டுமானால் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கே ஓட்டுப் போடுங்கன்னு ”உணர்வாளர்கள்” எல்லாம் கூவிக் கூவி ஓட்டுக் கேக்கறாங்க. ஏனுங்கணா இப்டி கூவறிங்கன்னு கேட்டா, அவங்க தான் தனி ஈழம் பெற்றுத் தருவாங்களாம். பாவமா இருக்கு இவங்களைப் பார்த்தால்.

ஜெயலலிதாவோட குரலில் அலைபேசிகள் வழியாகவும் பண்பலை ரேடியோக்கள் வழியாகவும் நிமிடத்துக்கு ஒரு முறை ஓட்டுக் கேட்கும் விளம்பரம் வருகிறது. அதில் “இலங்கைத் தமிழர் நலன் காக்க” என்று தான் சொல்கிறார். ஈழத் தமிழர் நலன் என்று சொல்லவில்லை. பேச்சுக்குக் கூட ஈழம் என்ற வார்த்தையை உபயோகிக்க மறுப்பவர் ஈழம் பெற்றுத் தருவாராம். தேர்தல் முடியட்டும். அப்புறம் பாருங்க அம்மாவோட அருள் வாக்குகள் எப்டி இருக்குன்னு. போட்ட கையெழுத்தையே இல்லை என்று சொன்னவர் தன் பெயரில் வந்த காசோலையை பணமாக்கிவிட்டு அனுப்பியவர் யார் என்று தெரியாது என்று சொன்னவர் ஈழம் அமைந்தால் இலங்கையின் ஒருமைப் பாடு பாதிக்கும் என்று மீண்டும் சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்?. என்னவோ போங்க.

7 comments:

said...

தம்பி! ஏன்ப்பா இப்படி டவுசர் கழட்டூம் வேலை?

said...

be cool

said...

”உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமாயிருக்கு” வடிவேலுவோட இந்த வசனம் இப்ப இரண்டு பக்கத்துக்குமே பொறுந்தும்...

ஆனா நீங்க சொன்னதுல நிறையவே உண்மையிருக்கு...ஜெயலலிதாவின் நம்பகத்தன்மை....என்னத்த சொல்றது!

said...

***
தேர்தல் முடியட்டும். அப்புறம் பாருங்க
***

சுத்தி வளைச்சி காங்கிரஸ் கூடவே சேர்ந்தாலும் சேர்ந்துடுவாங்கன்னு சொல்றீங்களா ? :)-

said...

///அபி அப்பா said...

தம்பி! ஏன்ப்பா இப்படி டவுசர் கழட்டூம் வேலை?///
டவுசரா? மெய்யாலுமா? அபி அப்பா உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சு இருக்கே.. ;-))))

said...

”ஈழத் தாரகை” அம்மாவைப் பற்றி இது போல் பதிவு எழுதும் சஞ்சயை வன்மையாக கண்ணடிக்கிறேன். ;-)

said...

ஏனுங்க..
அவங்க ஏதோ தன் ஆதாயத்துக்காகவாவது இப்ப திருந்தி "ஈழத்தமிழர்" பிரச்சனையை /அவலத்தை வெளியே சொல்றாங்க...எதுக்குங்க நீங்க டென்சனாவறீங்க.
நீங்க எல்லாம் தான் அவலங்களை(காங், தி.மு.க) "இந்திய இறையாண்மைக்குள்" போட்டு மூடி மறைக்கிறீங்க...
சரி எல்லாம் எழுத முன்...இதையும் ஞாபகம் வையுங்க..
உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும்"

பி.கு : உண்மையில் எமக்குத் மிக நன்றாகவே தெரியும் தமிழக மக்களால் உணர்வுபூர்வமான ஆதரவைத்தவிர வேறெதுவும் ஈழ மக்களுக்கு செய்ய முடியாதென...
காரணம் சிம்பிள்
அதிகாரத்தில் இருக்கும் சுயநல அரசியல்வாதிகள்.
தங்களையே பலியாடாக ஒப்புக்கொடுத்துள்ள பாமர மக்கள்.
மத்திய அரசின் நிகழ்ச்சி நிரல்.

இன்றும் நாம் யாசிப்பது எங்களுக்கான உளப்பூர்வமான ஆதரவே..
அதை யார் செய்தாலும் நாம் வரவேற்போம். அதன் அர்த்தம் அவர்கள் வாக்குறுதிகளினை நாம் நம்புவதென்பதல்ல.