திரு.மாணிக் தாகூருக்கு விருதுநகரில் ஏற்கனவே தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. மக்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள அது மட்டும் போதாது என்பதால் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்ககளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பதிவை எழுதும் நேரத்தில் கூட அதற்கான வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார். எல்லா அலுவலகங்களிலும் கட்சி சாராத பணியாளர்களை தான் நியமிக்க வேண்டும் என்பதில் மாணிக் தாகூர் உறுதியாக இருக்கிறார்.
அனைத்து அலுவலகங்களும் இணையம் மூலம் இணைக்கப் பட்டிருக்கும். தொகுதி மக்கள் எந்த நேரத்திலும் தங்கள் கோரிக்கைகளை அருகில் இருக்கும் அலுவலங்கங்களில் தெரிவிக்கலாம். அவைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப் படும். மாதம் ஒரு முறை அந்தந்த சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்து அவைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.
இன்னும் சில நாட்களில் அலுவலக பணிகள் முடிந்து விடும். பிறகு அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் ஆகிய விவரங்கள் வெளியிடப் படும். விருதுநகர் தொகுதியை சேர்ந்த பதிவர்கள் அங்கு மேற்கொள்ளப் பட வேண்டிய வளர்ச்சிப் பணிகளைப் பற்றிய விவரங்களை சொன்னால் அவை அனைத்தும் மாணிக் தாகூர் அவர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்லப் படும்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
14 comments:
முட்டாள்தனமான இலவச திட்டங்கள் இல்லாமல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இடம் பெயரும் மக்களை தடுக்கும் வகையில் வேலை தரும் திட்டங்களை நீண்ட கால நோக்கில் உருவாக்கவேண்டும்.
ஊரக வேலை வாய்ப்பு திட்டம் என்ற பெயரில் வெறும் மண் வெட்டும் காண்டிராக்ட் கொள்ளைக்கு பணம் வீனாகக்கூடாது. ஒதுக்கப்பட்ட தொகைக்காக தேவையில்லாத மண்வெட்டி, வேலை வாய்ப்பு பத்து நாள் கொடுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
நன்றி குடுகுடுப்பை.. இந்த கமெண்ட் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.
... அதே சமயம், குதூகலமா இருக்கும் குடும்பத்தில் கும்மி அடிக்க முயற்சித்து போட்ட இன்னொரு பின்னூட்டம் நிராகரிக்கப் படுகிறது.. அண்ணே.. தர்மபுரி பத்தி இன்னொரு பதிவு வேணும்னாலும் கேளுங்க.. ஆனா இதெல்லாம் வேணாம்ணே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :(
//ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள். //
1)டெல்லியில் தலைவர்களுக்கு வால் பிடிக்காமல் தொகுதியில் மாதம் ஒரு முறையாவது விசிட் அடிக்கனும்! எம்.எல்.ஏக்களே வருவது இல்லை.
அப்படி இல்லாமல் மக்களோடு நேரடி தொடர்பு வைத்திருக்கனும்.
2)கடந்த மாதத்தில் இந்த பகுதியில் எம்.பியினால் செய்யப்பட்ட பணிகள் என்ன என்ன என்று மக்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் ஒரு டிஸ்பிளே போர்ட் இருக்கனும்.
3)பள்ளி கூடங்களுக்கு விசிட் அடிக்கனும் அது குழந்தைகள் மனதில் இடம்பிடிப்பதோடு அவர்கள் மனதில் அவரை பற்றிய நல்ல எண்ணம் பதிவு ஆகும். எம்.பி வந்தாரு எங்க ஸ்கூலுக்கு இது இது எல்லாம் செஞ்சாருன்னு குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லும்!
4) சுருக்கமாக சொன்னால் எம்.பி என்பவர் இப்பொழுது இருக்கும் எம்.பி மாதிரியே இருக்க கூடாது.
நல்ல முயற்சி ..
வாழ்த்துக்கள்..
மாணிக் தாகூருக்கும்.. அதனை பதிவிட்ட உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
இந்த முயற்சி சிறப்பான முறையில் செயல்பட்டு மக்களின் கருத்துக்கள்.. பாராளுமன்ற உறுப்பினருக்கு உடனுக்குடன் சென்றடையும் என நினைக்கும் போதே மகிழ்ச்சி வருகிறது...
தொடருங்கள்
விருது நகர் ஊருக்குள் சாலை வசதி , மிக அவசர தேவை., மதரை இல் இருந்து, சிவகாசி , கோவில்பட்டி செல்லும் போது , பஸ் விருது நகர் ஊருக்குள் சென்று வெளியேறினால் நரக வேதனை யாக உள்ளது.,
விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியான சிவகாசி பட்டாசுத் தொழில் மற்றும் அச்சகத் தொழில் போன்றவைகள் அதிகமாக நடைபெறும் பகுதி. இருக்கும் தொழிற்சாலைகளை ஒருங்கிணைத்து அவர்களது பொருட்களை சந்தைப்படுத்துதல், தர மேம்பாட்டு பயிற்சிகள் என பல பயிற்சிகளை செய்யலாம்.
உதாரணமாக பல சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகள் தற்போது மார்கெட்டிங் செய்ய இயலாமல் நலிவடைகின்றன. சிறு சிறு தொழிற்சாலைகள் தனித் தனியாக மார்கெட்டிங் செய்ய இயலாது. இப்படிப்பட்ட சிறு நிறுவனங்களை ஒருங்கிணைத்து மார்கெட்டிங் அமைப்புகளை அமைக்கலாம்.
அடுத்து அந்தப் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனை.
இவை பொதுவாக வெளியில் இருந்து பார்க்கும் யாருக்கும் தெரிவது.
இதற்கு மேல் தொகுதியில் என்ன செய்யவேண்டுமெ என அப்பகுதி மக்களை கேட்டுதான் செல்ல வேண்டும். எனது பெங்களூர் நண்பர்கள் வட்டாரத்தில் சிவகாசிப் பகுதியை சேர்ந்தவர்கள் மிக அதிகம். அவர்களை ஆலோசித்து அவர்களது கருத்துகளை தெரிவிக்க செய்கிறேன்.
all the very best for him. Let him bring a cement or paper or power factory to virudunagar and generate employment for local people.
நாங்கள் கேட்காத எம்பியாக இருந்தாலும் அவருடைய செயல்பாடுகளாக நீங்கள் சொன்னவை உண்மையாக இருப்பின் மிக சந்தோசமே...
தொகுதியில் இந்த தேர்தலில் வாக்களிக்காவிட்டாலும் அடுத்த தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு இருப்பதால் எனது கோரிக்கை..
வைப்பாறு-அச்சன் கோவிலாறு இணைப்பை பற்றி முடிவெடுக்க வேண்டும்.. உயர் நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக இருக்கிறது..
ஆனாலும் யாரும் அதை செயல்படுத்துவதாக இல்லை..
உள்ளூரில் நிலத்தடி நீரின் அளவு மிக மோசமான நிலையை எட்டிவிட்டது..
உடன் கவனிக்க வேண்டும்.. ஏனெனில் இதை இப்போது ஆரம்பித்தால் ஐந்து ஆண்டுகாளாகிவிடும் முடிக்க..
//அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் ஆகிய விவரங்கள் வெளியிடப் படும்//
கிடைத்ததும் தெரிவித்தால் தண்யனாவேன்..
நன்றி சஞ்செய்
இது விருது நகர் தொகிதிக்கு மட்டும் தானா மற்ற தொகிதிகலுக்கு கிடையாதா ?
விருதுநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு சாலை வசதிகள், குடிதண்ணீர் வசதி, இப்போதைய உடனடித்தேவை.
பெருந்தலைவர் காமராஜரை ராகுலுக்கு நன்கு அறிமுகப் படுத்த வேண்டும்.
முன்னேறியதாகக் கருதப் படும் தமிழகத்திலேயே இன்னும் ஜாதி வெறி தாண்டவமாடுவதைத் தெரிவிக்க வேண்டும்.
உச்ச நீதி மன்றம் உயர்ஜாதி மன்றமாக இருப்ப்தைத் தெரிவிக்க வேண்டும்.
இந்த மூன்றையும் உணர்ந்தால் அவர் சிறந்த தலைவராக வருவார்.
//malar said...
இது விருது நகர் தொகிதிக்கு மட்டும் தானா மற்ற தொகிதிகலுக்கு கிடையாதா ?
//
மலர், அதை மற்ற தொகுதி எம் பிக்களைத் தான் கேட்கவேண்டும். ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்களோ என்னவோ? :)
//கிடைத்ததும் தெரிவித்தால் தண்யனாவேன்..//
நிச்சயம் விரைவில் தெரிவிக்கிறேன் தீப்பெட்டி. சிவகாசி தொகுதிக்கு பொறுப்பாளர் நியமித்தாகிவிட்டது. எல்லாத் தொகுதிகளுக்கும் அலுவலகம் அமைத்து பொறுப்பாளர் நியமிக்கப் பட்டபின், ஒரு பதிவாக போட்டுத் தெரிவிக்க்கிறேன்.
நல்லது நடந்தா சரி சஞ்சய்
Post a Comment