காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Friday, February 19, 2010

ராகுல் ரகசியங்கள்


ராகுல் ரகசியங்கள்
புது ரத்தம்... புது ரூட்!

''காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியிலும், உட்கட்சி ஜனநாயகம் இல்லை. உட்கட்சி தேர்தல் நடப்பதாகக் கூறிக் கொண்டாலும், மேலிடம் விரும்புகிறவர்தான் தலைவராகிறார்கள்! காங்கிரஸை மாற்றிய மைக்க, இளைஞர் காங்கிரஸ் தீவிரமாகச் செயலாற்றுகிறது...'' என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, நமக்குள் ஒரு ஆச்சர்யம்! இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளரும், வட கிழக்கு, கேரள மாநில பொறுப்பாளருமான எஸ்.ஜோதிமணியிடம் பேசினோம்.

''பஞ்சாப், குஜராத், புதுச்சேரி, டையு-டாமன் ஆகிய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முடிந்து, தேர்தலை நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். தமிழ்நாடு, ஹரியானா, திரிபுரா, உ.பி.(சென்ட்ரல்) ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் சேர்க்கை முடிந்திருக் கிறது. தேர்தல் ஏற்பாடுகள் நடக்கிறது...'' என்று தொடங்கியவர், தமிழக விவகாரம் பற்றி விரிவாகவே பேசினார்.

''ராகுல்ஜி, தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்தது பெரும்
எழுச்சியைத் தந்து, 17 லட்சம் பேர் இளைஞர் காங்கிரஸில் இணைந்துள்ளனர். தற்போது இங்கே இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து வருகிறது. அடுத்த மாதத் துக்குள் முடிந்துவிடும் என்று நம்புகிறோம். 'நாங்கள் நடத்துவது போன்ற ஒளிவு மறைவற்ற, நேர்மையான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம்கூட நடத்துவதில்லை' என்று உறுதியாகச் சொல்வேன். என்ன, அவர்களைப் போன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டும்தான் எங்களிடம் இல்லை!

சம்பந்தமே இல்லாத வட மாநில நிர்வாகிகளை அழைத்துவந்து, தேர்தல் அதிகாரிகளாகப் போடுகிறோம். வெளிமாநில அதிகாரிகள், உள்ளூர் அரசியல்வாதியிடமிருந்து ஒரு டீகூட வாங்கிக் குடிப்பது கிடையாது. அதனால் நியாயமான தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவில், இளைஞர் காங்கிரஸில் ஒரு லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருப்பார்கள். அதன்பிறகு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். கட்சியின் வரலாறு, கொள்கை, சமூக பிரச்னைகளைக் கையாளுவது, திட்டமிடல் ஆகியவை அந்தப் பயிற்சியில் சொல்லித்தரப்படும்!

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்து, காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சிகளும் விலகிவிட்டன. மீண்டும் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு செல்வதற்காக ராகுல்ஜி திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறார். மக்கள் தொண்டுக்கு அரசியல் பதவிகூட தேவையில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்ற வலுவான ஆயுதத்தை மக்கள் கையில் கொடுத்துள்ளோம். இதைவைத்து இவர்கள் மக்கள் பிரச்னைக்காகப் போராட வேண்டும்!

அதே போன்று குற்றப் பின்னணி கொண்ட யாரையும் கட்சியில் நாங்கள்வைத்துக் கொள்வ தில்லை. கட்சியில் சேர்ந்ததும், குற்றச்செயல்களில் ஈடுபட்டால் சும்மா விடமாட்டோம். புதிதாகத் தேர்ந்தெடுத்தவர்களைக் கண்காணிக்க 'பர்ஃபாமன்ஸ் மெஷர்மென்ட் ஷீட்' என்று ஒன்று வைத்துள்ளோம். அவர்கள் செயல்பாடு திருப்தியாக இல்லையெனில், பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவார்கள். இதுபோன்ற நிலை, காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சிகளிலும் வர வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் தழைக்கும்!'' என்றார் அவர்.
அடேங்கப்பா... ராகுல் தம்பி பதினாறு அடி பாயுது. மத்த கட்சிக்காரங்களெல்லாம் கொஞ்சம் உஷாராவே இருங்கப்பா..!

நன்றி - ஜூனியர் விகடன்

1 comments:

said...

//ஆபாச பின்னூட்டம் போடும் சகோதர சகோதரிகளுக்கு இது தான் பதில் : Same To You. :)
//
ஒரிஜினல் மனிதன் என்ற பெயரில் பின்னூட்டமிட்ட தெருநாய்க்கும் இதான் பதில். ஆண்மை இருந்தா அடையாளத்தோடு பின்னூட்டமிடு.. இல்லை என்றால் நீ சொன்னதை நீயே செய்துக்கொண்டு உயிர் பிழைத்து ஓடிவிடு.