காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Friday, March 13, 2009

காங்கிரஸ் - திருணாமுல் காங்கிரஸ் தொகுதி பங்கீடு

                                                       

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திருணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இணைத்து பொதுத் தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 14 மற்றும் திருணாமுல் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டி இடுகின்றன. இரண்டு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப் படுவார்கள்.

மேற்கு வங்கத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது.

ஏப்ரல் 30 - 14 தொகுதிகள்
மே 7 - 17 தொகுதிகள்
மே 13 - 11 தொகுதிகள்

Tuesday, March 3, 2009

கோவை மாநகராட்சி இடைத்தேர்தல் : காங்கிரஸ் அமோக வெற்றி

கோவை மாநகராட்சியின் 62வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் காயத்ரி 925 ஓட்டுகள் வித்தியாசத்தின் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு வாழ்ட்துக்கள்.

ஓட்டுகள் விவரம்
  • காயத்ரி - காங் - 2364
  • அழகம்மாள் - கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை - 1439 ( அதிமுக, கம்யூனிஸ்ட் ஆதரவு)
  • சந்திரா - சுயேட்சை - 457
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடைபெற்ற பல்வேறு இடைத்தேர்தல்களில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களுக்கு ஓட்டளித்த அனைவருக்கும் நன்றிகள்.

இந்த இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி போட்டியிடவில்லை. ஆனாலும் ஜமுகூ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர்களை போட்டியிட வைத்து ஆதரித்தார்கள். ஆகவே திமுக- காங் கூட்டணியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததுதான். போலிகள் மற்றும் வேஷதாரிகளின் பொய்ப் பிரச்சாரங்களைத் தாண்டி திமுக - காங் கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு பெருமளவில் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

Monday, February 23, 2009

இதைப் படிங்க மொதல்ல


ராஜபக்‌ஷே ஒரு ஜனநாயகவாதியே இல்லை. மனிதத் தன்மை துளியும் இல்லாமல் ஈழத் தமிழர் பிரச்சனையை கையாள்கிறார்.
- கார்த்தி சிதம்பரம்

( காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் மனநிலையும் இது தான்)



ராஜபக்‌ஷே சிறந்தவர், வல்லவர், நல்லவர் என்றும் அவருடைய நடவடிக்கைகள் சரியானவை என்றும் நான் பேசி இருப்பதாக யாராவது நிரூபித்தால் எனது பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்.
- ஹசன் அலி , MLA , காங்கிரஸ் கட்சி
(இதற்கு முன்பு ஒருவேளை அப்படி பேசி இருந்தாலும் இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறாது )