யாரிந்த வைகோ? எவ்வளவு நல்லவர்? எந்த அளவு உண்மையானவர்? எந்த அளவு மற்ற அரசியல்வாதிகளை விட மேன்மையானவர்? பார்த்துவிடுவோம்.
இப்போது ஈழப் பிரச்சனையில் காங்கிரஸ் மீது பொய்க் குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கிறாரே , இவர் 2007 வரை காங்கிரஸ் கூட்டணியில் தான் அங்கம் வகித்தார். அப்போது ஈழப் பிரச்சனை இல்லையா? இவர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது ஈழத்தமிழருக்கு செய்தது என்ன? துரோகத்தைத் தவிர. அப்போது இவர் கட்சிக்கு 4 எம்பிக்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு பேபினட் மந்திரி பதவியும் இன்னொருவருக்கு இணை மந்திரிப் பதவியும் கொடுக்க காங்கிரஸ் தயாராய் இருந்தது. ஆனால் இவர் என்ன செய்தார்?. அமைச்சரவையில் இடம் வேண்டாம். வெளியிலிருந்தே ஆதரவு தருகிறோம் என்று சொன்னார்.
ஏன்?
தனக்கு கிடைக்காத அந்த அமைச்சர் பதவிகள் தன் கட்சியின் இரண்டாம் மட்டத் தலவர்களுக்குக் கிடைத்தால் தேசிய அளவில் அவர்கள் செல்வாக்குத் தன்னைவிட உயர்ந்துவிடும் என்ற பொறாமையும் வயித்தெரிச்சலும் தான். இந்த சரிவாதிகார மனப்பான்மை தான் செஞ்சி ராமச்சந்திரன், கணேசனில் ஆரம்பித்து இப்போது கண்ணப்பன் , கம்பம் ராமகிருஷ்ணன் என்று தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நட்களில் அவர் மட்டுமே கட்சியில் இருப்பார். இது இவர் கட்சிக்கு?! ஏற்பட்ட இழப்பு. இதை விடுவோம்.
ஆனால் ஈழத் தமிழருக்காக தான் மட்டுமே போராடுவதாக ஊரை ஏமாற்றுகிறாரே. அந்த ஈழ மக்களுக்கு இவர் செயலால் என்ன இழப்பு என்று பார்ப்போம்.
அன்று காங்கிரஸ் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கும். அப்போது வெளியுறவு அல்லது பாதுகாப்பு ஆகியவற்றில் ஒன்றை கேட்டிருக்கலாம். குறைந்த பட்சம் இவைகளின் இணை அமைச்சர் பதவியாவது கிடைத்திருக்கும். அல்லது வேறு துறையின் அமைச்சர் பதவிகள் கிடைத்திருந்தாலும் அதை வைத்து வெளியுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுக்களில் இடம் கிடைத்திருக்கும். அதை வைத்து அமைச்சரவைக் கூட்டங்களின் போதெல்லாம் ஈழப் பிரச்சனையை அந்த மக்கள் சிங்கள இன வெறி அரசால் படும் துயரங்களை எழுப்பி இருக்கலாம். அமைச்சரவையின் மற்ற சகாக்களுக்கும் புரியவைத்து இது விடுதலைப் புலிகள் பிரச்சனை மட்டுமில்லை அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களும் அடங்கி இருக்கு என புரிய வைத்திருக்கலாம். இவர்கள் தானே ஈழ மக்களின் ஒரே பாதுகாவலன் என்பது போல் நடிக்கிறார்கள் . அதனால் இவர்களை சொல்கிறேன்.
இந்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் வேண்டுமென்றே விட்டுவிட்டு இப்போது காங்கிரஸ் அரசாங்கத்தை குறை சொல்லிக் கொண்டிருக்கிரார்.
இவர் கட்சி எம்பிக்களையும் காட்டி திமுக அமைச்சர் பதவிகள் பெற்றுக் கொண்டது என சொல்லி அகில இந்தியாவையும் சிரிப்பு மூட்டினார். :)) . இவர் கட்சி எம்பிக்கள் என்ன பெட்டியில் அடைத்து வைத்த ஆப்பிளா? லேபிள் மாத்தி ஒட்டிக் கொள்ள? :)
சரி , இவர் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தாரே .. அதற்கு காரணம் என்ன? ஈழத் தமிழரை அழிக்க காங்கிரஸ் அரசு ஆயுதம் கொடுக்கிறது என்று பொய்க் குற்றசாட்டு சுமத்தியா? இல்லவே இல்லை. கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் இறுதியாகக் கேட்ட 23 தொகுதிகளை( முதலில் 25 கேட்டார்) தரமுடியாது என்று சொல்லி திமுக அவருக்கு 22 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. இதனால் காலையில் திமுகவுடன் பேரம் பேசிவிட்டு அந்த ஒரு சீட்டுக்காக அன்று மாலையே அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆகவே அவர் அப்போதும் காங்கிரஸ் மீது எந்த பொய்க் குற்றச்சாட்டும் சுமத்தவில்லை. அவர் பிரச்சனை வெறும் ஒரு தொகுதி தான். அவ்வளவு பெரிய கொள்கை திலகம் இந்த வைகோ.
இது வரை தாவல் ஸ்பெஷலிஸ்டான பாமக கூட காலையில் பேரம் பேசிவிட்டு படியாமல் மாலையில் எதிர் முகாம் போனதில்லை. முன் கூட்டியே அதற்கான வேலைகளை எல்லாம் செய்துவிட்டு தான் எதிர் முகாம் போவார் மருத்துவர் ஐயா. ஆனால் இந்த கொளகைப் புயல் வைகோ ஒரு சீட்டுக்காம 10 மணி நேரத்தில் கூட்டணி மாறியவர். அப்போதெல்லாம் அவர் ஈழ மக்களைப் பற்றி யோசித்ததே இல்லை.
பிறகு தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தான் கடந்த ஓராண்டாக தான் மத்திய அரசின் மீது குறைகள் எதுவும் இல்லாததால் காங்கிரஸ் மீது பொய்க் குற்றசாட்டு சுமத்திக் கொண்டிருக்கிறார். அதென்ன பொய்க் குற்றசாட்டு?
பின்னே? கொடுக்காத ஆயுதத்தை இலங்கைக்கு கொடுபப்தாக சொல்வது பொய் தானே. ப்ரணாப் முகர்ஜி, அந்தோணி மற்றும் சிதம்பரம் என சொல்ல வேண்டிய அனைவரும் சொல்லிவிட்டார்கள், இலங்கைக்கு ஆயுத உதவி எதுவும் வழங்கவில்லை என்று. அப்போதும் நம்பாமல் குற்றம் சுமத்துவது பொய் தானே. சமீபத்தில் கடர்படைத் தளபதியும் சொல்லி இருக்கிறார் ஆயுத உதவி எதுவும் செய்யவில்லை என்று. அப்படி செய்தால் யாருக்கு பயந்து மறைக்க வேண்டும். இதில் இந்திய ராணுவத்தினர் இலங்கைப் போரில் பங்கேற்பதாக தகவல்கள் என்று தினமும் பித்தலாட்ட பதிவுகள் வேறு. இதுவரை யாரும் அதற்கு ஆதாரம் தரவில்லை. உண்மை இருந்தால் தானே. யாரிடமோ எதையோ வாங்கிக் கொண்டு இப்படி விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் இணையத்தில்.
கீழே இருக்கும் படத்தை பெரிது பண்ணி பார்க்கவும்..( தி சண்டே இண்டியன் இந்த வார இதழ்)
இலங்கை ராணுவம் பயன்படுத்துவது சீனாவின் டி56 ரக துப்பாக்கிகள் தான். இந்தியா தன் ஆயுதங்களை இலங்கைக்கு விற்கவில்லை என்பது இதில் தெரிகிறது.
புலிகளின் தாக்குதலில் இந்திய ராடார் தொழில்நுட்ப இஞ்சினியர்கள் காயம் பட்டார்களே என்கிறார் வைகோ. ”ராடார்” என்பது ஆயுதம் இல்லை என்பதை யாராவது அவருக்கு புரியவைத்தால் நல்லது. அது ஒரு கண்காணிப்புக் கருவி. விடுதலை புலிகள் விமானத்தாக்குதலுக்கு வாய்ப்புகள் இருப்பதால் இலங்கைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அதை வைத்து தமிழர்களை ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் சொல்லப் போனால் அது தற்காப்பிற்கே.
தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தின் மீது என்ன கரிசனம்? எதற்கு ராடார் தர வேண்டும்? என்று கேட்கலாம்.
எல்லாம் சுயநலம் தான். இதைக் கொடுத்தால் ராடாரை வைத்து தமிழ்மக்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது ஒரு காரணம். இன்னொன்று இந்தியப் பாதுகாப்பு தொடர்புடையது. நாம் கொடுக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அல்லது சீனா கொடுத்திருக்கும். டயலாகை மாத்துடா டேய்ன்னு சொல்றது புரியுது. ஆனால் இது வெறும் டயலாக் இல்லை. பாகிஸ்தானோ சீனாவோ ராடார் வழங்கி இருந்தால் அதை பயன்படுத்தவும் பயிற்சிக் கொடுக்கவும் கூடவே ஆட்களை அனுப்பி இருப்பார்கள். அதை வைத்து இந்தியாவைக் கண்காணித்திருப்பார்கள். மும்பை தாஜ் மற்றும் ட்ரைடண்டில் நடந்த தாக்குதல் சென்னையின் கன்னிமாராவிலோ, லீ மெரிடியனிலோ நடந்திருக்கும். ஆகவே ராடார்கள்க் கொடுத்ததால் ஈழத் தமிழருக்கும் பாதிப்பில்லை. இந்தியாவுக்கும் புதிய பகுதியிலிருந்து ஆபத்தில்லாமல் பார்த்துக் கொள்ள முடிகிறது.
மேலும், சண்டைன்னா சட்டை கிழியத் தான் செய்யும். சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்குன்னு வடிவேலு காமெடி பண்ண மாதிரி , போர் நடந்தால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள். இது எல்லா இடத்திலும் இருப்பது தான் என்று ஈழத் தமிழரின் படுகொலைகளை காங்கிரஸ் கொச்சைப் படுத்தவில்லை. அப்படி சொன்ன புரட்சித்தலைவியுடன் தான் ஈழ மக்களின் தோழனாக நடிக்கும் வைகோ ஓட்டுககாக கூட்டு வைத்திருக்கிறார்.
இவர் தான் வைகோ என்று நியூமராலஜி பார்த்து பெயர் வைத்துக் கொண்ட பகுத்தறிவுவாதி வையாபுரி கோபால்சாமி. 2 எம்பிக்களும் 2 எம்எல்ஏக்களும் இவரை விட்டுப் போனதும் இன்றி தன் உரிமையான திருமங்கலைத்தையும் அம்மாவிடம் இழந்து கூனி குறுகி நின்ற தன்மானச் சிங்கம் வைகோ அவர்கள்.
இவர் போன்ற வேஷதாரிகளை மக்கள் நிச்சயம் அடையாளம் கொள்வர். காங்கிரஸ் + திமுக கூட்டணி ஈழத் தமிழருக்கு எதிரானவர்கள் இல்லை என்பதையும் புரிந்துக் கொள்வர். அப்படி எதிரானவர்களாக இருந்தால் திருமாவளவன் சேர்ந்திருக்க மாட்டாரே.
படம் நன்றி : தி சண்டே இண்டியன் மின்னிதழ்.