தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
மதச்சார்பின்மை, தேசியவாதம், சமூகநீதி மற்றும் அனைவருக்கும் குறிப்பாக சாமான்ய மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சி என்பதே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தாரக மந்திரமாக உள்ளது.
இந்திய தேசிய கட்சி மட்டுமே அனுபவசாலிகள் மற்றும் இளைஞர்கள், சாதனை மற்றும் லட்சியத்தைக் கொண்டவர்களுக்காக செயலாற்றுகிறது.
ஒற்றுமையான இந்தியாவால் மட்டுமே பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிட முடியும்.
இந்தியாவின் பாதுகாப்பும், ஒருமைப்பாடும் மிக முக்கியமானதாகும். இந்தியா உட்பட பல நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு மத மற்றும் அரசியல் எல்லைகள் கிடையாது. அப்பாவி மக்களுக்கு எதிராக மிகக் கொடிய முறையில் வன்முறையை ஏவி விடுவதே பயங்கரவாத சக்திகளின் நோக்கமாகும்.
எனவே பயங்கரவாதத்தை தீவிரமாகவும், அறிவுப்பர்வமாகவும், அச்சம் ஏதுமின்றியும் முறியடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது.
பயங்கரவாதத்தை ஒற்றுமையுடன் இருக்கும் மக்களால் மட்டுமே முறியடிக்க முடியும். மதத்தால் பிரிந்துள்ள மக்களால் முடியடிக்க முடியாது. இந்த கொடூரத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முறியடித்து, சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்.
நம் நாட்டு எல்லைக்கு அப்பால் இருந்து ஏவப்படும் பயங்கரவாதத்தை ஒற்றுமையுடன் செயல்பட்டு முறியடித்தல் அவசியம்.
தவிர இந்தியாவிற்கு அறிவுப்பூர்வமான வெளியுறவுக் கொள்கை அவசியம். நமது பாரம்பரிய வெளியுறவுக் கொள்கையால், ஒற்றுமையுடன் பலமும் கிடைக்க வேண்டும். பொதுவான நோக்கத்துடன் நம்பிக்கையும் உருவாக வேண்டும்.
மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலிமையான ராஜ்யரீதியிலான பிரசாரத்தை முன்வைத்தது. இதையடுத்து பாகிஸ்தான் முதல்முறையாக மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்ததை ஒப்புக் கொண்டது. இது நமது வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
உலக அளவில் பொருளாதார தேக்கநிலை நீடித்த போதிலும், இந்தியாவில் அதன் பாதிப்புகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சியடையும் 2ஆவது நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.
இதன்மூலம் நாடு நடுநிலையான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது.
பொதுத்துறை மற்றும் தனியார் துறையினருக்கு இடையேயும், கூட்டுறவு மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு இடையேயும் நடுநிலையான பங்கு உள்ளது.
நவீன பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய தொழில்களுக்கு இடையே புதிய உத்வேகம் பிறந்துள்ளது.
அமைப்புரீதியான வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் நடுநிலையான போக்கு.
கிராமங்கள் மற்றும் நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நடுநிலையைக் கடைபிடித்தல்.
கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சாதனைகளில் சாமான்ய மற்றும் ஏழை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடரும்.
நலிவடைந்த பிரிவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் கல்வி, பொருளாதார வளர்ச்சியை நோக்கிய வேலைவாய்ப்புகள்.
லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்றுள்ள தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
பாரத் நிர்மாண் திட்டம் : கிராமப்புறங்களில் வேளாண் சாகுபடி பரப்புகளைப் பராமரித்தல், சாலை வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்தல்.
விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அளித்தல்.
சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவி அளித்தல்.
சர்வ சிக்சா அபியான் எனப்படும் அனைவருக்கு கல்வித் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் திறம்பட செயல்படுத்துதல்.
கடந்த 5 ஆண்டுகால பொருளாதார சாதனைகள் தொடர வழிவகை செய்தல்.
ஜவஹர்லால் நேரு தேசிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம்.
அனைத்து மாநிலங்களுக்கும் போதிய நிதி ஆதாரம் அளித்தல்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி என்ன உறுதி அளித்ததோ, அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும் வேகமான அதிக வளர்ச்சியை நோக்கி பயணிக்க காங்கிரஸ் உறுதி.
கடந்த 2008-09 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு அளித்தல்.
உயரிய பாதுகாப்புத் துறையை உருவாக்குவதுடன், பாதுகாப்புப் படையினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் போதிய நல உதவிகளுக்கு நடவடிக்கை.
காவல்துறை சீர்திருத்தத்தை விரைவுபடுத்துதல்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும்.
அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அளிக்கப்படும்.
சிறப்புப் பிரிவின் கீழ் வருவோருக்கு ஒருங்கிணைந்த சமூகப்பாதுகாப்பு அளிக்கப்படும்.
அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தரமான கல்வி அளித்தல்.
தேசிய அளவில் திறன் மேம்பாட்டுத் திட்டம் கொண்டுவரப்படும்.
விவசாயிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மேம்பாட்டிற்கான திட்டங்கள் கொண்டுவரப்படும்.
கூட்டுறவு அமைப்புகளை ஜனநாயக அடிப்படையில் மாற்றியமைத்தல்.
சமுதாயத்தில் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படும்.
நெசவாளர்கள், மீனவர்கள், மீனவப் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கொண்டுவரப்படும்.
தோல் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்களுக்கும் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
மதவாதத்தை அனைத்துப் பிரிவுகளிலும் எதிர்க்கவும், ஜாதியக் கொடுமைகளை உறுதியுடன் எதிர்க்கவும் காங்கிரஸ் உத்தரவாதம்.
குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளின் மேம்பாட்டில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிதி ஆதாரம் அளித்து வலுப்படுத்த உறுதி.
3 ஆண்டுகளுக்கும் அனைத்துக் கிராமங்களும் பிராட்பேண்ட் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படும்.
சிறு தொழில்முனைவோரில் இருந்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
மிகக் குறைந்த பணவீக்கத்தை கடைபிடிப்பதுடன் அதிக வளர்ச்சி விகிதத்தை கடைபிடிக்க முடிவு.
இந்தியாவின் இயற்கைவள சுற்றுச்சூழலை பாதுகாத்த, அவற்றை புத்துணர்வு பெறச் செய்தல்.
அறிவியல் - தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் புத்துணர்வு அடையச் செய்தல்.
நீதிமன்றத்தில் வழக்குகள் தாமதமாவதைத் தடுக்க நீதித்துறை சீர்திருத்தம் கொண்டுவரப்படும்.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
சுயேச்சையான, உள்நாட்டிற்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கை தொடரும்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி எடுக்கும்.
எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தொடர, நிலையான நீடித்த, ஒருமைப்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சியை ஆதரியுங்கள்
நன்றி : வெப்துனியா.
1 comments:
சில விடயங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது . தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை இழப்பவற்கு எந்த திட்டமும் இல்லை. ராணுவ வீரர்களுக்கு ஆறாவது ஊதிய குழு பரிந்துரையில் ஊதிய உயர்வு அளித்திருக்கலாம் . பா.ஜ.க. பின்பற்றும் ஓபன் சோர்ஸ் கொள்கை பெரும்பாலானவரை கர்ந்துள்ளது . மேற்கண்டவற்றில் பா.ஜ.க. முந்துகிறது . மற்றபடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தேசத்தை வழிநடத்த அணைத்து அம்சங்களும் நிறைந்தது. நன்றி நண்பரே.
Post a Comment