காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Friday, March 27, 2009

ராமதாஸ் காமெடி


ராமதாஸ் நேத்து ஒரு ட்ராமா நடத்தினது எல்லாருக்குமே தெரியும். அதெப்டிங்க மருத்துவரே... நீங்க பொதுக் குழுவை கூட்டுவிங்க. அதுல அதிமுகவா, திமுகாவா என்று கேட்டு ஒரு அட்டையை எல்லார்கிட்டயும் குடுப்பிங்க. அவங்க எந்தக் கூட்டணின்னு சொல்வாங்க. அப்பால அந்தக் கூட்டணியில நீங்க சேருவிங்க. உங்களுக்கே இதெல்லாம் சிரிப்பு வரலை? :))

சரி.. எல்லாரும் அதிமுகன்னு சொல்லிட்டாங்க. இப்போ அதிமுக உங்களை சேர்த்துக்க முடியாதுன்னு சொன்னா என்னா செய்விங்க? :))
(ஒரு பத்திரிக்கையாளர் கூட இதைக் கேட்கலை.. யாரும் சீரியசா எடுத்துக்கலையோ? :)) )

போறதுன்னா வழக்கம் போல வேட்டியை இறக்கிவிட்டு துண்டை இடுப்புல கட்டிகிட்டு தலையைக் குனிஞ்சி கை கூப்பிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தானே. அதான் இரண்டு பக்கமும் ஆள்விட்டுப் பேசி எங்க வெயிட்டா கெடைக்கிதோ அங்க சேருவதுன்னு முடிவு பண்ணியாச்சி இல்ல.

அதென்னா மருத்துவரே பூவாத் தலையா போடற மாதிரி ஒரு வாக்கெடுப்பு? . உங்களுக்குன்னு கொள்கை தான் ஒன்னும் இல்லை. இப்போதைய சூழல்ல யாரோட செயல்பாடு நல்லா இருக்குன்னு பார்த்து போறதா சொல்லி இருந்தா கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும். அதை விட்டு பள்ளிக் கூட பசங்களை மாதிரி சரியான விடையை தேர்ந்தெடுக்க சொல்லி இருக்கிங்க. நல்லா இருங்கய்யா..

அன்புச்சகோதரி கிட்ட ஏற்கனவே பேசி ஒப்பந்தம் எல்லாம் போட்டாச்சி இல்ல. அதை நேரடியாக அமல்படுத்த வேண்டியது தானே. எதுக்கு பொதுக் குழு ட்ராமா?. ஒருவேளை உங்க கட்சிக்காரங்க திமுக கூட்டணிதான்னு சொல்லி இருந்தா என்ன செஞ்சிருபிங்க? அவங்க தான் ஒரு மாவட்ட செயலாளர் அல்லது மந்திரிக் கூட உங்க கிட்ட வந்து பேசலையே.

ஆனா ஒன்னு மருத்துவரே.. இந்த தேர்தல் முடியறதுக்குள்ள நீங்க அனுபவிக்கப் போறதை எல்லாம் நினைச்சா உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குதுங்க.. :(

அதிக அளவில் பல்டி அடிச்சது நீங்க தான்னு தினமலர்ல நியூஸ் போட்டிருக்காங்க. அவிங்க கெடக்கறாய்ங்க. குடும்பத்துல இருந்து யார்னா அரசியலுக்கு வந்தா முச்சந்தியில வச்சி சவுக்கால அடிக்க சொன்ன கொள்கை வீரர் நீங்க. இதுக்கெல்லாம் கவலைப் படாதிங்க.

சரி சரி.. போனோமா.. 6 சீட்டு வாங்கினோமா 2 எடம் ஜெயிச்சோமான்னு சட்டு புட்டுன்னு கிளம்பி வாங்க. அங்கயே ரொம்ப நாள் இருந்துடாதிங்க. அன்புமணிக்கு மந்திரிப் பதவி தொடரனும்ல.

தேர்தல் முடிந்த கையோடு உங்கள் வரவை எதிர் நோக்கிக் காத்திருக்கும்
ஒரு காங்கிரஸ் தொண்டன்.

18 comments:

said...

//சரி.. எல்லாரும் அதிமுகன்னு சொல்லிட்டாங்க. இப்போ அதிமுக உங்களை சேர்த்துக்க முடியாதுன்னு சொன்னா என்னா செய்விங்க? :))
(ஒரு பத்திரிக்கையாளர் கூட இதைக் கேட்கலை.. யாரும் சீரியசா எடுத்துக்கலையோ? :)) )//

என்ன கேள்வி இது சின்னப்புள்ளத்தனமா?

அம்மாகிட்டே பேசி அனுமதி வாங்கித்தான் இந்த வாக்கெடுப்பே நடந்திருக்கும்!

பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாருமே தலைமைக்குக் கட்டுப்பட்டு அவங்க சொன்ன மாதிரியே ஓட்டுப் போட்டிருப்பாங்க!

பொது நபர் முன்னிலையில் நடக்கிறது என்பதால் எதிர் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுக்கிறார் என்பதற்காக கொஞ்சம் பேருக்கு தி.மு.க கூட்டணிக்குன்னு போடுங்க ன்னும் கட்டளைகள் போயிருக்கும்!

நியாயமா நடப்பதா இருந்தால் அது என்ன திமுக அல்லது அதிமுக ன்னு ரெண்டே ரெண்டு ஆப்ஷன்!

தனியா நிக்கலாம்னு ஒரு பொதுக்குழு உறுப்பினர்களுக்குக் கூட எண்ணம் இருக்காதுன்னு யாரு முடிவு செஞ்சாங்க?

said...

for this comment about Ramdass you better betten by 10 inch cheppal

said...

super appu

said...

kaangirasukku ninaippudhaann pozhaippai kedukkudhu. avaru 6MP vechirundhaa, neenga avarai thedi poveenga. yedho idhukku munnaadi ADMK kooda neenga seraadhadhu maadhiri pesureenga!!...What is your policy in taking alliances? Why do you accept smaller parties who changes alliances? In alliance, why can't we say..Cong is toeing with PMK whenever it needs?

said...

தேர்தல் முடிஞ்சு, ராமதாஸ் பழைய கூட்டணிக்கும் திரும்ப வரலாம், இல்லை அம்மாவையும் கூட்டிக்கொண்டு காங்கிரஸோடு மத்தியில் ஆட்சியில் சேரலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் :)

said...

ஆனால், ராமதாஸ் நேற்று செய்திருப்பது ஓரளவிற்கு ஜனநாயகபூர்வமானது என்பது என் எண்ணம்.

said...

//ஒருவேளை உங்க கட்சிக்காரங்க திமுக கூட்டணிதான்னு சொல்லி இருந்தா என்ன செஞ்சிருபிங்க? //

பாஸ் அது எல்லாம் நடக்காது.. முன்னாடியே ஒத்திகை பார்த்தாச்சு..
(நேற்றைய தினகரன் பீட்டர் மாமா பத்தியை பார்க்கவும்!!) அதில் போட்ட மாதிரியே 90% - Admk 10 - DMK!!

said...

ஏங்க சஞ்சய், காங்கிரஸ்ல இருக்கற மாதிரி உள்கட்சி ஜனநாயகம் இல்லேயேன்னு வருத்தமா ?

said...

//சரி.. எல்லாரும் அதிமுகன்னு சொல்லிட்டாங்க. இப்போ அதிமுக உங்களை சேர்த்துக்க முடியாதுன்னு சொன்னா என்னா செய்விங்க? :))//

:-)))))))))

கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகிடுச்சு ;-)

said...

தூ.. அரசியல் வியாதி ....

said...

அந்த ஓட்டெடுப்பு எல்லாம் சுத்த டிராமா... டொக்டரு முன்னாடியே எல்லார்கிட்டயும் சொல்லிட்டார்...மாத்தி போட்டிருந்தா டவுச்ரைக் கிளிச்சி இருக்க மாட்டாரு...அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.. ஆனா டாக்டர் முதல் முறையா ஒரு தப்பு பண்ணி இருக்கார். தோல்வி கூட்டணியில் போனது. ஆனாலும் வட மாநிலங்களில் அவர் 4 அல்லது 5 தொகுதியில் நெருக்கி வரலாம். சரி சரி சீட் கிடைச்சா நாம ஆட்சி அமைக்கும் போது நாட்டுக்காக பாடுபடும் சோனியா அம்மையாருக்கு துரோகம் செய்ய மாட்டேன் அப்படின்னு சொல்லாமலா போய்டுவாரு

said...

உங்க (பத்திரிக்கை) கிட்ட காமிச்சது சும்மா... ஒரிஜினல் இங்க இருக்கு பாருங்க.

http://arasooraan.blogspot.com/2009/03/blog-post_26.html

said...

ஏன்ப்பா இந்த கிழி கிழிக்கிறீங்க ?

என்னமோ தி.மு.க. விலேயும், ஆ.தி.மு.க.விலேயும் சுத்தமாக ஜனநாயக முறையிலே முடிவு எடுக்கிறமாதிரி நினைப்பா ? எல்லா இடத்திலேயும் அதிகார வட்டம் தானே முடிவு எடுக்குது ? மத்த எல்லாரும் ஒப்புக்குச் சப்பாணி.

இப்போ சேர்றது தேர்தல் கூட்டணி. தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம், யாரு ஆட்சிக்கு வராங்களோ, அவங்க கூட்டணிக்கு போயிடுவாரு டாக்டரு. (கலைஞர் மாத்திரம் என்னவாம் ?)

இதத் தெரியாமலா கலைஞரும் அம்மாவும் இருப்பாங்க ?

said...

//தேர்தல் முடிந்த கையோடு உங்கள் வரவை எதிர் நோக்கிக் காத்திருக்கும்
ஒரு காங்கிரஸ் தொண்டன். //

ஹி ஹி எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்!

பீகாரில் காங்கிரஸ் முகத்தில் கரி பூசிய லாலுவின் ஆதரவு தேர்தலுக்கு பிறகு தேவைப்பட்டால் இல்லை இல்லை நாங்க மானஸ்தனுங்க உங்க ஆதரவு வேண்டாம் என்று கேட்காமல் இருந்துடுவீங்களா? இதோ உங்கள் கடைசி வரியும் அப்படிதானே சொல்கிறது திரும்ப வாங்க ஏத்துப்போம் என்று! அவர் அவரோட கொள்கையில் உறுதியாக இருக்கிறார் மாம்ஸ் ஒரு முறை இருந்த கூட்டணியில் அடுத்த முறை இருப்பது இல்லை என்று!:))

said...

சில ஸ்லாப் ஸ்டிக் காமெடி சீரியல்களில்,பார்வையாளர்கள் இந்த இடத்தில் சிரிக்க வேண்டும் என்பதற்க்கும், ஒரு effectக்கும் அந்த சிரிப்பொலிவந்துக் கொண்டேயிருக்கும்.
சில சமயம் “கொல்” சில சமயம் “ஹிஹிஹிஹி”சில சமயம் ‘ஹாஹா
ஹாஹா” மற்றும் “ஒஹோஒஹோ”.


இந்த தேர்தல் கூட்டணிப் பேச்சு
ஸ்லாப் ஸ்டிக் காமெடி இந்தியா முழுவதும் பல கட்சிகளுக்கிடயே நடந்துக் கொண்டிருந்த போது பார்வையாளர்கள், background சிரிப்பு வேண்டாம் நாஙகளே சிரித்துக் கொள்கிறேம் என்று கேட்டுக் கொண்டார்கள்.

said...

தம்பீ..

என்னாச்சு..? ஏன் இப்படி? உன் சைட்டோட கலரே இப்படி மாறியிருக்கு..

என்னால நம்பவே முடியல.. நீயா இப்படி..?

பாசம் இருக்கலாம்.. ஆனா இந்த அளவுக்கா.?

ராமதாஸ் மட்டுமில்ல.. அத்தனை அரசியல்வியாதிகளும் இப்போதைக்கு கோமாளிகள்தான்..

said...

அரசியல் வியாபாரி என்ற பட்டத்தை காப்பாற்றிவிட்டார் அய்யா, வாழ்க ஜனநாயகம்

said...

// கணேஷ் said...
அரசியல் வியாபாரி என்ற பட்டத்தை காப்பாற்றிவிட்டார் அய்யா, வாழ்க ஜனநாயகம்

March 28, 2009 2:38 PM //


இப்போ இருக்கிற அரசியல்வாதிகளில் யார் வியாபாரி இல்லைன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?

நான் டாக்டருக்கு வக்காலத்து வாங்கலை - எல்லாருமே அப்படித்தான் இருக்கிராங்கனு சொல்ல வரேன். ஆனா, டாக்டர மட்டும் தாக்குறாங்க.