காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Monday, March 30, 2009

யாரிந்த வைகோ @ வைகோயபல்ஸ்

யாரிந்த வைகோ? எவ்வளவு நல்லவர்? எந்த அளவு உண்மையானவர்? எந்த அளவு மற்ற அரசியல்வாதிகளை விட மேன்மையானவர்? பார்த்துவிடுவோம்.

இப்போது ஈழப் பிரச்சனையில் காங்கிரஸ் மீது பொய்க் குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கிறாரே , இவர் 2007 வரை காங்கிரஸ் கூட்டணியில் தான் அங்கம் வகித்தார். அப்போது ஈழப் பிரச்சனை இல்லையா? இவர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது ஈழத்தமிழருக்கு செய்தது என்ன? துரோகத்தைத் தவிர. அப்போது இவர் கட்சிக்கு 4 எம்பிக்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு பேபினட் மந்திரி பதவியும் இன்னொருவருக்கு இணை மந்திரிப் பதவியும் கொடுக்க காங்கிரஸ் தயாராய் இருந்தது. ஆனால் இவர் என்ன செய்தார்?. அமைச்சரவையில் இடம் வேண்டாம். வெளியிலிருந்தே ஆதரவு தருகிறோம் என்று சொன்னார்.

ஏன்?

தனக்கு கிடைக்காத அந்த அமைச்சர் பதவிகள் தன் கட்சியின் இரண்டாம் மட்டத் தலவர்களுக்குக் கிடைத்தால் தேசிய அளவில் அவர்கள் செல்வாக்குத் தன்னைவிட உயர்ந்துவிடும் என்ற பொறாமையும் வயித்தெரிச்சலும் தான். இந்த சரிவாதிகார மனப்பான்மை தான் செஞ்சி ராமச்சந்திரன், கணேசனில் ஆரம்பித்து இப்போது கண்ணப்பன் , கம்பம் ராமகிருஷ்ணன் என்று தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நட்களில் அவர் மட்டுமே கட்சியில் இருப்பார். இது இவர் கட்சிக்கு?! ஏற்பட்ட இழப்பு. இதை விடுவோம்.

ஆனால் ஈழத் தமிழருக்காக தான் மட்டுமே போராடுவதாக ஊரை ஏமாற்றுகிறாரே. அந்த ஈழ மக்களுக்கு இவர் செயலால் என்ன இழப்பு என்று பார்ப்போம்.

அன்று காங்கிரஸ் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கும். அப்போது வெளியுறவு அல்லது பாதுகாப்பு ஆகியவற்றில் ஒன்றை கேட்டிருக்கலாம். குறைந்த பட்சம் இவைகளின் இணை அமைச்சர் பதவியாவது கிடைத்திருக்கும். அல்லது வேறு துறையின் அமைச்சர் பதவிகள் கிடைத்திருந்தாலும் அதை வைத்து வெளியுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுக்களில் இடம் கிடைத்திருக்கும். அதை வைத்து அமைச்சரவைக் கூட்டங்களின் போதெல்லாம் ஈழப் பிரச்சனையை அந்த மக்கள் சிங்கள இன வெறி அரசால் படும் துயரங்களை எழுப்பி இருக்கலாம். அமைச்சரவையின் மற்ற சகாக்களுக்கும் புரியவைத்து இது விடுதலைப் புலிகள் பிரச்சனை மட்டுமில்லை அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களும் அடங்கி இருக்கு என புரிய வைத்திருக்கலாம். இவர்கள் தானே ஈழ மக்களின் ஒரே பாதுகாவலன் என்பது போல் நடிக்கிறார்கள் . அதனால் இவர்களை சொல்கிறேன்.

இந்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் வேண்டுமென்றே விட்டுவிட்டு இப்போது காங்கிரஸ் அரசாங்கத்தை குறை சொல்லிக் கொண்டிருக்கிரார்.

இவர் கட்சி எம்பிக்களையும் காட்டி திமுக அமைச்சர் பதவிகள் பெற்றுக் கொண்டது என சொல்லி அகில இந்தியாவையும் சிரிப்பு மூட்டினார். :)) . இவர் கட்சி எம்பிக்கள் என்ன பெட்டியில் அடைத்து வைத்த ஆப்பிளா? லேபிள் மாத்தி ஒட்டிக் கொள்ள? :)

சரி , இவர் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தாரே .. அதற்கு காரணம் என்ன? ஈழத் தமிழரை அழிக்க காங்கிரஸ் அரசு ஆயுதம் கொடுக்கிறது என்று பொய்க் குற்றசாட்டு சுமத்தியா? இல்லவே இல்லை. கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் இறுதியாகக் கேட்ட 23 தொகுதிகளை( முதலில் 25 கேட்டார்) தரமுடியாது என்று சொல்லி திமுக அவருக்கு 22 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. இதனால் காலையில் திமுகவுடன் பேரம் பேசிவிட்டு அந்த ஒரு சீட்டுக்காக அன்று மாலையே அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆகவே அவர் அப்போதும் காங்கிரஸ் மீது எந்த பொய்க் குற்றச்சாட்டும் சுமத்தவில்லை. அவர் பிரச்சனை வெறும் ஒரு தொகுதி தான். அவ்வளவு பெரிய கொள்கை திலகம் இந்த வைகோ.

இது வரை தாவல் ஸ்பெஷலிஸ்டான பாமக கூட காலையில் பேரம் பேசிவிட்டு படியாமல் மாலையில் எதிர் முகாம் போனதில்லை. முன் கூட்டியே அதற்கான வேலைகளை எல்லாம் செய்துவிட்டு தான் எதிர் முகாம் போவார் மருத்துவர் ஐயா. ஆனால் இந்த கொளகைப் புயல் வைகோ ஒரு சீட்டுக்காம 10 மணி நேரத்தில் கூட்டணி மாறியவர். அப்போதெல்லாம் அவர் ஈழ மக்களைப் பற்றி யோசித்ததே இல்லை.

பிறகு தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தான் கடந்த ஓராண்டாக தான் மத்திய அரசின் மீது குறைகள் எதுவும் இல்லாததால் காங்கிரஸ் மீது பொய்க் குற்றசாட்டு சுமத்திக் கொண்டிருக்கிறார். அதென்ன பொய்க் குற்றசாட்டு?

பின்னே? கொடுக்காத ஆயுதத்தை இலங்கைக்கு கொடுபப்தாக சொல்வது பொய் தானே. ப்ரணாப் முகர்ஜி, அந்தோணி மற்றும் சிதம்பரம் என சொல்ல வேண்டிய அனைவரும் சொல்லிவிட்டார்கள், இலங்கைக்கு ஆயுத உதவி எதுவும் வழங்கவில்லை என்று. அப்போதும் நம்பாமல் குற்றம் சுமத்துவது பொய் தானே. சமீபத்தில் கடர்படைத் தளபதியும் சொல்லி இருக்கிறார் ஆயுத உதவி எதுவும் செய்யவில்லை என்று. அப்படி செய்தால் யாருக்கு பயந்து மறைக்க வேண்டும். இதில் இந்திய ராணுவத்தினர் இலங்கைப் போரில் பங்கேற்பதாக தகவல்கள் என்று தினமும் பித்தலாட்ட பதிவுகள் வேறு. இதுவரை யாரும் அதற்கு ஆதாரம் தரவில்லை. உண்மை இருந்தால் தானே. யாரிடமோ எதையோ வாங்கிக் கொண்டு இப்படி விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் இணையத்தில்.

கீழே இருக்கும் படத்தை பெரிது பண்ணி பார்க்கவும்..( தி சண்டே இண்டியன் இந்த வார இதழ்)
இலங்கை ராணுவம் பயன்படுத்துவது சீனாவின் டி56 ரக துப்பாக்கிகள் தான். இந்தியா தன் ஆயுதங்களை இலங்கைக்கு விற்கவில்லை என்பது இதில் தெரிகிறது.

புலிகளின் தாக்குதலில் இந்திய ராடார் தொழில்நுட்ப இஞ்சினியர்கள் காயம் பட்டார்களே என்கிறார் வைகோ. ”ராடார்” என்பது ஆயுதம் இல்லை என்பதை யாராவது அவருக்கு புரியவைத்தால் நல்லது. அது ஒரு கண்காணிப்புக் கருவி. விடுதலை புலிகள் விமானத்தாக்குதலுக்கு வாய்ப்புகள் இருப்பதால் இலங்கைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அதை வைத்து தமிழர்களை ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் சொல்லப் போனால் அது தற்காப்பிற்கே.

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தின் மீது என்ன கரிசனம்? எதற்கு ராடார் தர வேண்டும்? என்று கேட்கலாம்.

எல்லாம் சுயநலம் தான். இதைக் கொடுத்தால் ராடாரை வைத்து தமிழ்மக்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது ஒரு காரணம். இன்னொன்று இந்தியப் பாதுகாப்பு தொடர்புடையது. நாம் கொடுக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அல்லது சீனா கொடுத்திருக்கும். டயலாகை மாத்துடா டேய்ன்னு சொல்றது புரியுது. ஆனால் இது வெறும் டயலாக் இல்லை. பாகிஸ்தானோ சீனாவோ ராடார் வழங்கி இருந்தால் அதை பயன்படுத்தவும் பயிற்சிக் கொடுக்கவும் கூடவே ஆட்களை அனுப்பி இருப்பார்கள். அதை வைத்து இந்தியாவைக் கண்காணித்திருப்பார்கள். மும்பை தாஜ் மற்றும் ட்ரைடண்டில் நடந்த தாக்குதல் சென்னையின் கன்னிமாராவிலோ, லீ மெரிடியனிலோ நடந்திருக்கும். ஆகவே ராடார்கள்க் கொடுத்ததால் ஈழத் தமிழருக்கும் பாதிப்பில்லை. இந்தியாவுக்கும் புதிய பகுதியிலிருந்து ஆபத்தில்லாமல் பார்த்துக் கொள்ள முடிகிறது.

மேலும், சண்டைன்னா சட்டை கிழியத் தான் செய்யும். சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்குன்னு வடிவேலு காமெடி பண்ண மாதிரி , போர் நடந்தால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள். இது எல்லா இடத்திலும் இருப்பது தான் என்று ஈழத் தமிழரின் படுகொலைகளை காங்கிரஸ் கொச்சைப் படுத்தவில்லை. அப்படி சொன்ன புரட்சித்தலைவியுடன் தான் ஈழ மக்களின் தோழனாக நடிக்கும் வைகோ ஓட்டுககாக கூட்டு வைத்திருக்கிறார்.

இவர் தான் வைகோ என்று நியூமராலஜி பார்த்து பெயர் வைத்துக் கொண்ட பகுத்தறிவுவாதி வையாபுரி கோபால்சாமி. 2 எம்பிக்களும் 2 எம்எல்ஏக்களும் இவரை விட்டுப் போனதும் இன்றி தன் உரிமையான திருமங்கலைத்தையும் அம்மாவிடம் இழந்து கூனி குறுகி நின்ற தன்மானச் சிங்கம் வைகோ அவர்கள்.

இவர் போன்ற வேஷதாரிகளை மக்கள் நிச்சயம் அடையாளம் கொள்வர். காங்கிரஸ் + திமுக கூட்டணி ஈழத் தமிழருக்கு எதிரானவர்கள் இல்லை என்பதையும் புரிந்துக் கொள்வர். அப்படி எதிரானவர்களாக இருந்தால் திருமாவளவன் சேர்ந்திருக்க மாட்டாரே.

படம் நன்றி : தி சண்டே இண்டியன் மின்னிதழ்.

32 comments:

said...

சஞ்ஜெய் சார்,

வைகோ மட்டுமல்ல யாரும் யாரையும் குறைச் சொல்ல காங்கிரஸ் உட்பட எந்த அரசியல் கட்சிகளுக்கும் அருகதை இல்லை.

அம்மா பின்னாடி போன தமிழக காங்கிரஸ்காரர்களாலும், காங்கிரஸ் தலைமையின் ஆளுமை வெறியினாலும் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிர்ஸ் ஏற்பட்டதை நினைத்துப் பாருங்கள்.

பல்டிகள் என்பது தேர்தல் கால கட்டாயம், இதைச் செய்யாத கட்சிகளே இல்லை.

said...

வைகோவை தமிழக காங்கிரஸ் தலைவர் பழனியாண்டியில் இருந்து, எம்.பி சுப்பிரமணியம், மூப்பனார், வாழப்பாடி, தங்கபாலு, இ.வி.கே. எஸ்.இளங்கோவன், சோ.பா, கிருஷ்ணசாமி இவர்களோடு ஒப்பிட முடியுமா சஞ்சய்?!

said...

//வைகோவை தமிழக காங்கிரஸ் தலைவர் பழனியாண்டியில் இருந்து, எம்.பி சுப்பிரமணியம், மூப்பனார், வாழப்பாடி, தங்கபாலு, இ.வி.கே. எஸ்.இளங்கோவன், சோ.பா, கிருஷ்ணசாமி இவர்களோடு ஒப்பிட முடியுமா சஞ்சய்?//

நிச்சயம் முடியாது ஜோதி சார். வைகோவுடன் ஒப்பிட இனி ஒருவர் பிறந்தால் தான் உண்டு.

said...

ஒரே துறையை சேர்ந்தவர்களை ஒப்பீடு செய்வது இயல்புதானே சஞ்சய்?
இவர்களின் அரசியல் செயல்பாடுகளை வைகோவின் அரசியல் செயல்பாடுகளோடு ஒப்பிடலாமே?!

said...

கோவி கண்ணன் சார்,
ஜெயலைதாவுடன் கூட்டணி வைத்தது அப்போது பெரும்பான்மை தொண்டர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் தொண்டர்களின் வேண்டுகோளுக்காக தான் தமாகா உதயமானது. இதில் என்ன அதிகார வெறி இருக்கு?

அண்ணா, வைகோ, எம்ஜிஆர் என பலரும் இப்படி ஒரு இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள் தானே. அதெல்லாம் அதிகார வெறி என்று எப்போதாவது விமர்சித்திருக்கிறீர்களா?

ஜெ வை நடுத்தெருவில் வைத்து சுட வெண்டும் என்று சொன்னவர் தான் வைகோ. ஜெ தான் வைகோவை பொடாவில் உள்ளே தள்ளினார். இப்போ இவர் ஜெ காலில் தானே விழுந்து கிடக்கிறார். திருமாவளவன் , காங்கிரசை அழிப்பதே லட்சியம் என்றார். இப்போதே அதே காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறார். இதெல்லாம் அதிகார வெறி இல்லையா? எல்லா அரசியல்வாதிகளும் ஒரே மாதிரி தான் என்கிற போது ஏன் வைகோ போன்ற சிலரை மட்டும் சிலர் புனித பசுக்களாக சித்தரிக்கிறார்கள்.

அவர்களுக்காகத் தான் இந்த பதிவு.

said...

//ஒரே துறையை சேர்ந்தவர்களை ஒப்பீடு செய்வது இயல்புதானே சஞ்சய்?//

நிச்சயமாக ஒப்பிடலாம். அது தான் இயல்பு.

//இவர்களின் அரசியல் செயல்பாடுகளை வைகோவின் அரசியல் செயல்பாடுகளோடு ஒப்பிடலாமே?!//

வைகோ, நீங்கள் சொன்ன காங்கிரஸ் தலைவர்களை விட எந்த விதத்தில் உயர்ந்தவர் என்று சொல்ல் முடியுமா ஜோதி சார்?

said...

நீங்கள் தான் வைகோவைப் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். காங்கிரசை தற்காக்கிறீர்கள்!
நீங்கள் தான் ஒப்பீடு செய்ய வேண்டும்.

//இவர் ஜெ காலில் தானே விழுந்து கிடக்கிறார்//

அப்ப அதிமுக வோட கூட்டணி வைத்த மூப்பனார், வாசன், வாழப்பாடி, தங்கபாலு எல்லோரும் ஜெயலலிதா காலில் விழுந்து கிடந்ததாக ஒப்புக் கொள்கிறீர்களா?

said...

ஜோதி சார்,

வைகோ 2 விஷயங்களுக்காகத் தான் சிலரால் மெச்சப்படுகிறார். ஒன்று தீவிர விடுதலைப் புலிகள் விசுவாசி. இரண்டு தன்மானம் மிக்கவர்.

ஜெ, விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்ப்பவர். பிரபாகரணை கைது செய்ய வேண்டும் என சட்ட சபையில் தீர்மானமே நிறைவேற்றினார். அதோடு இல்லாமல் போர் என்றால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்றார். இதை அவர் பாலஸ்தீன விஷயத்தில் சொல்லவில்லை. ஆகவே ஜெ, ஈழத்தமிழருக்கும் எதிரானவர்.

அடுத்து, திருமங்கலம் இடைத்தேர்தலிம் மதிமுகவின் தொகுதியஒ பறித்துக் கொண்டார். தன்மான சிங்க என்ன செய்தது அப்போ?

ஆகவே இவரது முக்கியமான செயல்பாடுகளாக கருதப் படும் விஷயத்தில் இவர் தனக்கு நேரெதிர் கொள்கை உடையவரிடம் கூட்டணி வைத்திருக்கிறார். எதற்காக இவை எல்லாம்?

பொதுக் குழுவில் வாக்கெடுப்பு நடத்தில 24 மணி நேரத்தில் ராமதாஸ் தனக்கான தொகுதிகளை பெற்றுக் கொண்டார். உற்ற தோழனாக கொள்கை, தமானம் எல்லாம் விட்டும் போயஸ் தோட்டத்திலேயே வலம் வரும் வைகோ இன்று வரை தனக்கான தொகுதிகளை பெறமுடியவில்லை. இதெல்லாம் எதை காட்டுகிறது? காலில் விழுந்துக் கிடப்பதைத் தானே?

காங்கிரஸ் வைகோவைப் போல் இல்லாததால் தானே தமாக உதயமானது. வைகோ அளவுக்கு தரம் தாழ்ந்த அரசியல்வாதி இந்திய அரசியலிலேயே கிடையாது.

( மற்ற விவாதங்களை மாலையில் வைத்துக் கொள்வோம். இப்போது எனக்கு நேரமில்லை. உங்கள் கருத்துக் களை சொல்லுங்கள். மாலையில் பப்ளிஷ் செய்கிறேன். )

said...

////காங்கிரசில் இருப்பதே பெருமை..காங்கிரசை வளர்ப்பதே கடமை////

இந்த காமெடி கொஞ்ச நாளாவே நடந்திட்டு இருக்கா? நான் கவனிக்கவே இல்லையே! நல்லது! புக் மார்க் பண்ணியாச்சு!

////இப்போது ஈழப் பிரச்சனையில் காங்கிரஸ் மீது பொய்க் குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கிறாரே////

ஆமாம்! வைகோ வாயைத்திறந்தாலே பொய்தான் பேசுவார். அதுக்கெல்லாம் மன்மோகன் சிங் மாதிரி வாயைத்திறக்காமல் இருக்க வேண்டும்.

///இவர் 2007 வரை காங்கிரஸ் கூட்டணியில் தான் அங்கம் வகித்தார். அப்போது ஈழப் பிரச்சனை இல்லையா?///

அதுதான் நாற்பது வருசமா இருக்கே! அப்போதெல்லாம் காங்கிரஸ் ஆயுதம் கொடுக்காமலிருந்தது! இப்போது கொடுத்துக்கொண்டு இல்லை. (ஏதாவது புரிந்ததா?!!?)

////இவர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது ஈழத்தமிழருக்கு செய்தது என்ன? துரோகத்தைத் தவிர////

தமிழருக்கு துரோகம் செய்யாத கட்சி எது? காங்கிரசை தவிர!!!

///தனக்கு கிடைக்காத அந்த அமைச்சர் பதவிகள் தன் கட்சியின் இரண்டாம் மட்டத் தலவர்களுக்குக் கிடைத்தால் தேசிய அளவில் அவர்கள் செல்வாக்குத் தன்னைவிட உயர்ந்துவிடும் என்ற பொறாமையும் வயித்தெரிச்சலும் தான்.////

வைகோவோட கொலோநோஸ்கோப்பி ரிபோர்ட் வச்சிருக்கிறீர்களா? உறுதியாச்சொல்றீங்க!

/////இந்த சரிவாதிகார மனப்பான்மை தான் செஞ்சி ராமச்சந்திரன், கணேசனில் ஆரம்பித்து இப்போது கண்ணப்பன் , கம்பம் ராமகிருஷ்ணன் என்று தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நட்களில் அவர் மட்டுமே கட்சியில் இருப்பார்.////

சோனியா, மன்மோகன் சிங், பிரணாப், ராகுல், தங்கபாலு, இளங்கோவன், ஞானசேகரன், ஹசன் அலி, சஞ்சய் காந்தி, ...அப்புறம் இன்னும் மீதமுள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் பதிமூன்று பேரின் பெயர் மறந்துவிட்டது. ஞாபகத்திற்கு வந்ததும் பின்னூட்டுகிறேன்!

///ஆனால் ஈழத் தமிழருக்காக தான் மட்டுமே போராடுவதாக ஊரை ஏமாற்றுகிறாரே.///

காங்கிரசின் ஈழ ஆதரவு அறப்போராட்டத்தை இருட்டடிப்பு செய்வது ஏற்றுக்கொள்ளவே முடியாது!

////அப்போது வெளியுறவு அல்லது பாதுகாப்பு ஆகியவற்றில் ஒன்றை கேட்டிருக்கலாம். ////

பிரணாப் முகர்ஜியும் நட்வர்சிங்கும் தாங்கள் வகிக்கும் பதவியைத்தான் வைகோவிற்கு தரவேண்டும் என்று பாராளுமன்ற வளாகத்தில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். இரக்கமற்ற வைகோ இருபதவிகளையும் மறுத்துவிட்டார்.

////அதை வைத்து வெளியுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுக்களில் இடம் கிடைத்திருக்கும்///

ஆமாம், ஃபிளைட்டில் ஃப்ரீயாக டிக்கெட் கிடைத்திருக்கும், யாழ்ப்பாணத்தை சுற்றிப் பார்த்திருக்கலாம். எத்தனைநாள் தான் கள்ளத்தோணி பிரயாணம் செய்வது!!

////அதை வைத்து அமைச்சரவைக் கூட்டங்களின் போதெல்லாம் ஈழப் பிரச்சனையை அந்த மக்கள் சிங்கள இன வெறி அரசால் படும் துயரங்களை எழுப்பி இருக்கலாம்.////

இப்போது அலாரம் வைத்து எழுப்ப ஆள் இல்லாமல்தான் காங்கிரஸ் தூங்குகிறது. கூடவே தூக்கத்தில நடக்கிற வியாதி வேற காங்கிரசுக்கு இருக்கே! தூக்கத்துல நடந்துபோய் ஆயுதம் குத்துட்டு வரதையாவது வைகோ தடுத்திருக்கலாம்.

////இது விடுதலைப் புலிகள் பிரச்சனை மட்டுமில்லை அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களும் அடங்கி இருக்கு////

எனக்குத் தெரிந்து இதை புரிந்துகொண்ட ஒரே காங்கிரஸ் காரர் நீங்கள் தான். பாராட்டுக்கள்.

///இவர் கட்சி எம்பிக்களையும் காட்டி திமுக அமைச்சர் பதவிகள் பெற்றுக் கொண்டது என சொல்லி அகில இந்தியாவையும் சிரிப்பு மூட்டினார். :))////

செம காமெடி அது! ஆனா நெசமாலும் நடந்த காமெடிதான் அது.

////எம்பிக்கள் என்ன பெட்டியில் அடைத்து வைத்த ஆப்பிளா? லேபிள் மாத்தி ஒட்டிக் கொள்ள? :)////

லேபிளை ஒட்டினவர் உங்ககூடதான் இருக்கார். அவரையே கேளுங்க!! அப்புறம் இந்த உண்மை மேட்டரை கசியவிட்டதே காங்கிரஸ் காரர்கள் தான் என்று பேசிக்கிறார்களே, அது எந்த கோஷ்டி என்று விசாரியுங்கள்!!!

////அதற்கு காரணம் என்ன? ஈழத் தமிழரை அழிக்க காங்கிரஸ் அரசு ஆயுதம் கொடுக்கிறது என்று பொய்க் குற்றசாட்டு சுமத்தியா?////

அப்பெல்லாம் இந்த உண்மை கான்கிரச்காரர்களுக்கே தெரியாது. நாரயனங்களுக்கு மட்டும்தான் தெரியும். வைகோவுக்கு எப்படி தெரியும்?

////கொடுக்காத ஆயுதத்தை இலங்கைக்கு கொடுபப்தாக சொல்வது பொய் தானே.////

கொடுக்கிற ஆயுதங்களை பட்டியலிட்டு சொன்னால்தானே உண்மை. கொடுக்காத ஆயுதங்களையெல்லாம் சொன்னால் அது பொய்தானே! உதாரணமாக ஃபொபர்ஸ் பீரங்கி என்று சொன்னால், அது கொடுக்கின்ற ஆயுதம், அதில் உண்மை இருக்கிறது. மிக்-2 கொடுக்காத ஆயுதம். அதையெல்லாம் கொடுப்பதாக சொன்னால் பொய்தானே! வைகோ இனிமேலாவது உண்மை பேசவேண்டும்.!!

///ப்ரணாப் முகர்ஜி, அந்தோணி மற்றும் சிதம்பரம் என சொல்ல வேண்டிய அனைவரும் சொல்லிவிட்டார்கள், இலங்கைக்கு ஆயுத உதவி எதுவும் வழங்கவில்லை என்று. அப்போதும் நம்பாமல் குற்றம் சுமத்துவது பொய் தானே////

இதற்குபிறகும் நம்பமறுப்பது கயமைத்தனம். ஆனால் ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டு சொல்லியிருந்தால் ஒருவேளை நம்பியிருப்பாரோ இந்த வைகோ! யோசிக்கவேண்டிய விஷயம்தான்.

////அப்படி செய்தால் யாருக்கு பயந்து மறைக்க வேண்டும்.////

வேற யாருக்கு! ஒட்டுபோடரானே அந்த மடப்பயளுக்குத்தான்!

////இதில் இந்திய ராணுவத்தினர் இலங்கைப் போரில் பங்கேற்பதாக தகவல்கள் என்று தினமும் பித்தலாட்ட பதிவுகள் வேறு////

பதிவு நல்லா காமெடியாதான் போய்கிட்டு இருந்தது! இப்பபோய் ஏன் சீரியஸ்.

///இதுவரை யாரும் அதற்கு ஆதாரம் தரவில்லை.///

அது ஒன்னும் இல்லை. ஆதாரத்தை எல்லாம் நார்மல் போஸ்ட்ல அனுப்பி இருக்காங்க. அது கொஞ்சம் லேட்டாத்தான் வரும். அடுத்தவாட்டி ஸ்பீட் போஸ்ட்ல அனுப்புவாங்க, கவலைப் படாதீங்க!!!

////இந்தியா தன் ஆயுதங்களை இலங்கைக்கு விற்கவில்லை என்பது இதில் தெரிகிறது.///

காசு வாங்கினாத்தான் அது விற்பனை. ஓசியில குடுத்தா அது உதவி. உதவுவதற்கு பதிலா, விற்றிருக்கலாம், வருமானமாவது வந்திருக்கும்.

///அது ஒரு கண்காணிப்புக் கருவி. விடுதலை புலிகள் விமானத்தாக்குதலுக்கு வாய்ப்புகள் இருப்பதால் இலங்கைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அதை வைத்து தமிழர்களை ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் சொல்லப் போனால் அது தற்காப்பிற்கே.////

ஆமாம்!! புலிகள் விமானத்தை மட்டும்தான் அது வேவு பார்க்கும். சிங்கள விமானம் குண்டு போட புறப்பாட்டுசென்றால் தமிழர்கள் மீது குண்டுபோட உதவுவதற்கு பதிலாக சிங்களர்கள் மீது குண்டு போட வழிகாட்டும் படி அதில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.

///எல்லாம் சுயநலம் தான். இதைக் கொடுத்தால் ராடாரை வைத்து தமிழ்மக்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது ஒரு காரணம்////

மேலும், தமிழர்கள் தற்கொலை செய்துகொள்ளுவதை தடுக்கும் விதமாக அதில் புரகிராம் செய்யப்பட்டிருப்பதும் ஒருகாரணம்.

////கன்னிமாராவிலோ, லீ மெரிடியனிலோ நடந்திருக்கும்///

புரிகிறதா இப்போது! தவுசண்ட் லைட் தமிழரையும், கிண்டி தமிழரையும் பாதுகாக்கத்தான் ராடார் கொடுக்கப்பட்டுள்ளது.

////இவர் தான் வைகோ என்று நியூமராலஜி பார்த்து பெயர் வைத்துக் கொண்ட பகுத்தறிவுவாதி வையாபுரி கோபால்சாமி./////

இது அவதூறு! அவரது பகுத்தறிவை சந்தேகப்பட வேற பாயிண்ட்டை பிடியுங்கள். பிளீஸ்.

////அப்படி எதிரானவர்களாக இருந்தால் திருமாவளவன் சேர்ந்திருக்க மாட்டாரே.///

ஹையா!!! ஜாலி!! திருமா டவுசர கிழிச்சாச்சு!!!

said...

மோகன், ஐ லைக் இட்.. :))

அடிக்கடி வாங்க.. ஒரு ஊர்க்காரங்களா வேற போய்ட்டோம். :)

( அந்த முதல் பத்தியை மட்டும் தவிர்த்திருக்கலாம்.. தனி ஆளாக இருந்தும் கட்சி என்று சொல்லி, யாரை அழிப்பேன் என்றாரோ அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வர பாடுபடும் திருமாவளவனுக்கெல்லாம் நீங்க முட்டுக் குடுக்கும் போது 16 தொகுதிகள் வாங்குமளவு பலம் உள்ள நாங்கள் பெருமை படுவதில் தவறில்லையே. :)) )

said...

//செம காமெடி அது! ஆனா நெசமாலும் நடந்த காமெடிதான் அது.

//

மோகன் அண்ணே அது பொய் என கலைஞர் பலமுறை நிரூபித்தும் நீங்க விடமாட்டேங்குறீங்களே :)

said...

யோவ் மாப்ள சஞ்சய்,

பாவம்யா கோபாலு...அந்தாள நாங்க படுத்துறது பத்தாதுன்னு நீங்க வேறயா??

said...

லிகளுடனான போருக்கு பின்னால் இந்தியாவே நின்றது சிங்கள அமைச்சர் கருத்து !

புலிகளுடனான போரில் தாம் வெற்றிபெற இந்திய அரசின் ஆதரவே காரணம் என்று சிறீலங்கா அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவின் உதவி இல்லாவிட்டால் இந்தப் போரில் வெற்றிபெற்றிருக்க தம்மால் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிங்களக் கட்சிகள் அனைத்தும் சகல வேறுபாடுகளையும் மறந்து இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

said...

அப்துல் மாம்ஸ், இவரு ரொம்ப நல்லவரு மாதிர்யும் இவர் தான் ஈழ மக்களின் ஒரே ஆதரவ்ங்கற மாதிரியும் ரொம்ப நடிக்கிறார் மாம்ஸ். அட அது கூட பரவால்லா.. அவரும் வயித்துப் பொழப்ப பாக்கனும்ல.. ஆனால் இந்த இணைய பக்தர்கள் தொல்லை தாங்கலை மாமா. பிரபாகரனை விட இவருக்கும் இன்னொரு தன்மன சிறுத்தை திருமாவளவனுக்கும் தான் அதிகமா முட்டுக் குடுக்கிறாங்க.


2 நாள் முன்னாடி உங்க தலைவர் கவுஜ எழுதி இருக்கார் படிச்சிங்களா? வைகோ அண்ணன் அப்போவே பதவிக்கும் அலைஞ்சி இருக்கார். ஆனா மத்தவங்க எல்லாம் சாக்கடை அரையல்வாதிகள். இவர் மட்டும் தான் புனித பசுவாம்.. என்னக் கொடுமை .. இப்போவரைக்கும் இந்த தன்மான புலிக்கு அம்மா ஒன்னும் குடுக்கலை. :)

செம டமாஷா இல்ல. ;))

said...

சாத்திரி, இப்போல்லாம் இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் பேசறது எல்லாம் வேத வாக்கா தெரியுது போல. பெரிய மாற்றம் தான். அவர்கள் பேசிய மற்ற விவரங்களையும் தரவா? அவைகளையும் உண்மை என்று ஒத்துக் கொள்ள தயாரா?

இப்போது இந்தியாவைப் பற்றி அவர்கள் சொன்னது உண்மை எனில், புலிகளைப் பற்றி சொன்ன அனைத்துமே , அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என சொன்ன அனைத்துமே நிஜம் தான் என ஒத்துக் கொள்ளத் தயாரா சாத்திரி?

said...

*****
இப்போது இந்தியாவைப் பற்றி அவர்கள் சொன்னது உண்மை எனில், புலிகளைப் பற்றி சொன்ன அனைத்துமே , அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என சொன்ன அனைத்துமே நிஜம் தான் என ஒத்துக் கொள்ளத் தயாரா சாத்திரி?
*****

தமிழகத்துல உள்ள ஒரு அரசியல்வாதிக்கும் ஈழ பிரச்சனை பத்தி பேச துப்பு இல்லைன்னு சொன்னா அது ஓகே. ஆனா நீங்க சாத்திரிக்கு கொடுத்து இருக்கற பதில் ஓவரு.

இலங்கை அரசாங்கம் புலிகள் பத்தி தவறான செய்திகள் பிரசுரிக்க தேவை இருக்கு. ஆயுத உதவி கொடுக்காத இந்தியாவ, ஆயுத உதவி கொடுக்கறாங்கன்னு சொல்ல என்ன தேவை ? இத மட்டும் விளக்குங்க.
இந்த மாதிரி செய்தி இலங்கைல ஏன் சொல்றாங்கன்னு இந்திய அரசாங்கம் கேள்வி கேட்டாங்களா ?

said...

அடப் போங்கப்பா... நீங்களும் உங்க தேர்தல் கூத்துக்களும்....
"டார்வின்" சொன்னப்ப கூட நான் 100% நம்பல..'மனிதன் குரங்கிலிருந்து தோற்றம் பெற்றதை....'ஆனாலும் நம்மாளுக தாவல்/ பல்டி எல்லாம் பார்க்கையில் நம்புறேனுங்க. அதெல்லாம் விடுங்க சார்....காங்கிரஸ் ஈழத்தமிழர் விடயத்தில் நடந்து கொள்ளும் முறை சரியா???
சரி எனில் எப்படி???
தவறெனில்.. தமிழக காங்கிரஸ் மத்தியில் எவ்வாறு இப்பிரச்சனையை கையாள வேண்டுமென வற்புறுத்தி எவ்வளவு தூரம் வெற்றி கண்டது???
பதில் கட்டாயம் உங்களிடம் இருக்குமென நம்புகிறேன்.

(தயவு செய்து அமைதிவழியில் தீர்வு என சும்மா மட்டும் அறிக்கை விடாதீங்க...முடியல....)

said...

அப்பிடிவாங்க சஞ்சய். அப்போ அரசியல் வாதிகள் சொல்வது எல்லாமே பொய்தான் என்பதனை ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள்.

said...

சாத்திரி! சற்றே ஒதுங்க்யிரும் பிள்ளாய்! இது எங்க ஊர் விஷயமாக்கும்!

said...

சஞ்சய் மோகன் கந்ந்தசாமிக்கு ந்நீ பதில் சொல்கிறாயா நான் பதில் சொல்லட்டுமா இல்லை பதில் தெரிந்தும் தெரியாமல்நடிக்கிறாரா??

said...

நேரு
இந்திரா
ராஜிவ்
சோனியா
அடுத்து ராகுலா , பிரியங்காவா
பிரியங்கா மகள்

இந்த டெமாக்ரஸி சூப்பர் சஞ்சய். காங்கிரஸ்ல வேற ஆளேவா இல்லை. உடனே வேற கட்சிகளை கை காட்டவேண்டாம். சுய பரிசோதனைதான் முக்கியம்.

said...

திருமாவளவன் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவன்.அவரை மேலே கொண்டு வர நமக்கு மனமில்லை. என்ன செய்வார் ஜாதி ஆதிக்கமும் இல்லாமல் பணமும் இல்லாமல்.

ஒரு

பழணியாண்டி
பாரமலை,
கவிஞர் குடியரசு.
பங்காரு லெட்சுமண் மாதிரி இருக்க சொல்றீங்களா?

நான் அவரை மாயாவதி போல பார்க்க ஆசைப்படுகிறேன்.

said...

//அபி அப்பா said...

சஞ்சய் மோகன் கந்ந்தசாமிக்கு ந்நீ பதில் சொல்கிறாயா நான் பதில் சொல்லட்டுமா இல்லை பதில் தெரிந்தும் தெரியாமல்நடிக்கிறாரா??//

அவர் காங்கிரசை திட்டுவதில்லையாம். சும்மா டமாஷாம். அதனால் நான் மோகனை சீரியசாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. திமுகவைத் தான் திட்டுவாராம். அவர்கள் தான் கருத்து சுதந்திரம் கொடுத்திருக்கிறார்களாம்.

அவருக்கு என் பதில் அவ்வளவு தான். ஐ லைக் தட் காமெடி பின்னூட்டம். :)

நீங்களே சொல்லுங்க.

said...

///குடுகுடுப்பை said...
நேரு
இந்திரா
ராஜிவ்
சோனியா
அடுத்து ராகுலா , பிரியங்காவா
பிரியங்கா மகள்
இந்த டெமாக்ரஸி சூப்பர் சஞ்சய். காங்கிரஸ்ல வேற ஆளேவா இல்லை. உடனே வேற கட்சிகளை கை காட்டவேண்டாம். சுய பரிசோதனைதான் முக்கியம்.///

பாரத பிரதமர்கள் லிஸ்ட்டையும், காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்கள் லிஸ்டையும் கொஞ்சம் பார்த்துட்டு வாங்களேன்.

said...

sanjay சார்,
என்ன மொக்கையான பின்னூட்டங்களுக்குத்தான் பதில் தருவீகளோ??? அது சரி தமிழன் தான் தெளிவாக ஏதேனும் சொன்னா/கேட்டா புரியாத மாதிரி இருப்பாங்க என்பதை மறந்திட்டன்........

said...

குடுகுடுப்பை,
உங்கள் குடும்பத்தின் தலைவர் யார் என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர் இல்லை.

எங்கள் கட்சிக்கு யார் தலைவராக இருக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியதும் ஏற்றுக் கொள்ள வேண்டியதும் எங்கள் கட்சி விஷயம், அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப் படனும்?

said...

சாத்திரி,
நீங்கள் கொடுத்திருக்கும் இணையதளங்கள் எல்லாமே புலிகளின் ஜால்றாக்கள். அவர்களாக எதாவது எழுதிக் கொள்வதற்கெல்லாம் எபப்டி பதில் சொல்ல முடியும்?. இந்தியாவின் மீது பொய்க் குற்றம் சாட்டுவதைத் தவிர அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.அந்த அமைச்சர் அபப்டி சொன்னதாக நான் வேறு எந்த பத்திரிக்கையிலும் படிக்கவில்லை.

said...

பாரதி, நான் 24 மணி நேரமும் இணையத்தின் முன் தம் கிடக்கும் ஆள் இல்லை. நேரம் கிடைக்கும் போது முக்கியத்துவத்திற்கேற்ற மாதிரி ஒவ்வொன்றாக பதில் சொல்கிறேன். நீங்கள் தெளிவாக எதோ கேட்டிருப்பதாக சொல்வது மிகப் பெரும் நகைச்சுவை. :))

//காங்கிரஸ் ஈழத்தமிழர் விடயத்தில் நடந்து கொள்ளும் முறை சரியா???
சரி எனில் எப்படி???//

காங்கிரஸ் தவறாகவே நடந்துக் கொள்ளவில்லையே. வைகோ போன்றவர்கள் கலந்துக் கொள்ளாத அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துக் கொண்டு எம்பி பதவிகளை ராஜினாமா செய்ய சம்மத்தித்தார்களே அது தவறு என்கிறீர்களா?

ஈழத் தமிழருக்காக தமிழக முதல்வர் நிதி உதவிக் கோரியதற்காக கட்சி நிதியைக் கொடுத்தார்களே அது தவறா?

சமீபத்தின் ஈழத் தமிழருக்காக நிவாரணப் பொருட்கள் திரட்டினார்களே அது தவறா?

நீன்க்கள் எந்த முறையைக் கேட்கிறீர்கள் பாரதி.

இதைத் தான் தமிழன் தெளிவாக பேசுவதாக சொன்னீர்களா? :)

//தவறெனில்.. தமிழக காங்கிரஸ் மத்தியில் எவ்வாறு இப்பிரச்சனையை கையாள வேண்டுமென வற்புறுத்தி எவ்வளவு தூரம் வெற்றி கண்டது???
பதில் கட்டாயம் உங்களிடம் இருக்குமென நம்புகிறேன்.//

மற்றக் கட்சிகள் எவ்வளவு தூரம் வெற்றிக் கண்டதோ அதே அளவு தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

said...

//sanjay சார்,
என்ன மொக்கையான பின்னூட்டங்களுக்குத்தான் பதில் தருவீகளோ??? அது சரி தமிழன் தான் தெளிவாக ஏதேனும் சொன்னா/கேட்டா புரியாத மாதிரி இருப்பாங்க என்பதை மறந்திட்டன்......//

பாரதி காலையிலேயே நகைசசுவையா? இணையத்தில் காழ்ப்புணர்ச்சியிலும் கையாலாகாத் தனத்தாலும் காங்கிரசை அழித்தே ஆக வேண்டும் என்ற நிறைவேற்ற முடியாத ஆசையாலும் உளறுபவர்களை எல்லாம் படித்தால் இப்படி தான் , தன்னைத் தானே புத்திசாலி என நினைக்கத் தோன்றும்.

said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

குடுகுடுப்பை,
உங்கள் குடும்பத்தின் தலைவர் யார் என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர் இல்லை.

எங்கள் கட்சிக்கு யார் தலைவராக இருக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியதும் ஏற்றுக் கொள்ள வேண்டியதும் எங்கள் கட்சி விஷயம், அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப் படனும்?
//

ஏனென்றால் இந்தியாவில் வலிமையான் உண்மையான் ஜனநாயகம் வேண்டும் என ஆசைப்படுவன் நான். யோசிக்கதான் செய்வேன். காங்கிரஸோ அல்லது பாஜக கூட்டனியோதான் நாட்டை ஆளப்போகிறது. அதில் நானும் ஒருவன் ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் குடும்ப ஆட்சிகள் வித்தியாசம் எதையும் தரப்போவதில்லை. நரசிம்மராவ் தந்த வித்தியாசம்தான் இதற்கு சாட்சி.

said...

குடுகுடுப்பை: வி.பி.சிங் ஏற்படுத்திய பின்விளைவுகள்.

இதையும் பாருங்கள்.

said...

//ஏனென்றால் இந்தியாவில் வலிமையான் உண்மையான் ஜனநாயகம் வேண்டும் என ஆசைப்படுவன் நான். யோசிக்கதான் செய்வேன். காங்கிரஸோ அல்லது பாஜக கூட்டனியோதான் நாட்டை ஆளப்போகிறது. அதில் நானும் ஒருவன் ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் குடும்ப ஆட்சிகள் வித்தியாசம் எதையும் தரப்போவதில்லை. நரசிம்மராவ் தந்த வித்தியாசம்தான் இதற்கு சாட்சி.//

பெரும்பான்மை மக்கள் விருப்பம் எதுவோ அது தான் நடக்கும். உங்கள் கொள்கைகளை பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்ள செய்வதன் மூலம் மாற்றம் கொண்டு வாருங்கள்.

நரசிம்மராவ் , மன்மோகன் சிங் எல்லாம் எந்தக் கட்சி?

சோனியா தலைமை எற்றது தொண்டர்களின் வற்புறுத்தலால் தான். அவர் வராமல் இருந்தால் நிச்சயம் இன்று காங்கிரஸ் இருந்திருக்காது. ஆளாளுக்கு பங்கு பிரித்திருப்பார்கள். ராகும் இப்போது வரை காங்கிரசின் பொதுச் செயளாலர்களில் ஒருவர். அதுவும் இளைஞ்சர் மற்றும் மாணவர் காங்கிரஸ் பொறுப்பு தான். மற்ற தலைவர்கள் போல் எந்த மாநிலத்திர்கும் அல்ல. பிரியங்கா கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லை.

மன்மோகன் சிங் மருத்துவ மனையில் இருந்த போது ராகுல் தலைமை ஏற்கவில்லை. ப்ரணாப் மற்றும் அந்தோணி தான் அந்த பொறுப்பை செய்தார்கள்.

ராகுல் இப்போது வரை எம்பி தான். ஒரு இணை அமைச்சர் கூட இல்லை.

மீண்டும் சொல்கிறேன். எங்கள் கட்சியின் அடுத்த தலைவர் எங்கள் விருப்பத்திற்கேற்றவர் தான். உங்கள் விருப்பத்திற்கேற்றவர் அல்ல.


( மற்றவை இரவு.. இப்போது நேரமில்லை )